Calculating your Future Monthly Expense:
உங்கள் வருங்கால/எதிர்கால செலவுகளை கணக்கிடுவது எப்படி ?
நமக்கு எல்லோருக்கும் தெரியும், நமது மாத செலவு எவ்வளவு என்று ; அல்லது போன மாதம் எவ்வளவு செலவானது என்று நம்மால் உறுதியாக இல்லாவிட்டாலும் உத்தேசமாக சொல்ல முடியும் 🙂
ஆனால் நமது இன்றைய மாத செலவு, 5 (அ) 10 வருடங்களுக்கு பின்பு எவ்வளவு தேவைப்படும் என்று நம்மால் உடனடியாக கணக்கிட்டு சொல்ல முடியாது. நமது எதிர்கால செலவுகளை கணக்கிட ஒரு சுலப வழிமுறை:
Formula for Calculating Future Expense:
Future Expense = Present Expenses X ( 1 + Inflation %) ^ n
Future Expense – எதிர்கால செலவு (மாதத்திற்கு)
Present Expense – தற்போதைய செலவு (மாதத்திற்கு)
Inflation % – பணவீக்கம் %
n (Number of Years) – தேவைப்படும் ஆண்டுகள்
உதாரணத்திற்கு, நமது இன்றைய மாத செலவு ரூ. 10,000 /- என கொள்வோம். பணவீக்கம் சராசரியாக 7 % எடுத்து கொள்வோம். 20 வருடங்களுக்கு பிறகு, நமது இன்றைய செலவு ரூ. 10,000 /- அன்று எவ்வளவு தேவைப்படும் என்று பார்ப்போம்.
Future Monthly Expense = 10,000 X ( 1 + 0.07 ) ^ 20
= 10,000 X (3.869)
= Rs. 38,697 /-
இன்று இணையதளத்திலும், கைபேசியிலும் எதிர்கால செலவுகளை கணக்கிடுவதற்கான Calculator(s) இருந்தாலும், அதற்கான கணித வழிமுறையை தெரிந்து கொள்வது பயனாக இருக்கும்.
நன்றி – வர்த்தக மதுரை