விரைவில் புதிய ஒரு ரூபாய் நோட்டு – பாரத ரிசர்வ் வங்கி
A New One Rupee note coming soon – RBI
நடைமுறையில் நாட்டின் பணப்புழக்கத்தில் உள்ள மிகச்சிறிய ரூபாய் நோட்டு, ஒரு ரூபாய் நோட்டு தான். 9.7 X 6.3 செ.மீ செவ்வக அளவை கொண்டது இந்த புதிய ஒரு ரூபாய் நோட்டு. வரவிருக்கும் புதிய ஒரு ரூபாய் நோட்டு 110 மைக்ரான் தடிமனாகவும், 90 ஜி.எஸ்.எம். எடையுள்ளதாகவும் அமைந்துள்ளது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ரூபாய் நோட்டில் மேல்பக்க தலைப்பாக, ‘பாரத் சர்க்கார்’ என தேவநாகரி எழுத்துக்களிலும், அதன் கீழ், ‘GOVERNMENT OF INDIA’ என ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு ரூபாய் நோட்டுக்கள் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் அச்சடிக்கப்படும்.
புதிய ஒரு ரூபாய் நோட்டுகளில் நிதி அமைச்சகத்தின் செயலாளர் இரு மொழிகளில் கையொப்பமிட்டுள்ளதாக அமைந்துள்ளது. ரூபாய் நோட்டின் ஒரு புறம் இளம்சிவப்பு பச்சை நிறத்தில் இருக்கும். மற்றொரு புறம், மற்ற நிறங்களின் கலவையாக இருக்கும். ஒரு ரூபாய் ₹ சின்னமும் அமைந்துள்ளது.
இந்த ரூபாய் சின்னம் விவசாயத்தை ஆதரிப்பதாக தானியங்களின் சின்னமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை சுற்றியுள்ள வடிவமைப்பு, ‘சாகர் சாம்ராட்’ எண்ணெய் ஆய்வு தளத்தின் படத்தையும் உள்ளடக்கியுள்ளது.
ரூபாய் நோட்டின் ஒரு புறத்தில், ஒரு ரூபாய் மதிப்பை பிரதிபலிக்கும் விதமாக 15 இந்திய மொழிகளில் பதியப்பட்டுள்ளது. மேலும் ஒரு ரூபாய் நாணயத்தை பிரதிபலிப்பதாக 2020ம் ஆண்டின் சத்யமேவ் ஜெயதே குறியீடும் அடங்கியுள்ளது. நம் நாட்டில் ரூபாய் நோட்டுகள் பாரத ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருக்கும். நாணயத்தை நிர்வகிப்பதையும், பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பதும் மற்றும் நாட்டில் உள்ள வங்கிகளின் செயல்பாடுகளை கண்காணிப்பதும் மத்திய ரிசர்வ் வங்கியின் வேலையாகும்.
இந்திய நாட்டின் ஒரு ரூபாய் குறியீட்டை(Rupee Symbol) வடிவமைத்தவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த திரு. உதயகுமார் ஆவார். தற்போது சில்லரை நாணயங்களில் அதிக புழக்கத்தில் உள்ளவை ரூ. 1,2,5 மற்றும் 10 ரூபாய் நாணயங்கள். ரூபாய் நோட்டுகளில் அதிக புழக்கம் கொண்டவை ரூ. 10, 20, 50, 100, 200, 500 மற்றும் 2000 ஆகியவை.
பொதுவாக ரூபாய் நோட்டுக்களை அதிகாரபூர்வமாக பயன்படுத்தும் நாடுகள் இந்தியா, நேபாளம் மற்றும் பூட்டான். அதிகாரபூர்வமற்ற வகையில் ஜிம்பாப்வே நாடும் ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்துகின்றன.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை