Category Archives: Think Invest

Calculating your Future Monthly Expense

 

Calculating your Future Monthly Expense:

உங்கள் வருங்கால/எதிர்கால செலவுகளை கணக்கிடுவது எப்படி ?

 

நமக்கு எல்லோருக்கும் தெரியும், நமது மாத செலவு எவ்வளவு என்று ; அல்லது போன மாதம் எவ்வளவு செலவானது என்று நம்மால் உறுதியாக இல்லாவிட்டாலும் உத்தேசமாக சொல்ல முடியும் 🙂

ஆனால் நமது இன்றைய மாத செலவு, 5 (அ) 10 வருடங்களுக்கு பின்பு எவ்வளவு தேவைப்படும் என்று நம்மால் உடனடியாக கணக்கிட்டு சொல்ல முடியாது. நமது எதிர்கால செலவுகளை கணக்கிட ஒரு சுலப வழிமுறை:

 

Formula for Calculating Future Expense:
Future Expense = Present Expenses X ( 1 + Inflation %) ^ n
Future Expense – எதிர்கால செலவு (மாதத்திற்கு)
Present Expense – தற்போதைய செலவு (மாதத்திற்கு)
Inflation % – பணவீக்கம் %
n (Number of Years) – தேவைப்படும் ஆண்டுகள்

 

உதாரணத்திற்கு, நமது இன்றைய மாத செலவு ரூ. 10,000 /- என கொள்வோம். பணவீக்கம் சராசரியாக 7 % எடுத்து கொள்வோம். 20 வருடங்களுக்கு பிறகு, நமது இன்றைய செலவு ரூ. 10,000 /- அன்று எவ்வளவு தேவைப்படும் என்று பார்ப்போம்.
Future Monthly Expense = 10,000 X ( 1 + 0.07 ) ^ 20

= 10,000 X (3.869)

= Rs. 38,697 /-

 

 

இன்று இணையதளத்திலும், கைபேசியிலும் எதிர்கால செலவுகளை கணக்கிடுவதற்கான Calculator(s) இருந்தாலும், அதற்கான கணித வழிமுறையை தெரிந்து கொள்வது பயனாக இருக்கும்.

 

நன்றி – வர்த்தக மதுரை

 

Power of Compounding

 

Power of Compounding: கூட்டு வட்டியின் சக்தி

 

 

உலகத்தின் எட்டாவது அதிசயம் எதுவென்றால், அது கூட்டு வட்டியின் சக்தி தான் ! எட்டாவது அதிசயம் என்று சொன்னாலும், நீங்கள் பணக்காரர் ஆவதற்கான ரகசியம் தான் இந்த கூட்டு வட்டி !

 

விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கூற்று படி,

 

“Compound interest is the eighth wonder of the world. He who understands it, earns it … he who doesn’t … pays it.”

 

நீங்கள் முதலீடு செய்தாலும் சரி, கடன் வாங்கி செலவு செய்தாலும் சரி… கூட்டு வட்டியின் பலனை தெரிந்து கொள்வது அவசியம்.

 

ஒரு சின்ன உதாரணம்:

 

நான் ஒவ்வொரு மாதமும் ரூ. 100 சேமிக்க முடிவு செய்தேன்; அதனை கூட்டு வட்டியின் அடிப்படையில் ஒரு வங்கியில் சேமிக்க / முதலீடு செய்தேன். சரியாக 5 வருடங்கள் வரை நான் இவ்வாறு ஒவ்வொரு மாதமும் சேமித்தேன். எனக்கு வங்கி கொடுக்க முடிவு செய்த வட்டி 8.5 % (கூட்டு வட்டியில் !)

 

5 வருட முடிவில், நான் கையில் பெற்ற பணம்: ரூ. 7,437 /- ( எனது மொத்த முதலீடு ரூ. 6000 க்கு )

 

சுருக்கமாக மற்றும் தெளிவாக சொன்னால், நான் முதலீடு செய்த ஒவ்வொரு 100 ரூக்கும், சராசரியாக 25 ரூ. வருமானமாக பெற்றேன் !

 

4 ல் ஒரு பங்கு லாபமாக !

 

உங்களுக்கு எந்த தொழில் தெரியாவிட்டாலும் பரவாயில்லை; கூட்டு வட்டியின் ரகசியத்தை அறிந்தால் நீங்களும் ஒரு தொழிலதிபர் தான் ! பணக்காரர் தான் !
நீங்கள் சேமிக்க முயன்றால், கூட்டு வட்டியின் பலனை அறியலாம்; கடன் வாங்கி செலவு செய்ய முயன்றால், கூட்டு வட்டியின் எதிர் வினையையும் அறியலாம் 🙂

 

நினைவில் கொள்க:

 

கூட்டு வட்டியின் எளிதான சூத்திரம்:

 

CI = P * (1 + i) ^ n

 

CI = Compound Interest
P = Principal
i = Interest Rate
n = Number of years

 

  • உங்கள் கையில் இருக்கும் பணம், எதிர்காலத்தில் எவ்வளவு ரூபாயாக இருக்கும் என்று கணக்கிடவும், இந்த சூத்திரத்தை பயன்படுத்தலாம்.

 

  • தற்போது உங்களுக்கு ஆகும் மாத செலவுகள், எதிர்காலத்தில் எவ்வளவு ரூபாய் மாத செலவுக்கு தேவைப்படும் என்பதற்கும் பயன்படுத்தலாம்.

 

  • உங்கள் ஓய்வு காலத்திற்கு தேவையான நிதியினை மேற்கொள்வதற்கும் இதனை உபயோகப்படுத்தலாம்.

 

நன்றி – வர்த்தக மதுரை

PPF ல் முதலீடு செய்வது சரியா ?

Is it better to invest in PPF ?

PPF ல் முதலீடு செய்வது சரியா ?

PPF (Public Provident Fund) ஐ பற்றி…

  • PPF என்பது ஒரு பொது வருங்கால வைப்பு நிதி; ஓய்வு காலத்திற்கான ஒரு சிறந்த முதலீட்டு திட்டம்.
  • VPF, EPF ல் பயனடைய முடியாதவர்கள் PPF Account ஐ, மிக எளிதாக பெறலாம்.
  • இது ஒரு வரி சேமிப்புடன் வரும் ஓய்வு காலத்திற்கான நிதி திட்டம்; ஆகையால் வருமான வரி வரம்புக்கு மேல் உள்ளவர்கள், இதன் மூலம் வரி சலுகை பெறலாம்.
  • PPF ல் வருமான வரி சலுகை பெற, அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 1,50,000 /- வரை முதலீடு செய்யலாம். (IT Rebate Under Section 80C of Income Tax Act, FY 2014-15 On wards)
  • PPF ல் தற்போதைய வைப்பு வட்டி விகிதம்:   ஆண்டுக்கு  8.0 % ( Jan-Mar 2019)
  • PPF கணக்கில் நாம் கடனும் பெற்று கொள்ளலாம். (நாம் கணக்கு தொடங்கிய 3 ம் நிதியாண்டிலிருந்து, 5 ம் நிதியாண்டு வரை கடன் பெறலாம்)
  • கணக்கில் உள்ள பணத்தை எடுக்க, 6 ம் நிதியாண்டிலிருந்து அனுமதிக்கப்படும்.
  • இத்திட்டத்தில் NRI, On behalf of a HUF, Association of Persons ஆகியோர் முதலீடு செய்ய முடியாது.
முதலீடு…
  • குறைந்த முதலீடு:   ரூ. 500 /-
  • அதிகபட்ச முதலீடு:  ரூ. 1,50,000 /- (வருமான வரிச்சட்டம் 2014-15 ன் படி)
எப்போது முதலீடு செய்யலாம் ?
  • பொதுவாக, நாம் PPF கணக்கை, எந்த தபால் அலுவலகத்திலும் (அ) வங்கியிலும் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். (நடப்பில், SBI, ICICI வங்கிகள்  வழங்குகிறது)
  • PPF கணக்கில் வைப்பு  வட்டி விகிதமானது, ஒரு மாதத்தின் 5 ம் தேதியிலிருந்து அம்மாதத்தின் 30/31 ம் தேதிக்குள் இருக்கும் குறைந்த பட்ச இருப்பு பணத்திற்கு கணக்கிடப்படுகிறது.  ஆகையால், மாதத்தின் முதல் தேதியிலிருந்து 5 ம் தேதிக்கு முன் நாம் முதலீடு செய்தால், நீண்ட காலத்தில் நல்ல பலனை பெறலாம்.
பொது வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்) ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் – 2019
நினைவில் கொள்க:
  • PPF என்பது ஒரு நீண்ட கால முதலீட்டு சாதனம், குறுகிய காலத்தில் உங்களுக்கு பணம் தேவைப்படாத பட்சத்தில், கணக்கில் உள்ள பணத்தை எடுக்க வேண்டாம்.
  • PPF கணக்கை நாம் இணையதளத்திலும் (PPF Account Online) தொடங்கலாம், பணம் செலுத்தலாம் மற்றும் பெறலாம்.
  • உங்களுடைய முதலீடு பங்குசந்தையில், பரஸ்பர நிதியில் இருக்கும் பட்சத்தில் நீங்கள் PPF Account ல் முதலீடு செய்யலாம்; இது ஒரு பாதுகாப்பு திட்டமும் கூட…
  • வருமான வரிசலுகை பெற நினைப்பவர்கள், காப்பீடு திட்டத்தில் அதிக பணத்தை போட்டு வைப்பதற்கு பதில், PPF கணக்கில் வரிசலுகை பெறலாம்.
நன்றி – வர்த்தக மதுரை 

விதி எண்: 72 (Rule No. 72)

 

What is Rule No. 72

 

நிதி ஆய்வுகளில் விதி எண்: 72 (Rule No. 72) உள்ள அதிசயம் என்ன ?

 

பொதுவாக நாம் அனைவருக்கும், நமது கையில் இருக்கும் பணத்தை எப்படி இரு மடங்காக (அ) இரட்டிப்பாக மாற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக நாம் எடுக்கும் முயற்சிகள்… போன்சி திட்டங்கள் (Ponzi Schemes – Pyramid, Chain Level Marketing) முடிவில், நமது முதலீட்டு பணம் திரும்பி வராது 🙂

 

சரி அது போகட்டும், நாம் விதி எண்: 72 க்கு வருவோம். நாம் செய்த முதலீடு(Bank Deposits,Postal Savings,Mutual Funds,Stock Markets,Chit Funds) இரு மடங்காக எப்போது வ(ள)ரும் என்று கணித ரீதியாக கணக்கிடுவதே, இந்த Rule No. 72.

 

எப்படி கணக்கிடுவது ?

 

Rule No.72 = 72 / Expected Interest (எதிர்பார்க்கும் வட்டி விகிதம்)
நீங்கள் ஒரு வங்கியில் ரூ.1,00,000 /- முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். வங்கியின் வைப்பு வட்டி விகிதம் ஆண்டுக்கு 8 % கூட்டு வட்டியில் தருகின்றனர். இப்போது நமது ஒரு லட்சம் எப்போது இரட்டிப்பாகும்…

 

விதி எண்:72,  

 

72 / 8 (வங்கியின் வட்டி விகிதம்)
ஒன்பது ஆண்டுகளில் (9 Years) !
இனி, நீங்கள் தைரியமாக உங்கள் பணத்தை இரட்டிப்பாகும் நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். போன்சி திட்டத்தில் அல்ல 🙂

 

நினைவில் கொள்க:

 

  • விதி எண். 72, கூட்டு வட்டியில் மட்டுமே கணக்கிடப்படுகிறது; தனி வட்டியில் அல்ல !

 

  • விதி எண். 72, உங்களுக்கு ஒரு நிச்சயமான வருடங்களை கணக்கிட்டு கொடுக்கும், நாட்களை அல்ல ! (தோராயமாக)

 

 

நன்றி – வர்த்தக மதுரை 

4 Steps to understanding about 50:30:20 Budget

 

4 Steps to understanding about 50:30:20 Budget:

 

அறிவோம் 50:30:20 Budget பற்றி…

 

1. Calculate your Income/Salary after Tax:

 

உங்கள் வருமானத்திலிருந்து வருமான வரி, NPS, SSS, மற்றும் பிற வரிகள் கழித்து போக மீதம் உள்ள தொகையை கணக்கில் எடுத்து கொள்ளுங்கள். அதாவது உங்கள் கையில் கிடைக்கும் வருமானம் (Take Home Pay).

 

2. Limit your Needs – Up to 50 %

 

உங்களுடைய அத்தியாவசிய தேவைகளை, கையில் கிடைக்கும் வருமானத்தில் 50 % க்குள் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.

 

3. Limit your Wants – Up to 30 %

உங்களுடைய விருப்பங்களை, கனவுகளுக்கான செலவுகளை, கையில் கிடைக்கும் வருமானத்தில் 30 % க்குள் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.

 

4. Spend atleast 20 % on Savings / Investing / Debt Repayments – 20 %

 

  • உங்களுடைய சேமிப்பு மற்றும் முதலீட்டை, கையில் கிடைக்கும் வருமானத்தில் 20 % இருக்குமாறு கணக்கிட்டு கொள்ளுங்கள்.

 

  • உங்களுக்கு ஏதேனும் கடன் இருந்தால், அவற்றிற்கான தவணைகளை 20 % மேல் செலுத்தாமல் பார்த்து கொள்ளுங்கள்.

 

  • கடன் இருந்தாலும், இல்லையென்றாலும் முடிந்தவரை சேமிக்க மற்றும் முதலீடு செய்ய பழகுங்கள்.

 

50:30:20 Budget கடைபிடித்தால், நீங்களும் Warren Buffet தான் !

 

முயற்சி திருவினையாக்கும்… முதலீடும் திருவினையாக்கும் !

 

நன்றி – வர்த்தக மதுரை