எச்.இ.ஜி.(HEG) லிமிடெட் பங்குகளை இப்போது வாங்கலாமா ? – பங்குச்சந்தை அலசல்
Would you buy HEG LTD – Graphite Electrode now ? Fundamental Analysis
எல்.என்.ஜே. பில்வாரா(LNJ Bhilwara) குழுமத்தின் ஒரு அங்கம் மற்றும் அதன் முதன்மை நிறுவனம் தான் எச்.இ.ஜி. லிமிடெட். மத்திய பிரதேசத்தை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் கிராபைட் எலெக்ட்ரோடு(Graphite Electrode) உற்பத்தியில் நாட்டின் முன்னணி நிறுவனமாகவும் செயல்படுகிறது. தனது உற்பத்தியில் 70 சதவீதத்திற்கும் மேல் ஏற்றுமதியை கொண்டிருக்கும் இந்நிறுவனம் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது சேவையை வழங்கி கொண்டிருக்கிறது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
குழுமத்தின் அனுபவம் சுமார் 60 வருடங்களாகும். நிறுவனத்தின் நிறுவனர் திரு. எல்.என். ஜுன்ஜுன்வாலா தனது ஆரம்பகட்ட தொழிலாக ஜவுளி ஆலையை ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாராவில் துவங்கினார். பின்பு ஆற்றல் சார்ந்த பல தொழில்களையும், தொழில்நுட்பம், மருத்துவம், கிராபைட் என பல பரிணாமத்தை எடுத்து வந்துள்ளது.
கடந்த 2018-19ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 6,591 கோடியாகவும், நிகர லாபம் ரூ. 3,026 கோடியாகவும் இருந்தது. எச்.இ.ஜி. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 4,500 கோடியாகவும், புத்தக மதிப்பு 1,038 ரூபாயாகவும் உள்ளது. நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் 0.16 ஆக உள்ளது. எனவே, நிறுவனத்திற்கு பெரிதான கடன் எதுவுமில்லை. வட்டி பாதுகாப்பு விகிதம்(Interest Coverage Ratio) 90 மடங்கில் உள்ளது.
நிறுவனர்களின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் எதுவும் செய்யப்படவில்லை. அதே வேளையில் கடந்த காலாண்டில் நிறுவனர்கள் சார்பில் 2 சதவீத பங்குகள் விற்கப்பட்டுள்ளன. தற்போதைய பங்கு ஒன்றின் விலை புத்தக மதிப்பை காட்டிலும் ஒரு மடங்கில் தான் உள்ளன. இந்த துறையை சேர்ந்த நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை(Dividend) அளிப்பதில் சிறப்பாக உள்ளன.
எச்.இ.ஜி. லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 50 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சி கண்டுள்ளது. அதே வேளையில் மூன்று வருட காலங்களில் 85 சதவீதமும், ஐந்து வருடங்களில் 41 சதவீதமும் மற்றும் பத்து வருட கால அளவில் 14 சதவீதமும் ஏற்றம் பெற்றுள்ளது. நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 36 சதவீதமும், லாபம் 98 சதவீதமும் வளர்ந்துள்ளது.
பங்குச்சந்தை பற்றிய இலவச வகுப்புகள் – 14 பாடங்கள்
பங்கு மீதான வருவாய்(Return on Equity – ROE) கடந்த மூன்று வருடங்களில் 77 சதவீதமும், ஐந்து வருட காலத்தில் 56 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. நிறுவனத்தின் கையிருப்பாக செப்டம்பர் 2019ம் காலாண்டின் முடிவில் ரூ. 3,968 கோடி சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்திற்கான பணவரவு சரியாக வந்து கொண்டிருக்கிறது. ஆனால் உலக பொருளாதார காரணிகள் இந்த நிறுவனத்தின் தொழிலை அவ்வப்போது பாதிக்கும். அமெரிக்க – சீன வர்த்தக போர், கொரோனா வைரஸ் பதற்றம் ஆகியவை இந்த நிறுவனத்தின் வருவாயை சமீபத்தில் பாதித்துள்ளது எனலாம்.
கடந்த 2017ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இந்த பங்கின் விலை ரூ. 180 என்ற அளவில் வர்த்தகமானது. பின்பு மலை போல் உயர்ந்து, 2019ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ரூ. 4900 என்ற விலை வரை சென்றது. கடந்தாண்டு நிறுவனம் சார்பில் பங்குகளை முதலீட்டாளர்களிடம் இருந்து திரும்ப பெறும் முறையில்(Buyback of Shares) பங்கு ஒன்றுக்கு ரூ. 5500 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டது. மூன்று வருடத்திற்கு முன்னர் முதலீடு செய்தவர்கள் அனைவரும் பெருத்த லாபத்தை எடுத்துள்ளனர். பின்பு, இந்த பங்கின் விலை 2019ம் ஆண்டு (பங்குகள் திரும்ப பெறும் செய்திக்கு பிறகு) முழுவதும் சரிவை நோக்கி தான் சென்றது. நல்ல லாபத்தை கண்ட அன்னிய முதலீட்டாளர்களும் இந்த நிறுவனத்தின் பங்கு முதலீட்டிலிருந்து கடந்த நிதியாண்டின் முடிவில் வெளியேறியுள்ளனர்.
நடப்பு 2019-20ம் நிதியாண்டில் இதன் வருவாய் மற்றும் லாபம் சரிய தொடங்கியுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட மூன்றாம் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 394 கோடி மற்றும் செலவினம் ரூ. 389 கோடியாக இருந்துள்ளது. வரிக்கு பிந்தைய வருவாய் ரூ. 1 கோடி நிகர நஷ்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ரூ. 2000, 3000 என்ற விலையில் இந்த பங்குகளை வாங்கியவர்கள் பெருத்த சரிவை சந்தித்துள்ளனர். சுழற்சி முறை மற்றும் உலக பொருளாதார காரணிகளால் பாதிக்கப்படும் இந்த பங்கு, அடிப்படை பகுப்பாய்வை நிறைவு செய்தவை. அதே வேளையில் அனைத்து காலத்திலும் வாங்கக்கூடிய பங்காக இது அமையவில்லை.
எனவே நிறுவனத்தின் வருவாய் தொடர்ச்சியாக வளரும் பட்சத்தில், பங்கின் விலையும் மலிவாக கிடைக்கும் போது முதலீடு செய்யலாம். நடப்பு 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் அடிப்படை பகுப்பாய்வின் படி, பங்கு ஒன்றின் விலை ரூ. 850 மதிப்பு பெறும் என சொல்லியிருந்தோம். மூன்றாம் காலாண்டு முடிவின் படி, பங்கு ஒன்றின் விலை ரூ. 710 என்ற மதிப்பை மட்டுமே பெறக்கூடும். தற்போதைய பங்கு ஒன்றின் விலை ரூ. 1,170 என்ற விலையில் உள்ளது கவனிக்கத்தக்கது. நிறுவனம் கடந்த நிதியாண்டின் முடிவில் பங்கு ஒன்றுக்கு 80 ரூபாயை ஈவுத்தொகையாக வழங்கியிருந்தது. இப்போது மூன்றாம் காலாண்டு முடிவில் பங்கு ஒன்றுக்கு 25 ரூபாய் ஈவுத்தொகையை அறிவித்துள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை