What is Rule No. 72
நிதி ஆய்வுகளில் விதி எண்: 72 (Rule No. 72) உள்ள அதிசயம் என்ன ?
பொதுவாக நாம் அனைவருக்கும், நமது கையில் இருக்கும் பணத்தை எப்படி இரு மடங்காக (அ) இரட்டிப்பாக மாற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக நாம் எடுக்கும் முயற்சிகள்… போன்சி திட்டங்கள் (Ponzi Schemes – Pyramid, Chain Level Marketing) முடிவில், நமது முதலீட்டு பணம் திரும்பி வராது 🙂
சரி அது போகட்டும், நாம் விதி எண்: 72 க்கு வருவோம். நாம் செய்த முதலீடு(Bank Deposits,Postal Savings,Mutual Funds,Stock Markets,Chit Funds) இரு மடங்காக எப்போது வ(ள)ரும் என்று கணித ரீதியாக கணக்கிடுவதே, இந்த Rule No. 72.
எப்படி கணக்கிடுவது ?
Rule No.72 = 72 / Expected Interest (எதிர்பார்க்கும் வட்டி விகிதம்)
நீங்கள் ஒரு வங்கியில் ரூ.1,00,000 /- முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். வங்கியின் வைப்பு வட்டி விகிதம் ஆண்டுக்கு 8 % கூட்டு வட்டியில் தருகின்றனர். இப்போது நமது ஒரு லட்சம் எப்போது இரட்டிப்பாகும்…
விதி எண்:72,
72 / 8 (வங்கியின் வட்டி விகிதம்)
ஒன்பது ஆண்டுகளில் (9 Years) !
இனி, நீங்கள் தைரியமாக உங்கள் பணத்தை இரட்டிப்பாகும் நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். போன்சி திட்டத்தில் அல்ல 🙂
நினைவில் கொள்க:
- விதி எண். 72, கூட்டு வட்டியில் மட்டுமே கணக்கிடப்படுகிறது; தனி வட்டியில் அல்ல !
- விதி எண். 72, உங்களுக்கு ஒரு நிச்சயமான வருடங்களை கணக்கிட்டு கொடுக்கும், நாட்களை அல்ல ! (தோராயமாக)
- இதனை பற்றிய மேலும் ஆய்வுகளுக்கு… https://en.wikipedia.org/wiki/Rule_of_72
நன்றி – வர்த்தக மதுரை