Vistadome coach Indian Railways

ரயில்வேயில் வேலை வேண்டுமா ? – நவீனமயமாகும் இந்தியன் ரயில்வே

ரயில்வேயில் வேலை வேண்டுமா ? – நவீனமயமாகும் இந்தியன் ரயில்வே

Looking for a job in Indian Railways – Check before about the Modernization of Indian Railways

நாட்டின் மிகப்பெரிய மத்திய பொதுத்துறை நிறுவனமாகவும், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்ட சாம்ராஜ்யமாகவும் திகழ்வது இந்தியன் ரயில்வே(Indian Railways). நம் நாட்டில் இந்திய ரயில்வேயின் வரலாறு 166 வருடங்களாகும். யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் இந்திய ரயில்வேயின் பங்கும் முக்கியமானது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சுகமான பயணமாக ரயில் இருந்து வந்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வளரும் நாடுகளில் ஒவ்வொரு நாடும் கேபிட்டலிசம் என்ற தன்மையை கொண்டு ஓடி கொண்டிருக்கிறது. அவற்றில் நம் நாட்டிற்கு ஒன்றும் விதிவிலக்கல்ல. சமூக சேவை கடமைகள் என்ற நிலை மாறி, அரசு துறையும் தனியார் நிறுவனங்களை போன்று வருவாயை வலுப்படுத்த வேண்டுமென்ற நிலைக்கு சென்று விட்டன. நடப்பு பட்ஜெட் 2020 தாக்கல் படி, ரயில்வே துறையின் உட்கட்டமைப்புக்கு 12,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டின் இரண்டாம் பாதியில் நாட்டின் முதல் தனியார் ரயில் சேவை (தேஜஸ் – Tejas Express) துவங்கப்பட்டது. தனியார் ரயில் சேவையின் முதல் மாதத்தில் நல்ல லாபத்தை பார்த்ததாக ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்தது.

அடுத்த வாரம் நாட்டின் மூன்றாவது தனியார் ரயில் சேவை இந்தூர் – வாரணாசி இடையே தொடங்கப்பட உள்ளது. ரயில் பயண சீட்டு வழங்குவதிலும் ரயில்வே துறை ஏற்கனவே நவீனமாக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் மேற்கு ரயில்வேயில் ஒரே நாளில் 5.5 லட்சம் பயணச்சீட்டுகள் டிஜிட்டல் முறையில் விற்கப்பட்டுள்ளன. வெறும் கைபேசி செயலி மூலமே சொல்லப்பட்ட டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன. ரயில்வே துறையின் அடுத்த இலக்கு நூறு வெவ்வேறு வழித்தடங்களில் நாடு முழுவதும் 150 தனியார் ரயில் சேவையை துவங்குவதாகும்.

வரும் 2025ம் ஆண்டுக்குள் தனியார் முதலீடு மற்றும் தனியார் நிறுவனங்களின் கூட்டுடன் 500 ரயில்கள் மற்றும் 750 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதாகும். சுருக்கமாக சொன்னால் 750 ரயில் நிலையங்கள் தனியார் மயமாக்கப்படும். பயணிகள் ரயில்களின் வேகத்தை 160 கி.மீ. வரை அதிகப்படுத்துவதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன. அரசு துறையான ரயில்வே வேலை கிடைப்பதற்கும், சொல்லப்பட்ட விஷயத்திற்கும் என்ன சம்மந்தம் ?

இதுவரை மத்திய அரசின் ரயில்வே வேலை கிடைப்பதற்கு பெரும்பாலான இளைஞர்கள் எதிர்பார்ப்பு கொண்டிருந்தனர். ஆனால், அது போன்ற நிலை இனி எதிர்காலத்தில் நடைபெறாது. பெரும்பாலான இளைஞர்களுக்கு ரயில்வேயில் வேலை கிடைக்கலாம். காரணம், பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வே உலகளவில் நவீனமயமாக்கப்படுவது தான். அதே வேளையில், அரசு துறை வேலை தானே என இனி யாரும் அலட்சியம் கொள்ள முடியாது. இது ஒரு தனியார் கார்பொரேட் நிறுவனம் போன்று தான். சேவை என்ற நிலையிலிருந்து மாறி வருவாய் மட்டுமே இலக்கு என்ற தன்மை நிகழும் போது, ஒவ்வொருவரும் கடினமாக உழைத்தாக வேண்டும். வேலையில் பிழை ஏற்பட்டால், ரயில் பயணிகளின் குறைகள் உடனடியாக தீர்க்கப்படாவிட்டால், அதனை சார்ந்த ஊழியர்களின் மீது துறைரீதியான நடவடிக்கை வலுப்படும். இனி லஞ்சம் என்ற நிலை இல்லாமல், உயர்ரக பயணங்களுக்கு செல்ல வேண்டும்.

ரயில்வே வேலைக்கு செல்லும்  முன், தேஜஸ் ரயில் சேவையில் பயணம் செய்து பாருங்கள். பிறகு உங்களுக்கு தெரியும், வேலைக்கு செல்ல வேண்டுமா அல்லது பங்குதாரராக வேண்டுமா என்று.

ஆல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட், ஹூண்டாய், சீமென்ஸ், மெக்குவாரி ஆகிய பிரபலமான அந்நிய நிறுவனங்கள் தங்கள் ரயில் சேவையை நம் நாட்டில் துவங்க உள்ளன. டாட்டாவும், அதானியும் இந்த ரயில் களத்தில் இறங்க உள்ளன. முற்றிலும் தனியார் பங்களிப்புடன் இனி இந்திய ரயில்வே உலகத்தரத்திற்கு நவீனமயமாகும். கடந்த 2004ம் ஆண்டுக்கு பிறகு மத்திய மற்றும் மாநில அரசு வேலைகளில் (ராணுவத்தை தவிர்த்து) ஓய்வூதியம் இல்லை என்பதை மறக்க வேண்டாம். இனியும் பழைய ஓய்வூதியம் என்ற நிலைக்கு அரசு முன்வராது.

எனவே நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான இந்த பொதுத்துறைக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள், பிராண்டட்(Branded) நிறுவனத்தில் வேலை செய்வது போன்ற எண்ணத்தை கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால், ஏமாற்றமே மிஞ்சும். நல்ல சேவை, மிடுக்கான உடை, வேகமெடுக்கும் பயணம், கை நிறைய சம்பளம், ஊக்கத்தொகை மற்றும் ஐ.டி. நிறுவனத்தை போன்ற தோரணை ஆகியவை கிடைக்கப்பெறும். எந்த நிலையிலும் 20 வருடங்களுக்கு முன்பிருந்த அரசு வேலை என எண்ணிக்கொள்ள வேண்டாம்.

ஐ.ஆர்.சி.டி.சி.(IRCTC) கடந்தாண்டின் அக்டோபர் மாதத்தில் இந்திய பங்குச்சந்தைக்கு வந்தது. சந்தைக்கு வரும் போது, இந்த பங்கின் விலை ரூ. 320. தற்போதைய பங்கு ஒன்றின் விலை ரூ. 1,514. இதன் சந்தை மதிப்பு ரூ. 24,216 கோடி. நிறுவனர்களின் (மத்திய அரசு) பங்களிப்பு 87 சதவீதம். சொன்னால் நம்ப மாட்டீர்கள், ஐ.ஆர்.சி.டி.சி. பங்கின் விலை கடந்த நான்கு மாதங்களில் 450 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. அதாவது நீங்கள் வாங்கிய விலையிலிருந்து சுமார் 5 மடங்குக்கு அருகில். வருங்காலத்தில் எல்.ஐ.சி.(LIC India) நிறுவனத்திற்கும் இது நடக்கலாம். ஆனால் நீண்டகாலத்தில் நல்ல நிதி அறிக்கையை கொண்ட நிறுவனங்களே சந்தையில் முதலீட்டாளர்களை கவரும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s