Power of Compounding: கூட்டு வட்டியின் சக்தி
உலகத்தின் எட்டாவது அதிசயம் எதுவென்றால், அது கூட்டு வட்டியின் சக்தி தான் ! எட்டாவது அதிசயம் என்று சொன்னாலும், நீங்கள் பணக்காரர் ஆவதற்கான ரகசியம் தான் இந்த கூட்டு வட்டி !
விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கூற்று படி,
“Compound interest is the eighth wonder of the world. He who understands it, earns it … he who doesn’t … pays it.”
நீங்கள் முதலீடு செய்தாலும் சரி, கடன் வாங்கி செலவு செய்தாலும் சரி… கூட்டு வட்டியின் பலனை தெரிந்து கொள்வது அவசியம்.
ஒரு சின்ன உதாரணம்:
நான் ஒவ்வொரு மாதமும் ரூ. 100 சேமிக்க முடிவு செய்தேன்; அதனை கூட்டு வட்டியின் அடிப்படையில் ஒரு வங்கியில் சேமிக்க / முதலீடு செய்தேன். சரியாக 5 வருடங்கள் வரை நான் இவ்வாறு ஒவ்வொரு மாதமும் சேமித்தேன். எனக்கு வங்கி கொடுக்க முடிவு செய்த வட்டி 8.5 % (கூட்டு வட்டியில் !)
5 வருட முடிவில், நான் கையில் பெற்ற பணம்: ரூ. 7,437 /- ( எனது மொத்த முதலீடு ரூ. 6000 க்கு )
சுருக்கமாக மற்றும் தெளிவாக சொன்னால், நான் முதலீடு செய்த ஒவ்வொரு 100 ரூக்கும், சராசரியாக 25 ரூ. வருமானமாக பெற்றேன் !
4 ல் ஒரு பங்கு லாபமாக !
உங்களுக்கு எந்த தொழில் தெரியாவிட்டாலும் பரவாயில்லை; கூட்டு வட்டியின் ரகசியத்தை அறிந்தால் நீங்களும் ஒரு தொழிலதிபர் தான் ! பணக்காரர் தான் !
நீங்கள் சேமிக்க முயன்றால், கூட்டு வட்டியின் பலனை அறியலாம்; கடன் வாங்கி செலவு செய்ய முயன்றால், கூட்டு வட்டியின் எதிர் வினையையும் அறியலாம் 🙂
நினைவில் கொள்க:
கூட்டு வட்டியின் எளிதான சூத்திரம்:
CI = P * (1 + i) ^ n
CI = Compound Interest
P = Principal
i = Interest Rate
n = Number of years
- உங்கள் கையில் இருக்கும் பணம், எதிர்காலத்தில் எவ்வளவு ரூபாயாக இருக்கும் என்று கணக்கிடவும், இந்த சூத்திரத்தை பயன்படுத்தலாம்.
- தற்போது உங்களுக்கு ஆகும் மாத செலவுகள், எதிர்காலத்தில் எவ்வளவு ரூபாய் மாத செலவுக்கு தேவைப்படும் என்பதற்கும் பயன்படுத்தலாம்.
- உங்கள் ஓய்வு காலத்திற்கு தேவையான நிதியினை மேற்கொள்வதற்கும் இதனை உபயோகப்படுத்தலாம்.
நன்றி – வர்த்தக மதுரை