வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 2
Personal Finance – Survey / Polling
நமது வர்த்தக மதுரை தளத்தின் சார்பாக நிதி அறிவு துளிகள் என்ற தலைப்பில் நிதி சார்ந்த கேள்விகளும், அதற்கான பதில்களும் பெறப்படும். இது ஒரு வாக்கு பதிவு முறையில் அமையப்பெற்றது. உங்களுக்கான நிதி அறிவை நீங்கள் தற்சோதனை செய்து கொள்ள ஒரு தமிழ் களம்.
முதல் பாகத்திற்கான கேள்விகளும், அதற்கான விடைகளும் இங்கே…
- சேமிப்பு, முதலீடு – இரண்டும் ஒன்றா ?
விடை: இல்லை
விளக்கம்: சேமிப்பு என்பது வெறுமனே உண்டியலில் பணம் சேர்ப்பது போன்று. அது வளர்ச்சியை பெறுவதில்லை. உதாரணத்திற்கு நமது சேமிப்பு வங்கி கணக்கு போல, பணவீக்கத்தை விட குறைவான வட்டி விகிதம் வழங்கப்படும். முதலீடு என்பது வளர்ச்சியையும், தொடர் வருமானத்தையும் கொடுக்கக்கூடியது. உதாரணமாக நிலம், தங்கம், பங்குகள், பரஸ்பர நிதிகள், தொழிலில் முதலீடு.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
- அரசு வெளியிடும் பட்ஜெட் தாக்கல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
விளக்கம்: ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் அரசு வெளியிடும் பட்ஜெட் தாக்கல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தனிநபருக்கான சலுகைகள், தொழிலுக்கான புதிய கொள்கைகள் மற்றும் மாற்றங்கள் ஆகியவை பட்ஜெட்டில் விவாதிக்கப்படும். நமது வரவு-செலவை பாதிக்கும் காரணிகள் பட்ஜெட்டில் இடம்பெறும், அவை நமக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமையலாம்.
- உங்கள் குடும்பத்தில் நீங்கள் பட்ஜெட் திட்டமிடுவது உண்டா ?
விளக்கம்: அரசின் பட்ஜெட்டை போலவே ஒரு குடும்பத்தின் பட்ஜெட்டும் அவசியமாகும். வரவு-செலவு அறிக்கையை முறையாக நாம் பராமரிப்பதால் கடன் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் தவிர்க்க பட்ஜெட் திட்டமிடல் உதவும். நமது தளத்தில் பட்ஜெட் திட்டமிடல் எவ்வாறு அமைப்பது என்பதை எளிமையாக விளக்கியுள்ளோம் –
பட்ஜெட் திட்டமிடலை உருவாக்குவது எப்படி ?
- முதலீடு செய்வதின் நோக்கம் என்ன ?
விடை: பணத்தை பெருக்க (Capital Appreciation)
விளக்கம்: முதலீடு என்பது பொதுவாக வளர்ச்சியையும், அதனை சார்ந்து தொடர் வருமானத்தையும் தருவதாக இருக்க வேண்டும். நிலம், பங்குகள், பரஸ்பர நிதிகள் போன்றவற்றை முதலீடாக சொல்லலாம்.
- காப்பீடு என்பது ஒரு சிறந்த மற்றும் பாதுகாப்பான முதலீட்டு சாதனம் ?
விடை: இல்லை
விளக்கம்: காப்பீடு என்பது ஒரு முதலீட்டு சாதனமாக கருத முடியாது. காப்பீட்டின் நோக்கமே எதிர்பாராத நிதி இழப்பினை சரி செய்வதற்கான பாதுகாப்பு அம்சம் தான். இதனை ஒரு முதலீடாக எடுத்து கொள்ள கூடாது. முழுமையான காப்பீடு திட்டத்திற்கு டேர்ம் பாலிசிகளை வாங்கி கொள்ளலாம். காப்பீட்டு நிறுவனங்களில் விற்கப்படும் காப்பீட்டுடன் முதலீடு என்று கூறப்படும் சாதனங்கள் குறிப்பிடத்தக்க வருவாய் தராது.
ஒவ்வொரு பாகத்திலும் ஐந்து கேள்விகள் கேட்கப்படும், அதற்கான பதில்கள் கருத்து கணிப்பின் வடிவில் அமையப்பெறும். கேள்விகளின் சரியான பதில்கள் நமது இணைய தளத்தில் வாக்கு பதிவு நாள் முடிந்தவுடன் வெளியிடப்படும். கருத்து கணிப்பின் முடிவில் வாசகர்கள் தங்கள் நிதி சார்ந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த வார கேள்விகள்:
- வருமான வரியை சேமிக்க இன்சூரன்ஸ்(காப்பீடு) என்ற திட்டம் மட்டுமே உள்ளது ?
- நமது நாட்டில் தங்கத்தின் விலை மதிப்பு எதனை சார்ந்து மாறுகிறது ?
- பங்குச்சந்தையும், பரஸ்பர நிதிகளும்(Mutual Funds) ஒன்றா ?
- நிதி சார்ந்த கல்வியினை பெற நீங்கள் எவ்வளவு தொகையை செலவிட தயாராக உள்ளீர்கள் ?
- பங்குச்சந்தை(Share Market) ஒரு ___________ ?
குறிப்பு:
நீங்கள் வாக்கு பதிவு செய்வதற்கான இணைப்பை காண முடியவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிடவும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை