Income Tax Returns

புதிய வருமான வரி விகிதங்கள் 2019-20 – எளிய விளக்கங்களுடன்

புதிய வருமான வரி விகிதங்கள் 2019-20  – எளிய விளக்கங்களுடன்

Income Tax Slab FY 2019-20 – Simple Explanations

நேற்று (01-02-2019) மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்(Interim Budget) 2019 ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. பட்ஜெட் அறிக்கையில் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை கவரும் வண்ணம் பல விஷயங்கள் கூறப்பட்டிருந்தது. விவசாய மானியம் மற்றும் பயிர் கடன் சார்ந்த சலுகைகளையும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டம் மற்றும் வருமான வரியில் சலுகை(Income Tax) கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டிருந்தது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இடைக்கால பட்ஜெட் அறிக்கை தேர்தல் வியூகமாக அமைந்துள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது. சலுகைகள் என்று சொல்லப்பட்ட பல விஷயங்கள் வரும் நாட்களில் நடைமுறைக்கு வரும் போது தான், அதன் நிலை அறியப்படும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) நிதி பற்றாக்குறையை 3.3 சதவீதமாக குறைப்பது சவாலான விஷயம் என ஏற்கனவே பொருளாதார வல்லுநர்களால் கூறப்பட்டுள்ளது. இதனிடையே நேற்றைய இடைக்கால பட்ஜெட் தாக்கலில் நிதி பற்றாக்குறை(Fiscal Deficit) இலக்கினை 3.4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

 

தற்போது அறிவிக்கப்பட்ட இந்த பட்ஜெட் (FY 2019-20) மதிப்பு, 27.84 லட்சம் கோடி ரூபாயை கொண்டிருந்தது. கடந்த 2018 ம் ஆண்டு பட்ஜெட்டோடு ஒப்பிடும் போது, இப்போது செலவினம் கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த முறை பட்ஜெட் 2018ன் மதிப்பு 24.42 லட்சம் கோடி ரூபாய் ஆகும். பட்ஜெட் அறிக்கையில் சொல்லப்பட்ட வருமான வரி சலுகைகள் குறித்து எளிய விளக்கத்துடன் இங்கு பார்ப்போம்.

 

நேற்று பட்ஜெட் 2019ல் சொல்லப்பட்டதாவது ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறும் தனி நபர்களுக்கு வரி ஏதும் இல்லை என கூறப்பட்டிருந்தது. வரும் நிதியாண்டில்(2019-20) வருமான வரி விகிதங்கள்,

Income Tax Slab rates FY 2019-20

நடப்பு 2018-19ம் நிதியாண்டுக்கான அதே வருமான வரி அடுக்கு விகிதங்கள் தான் வரும் நிதி வருடத்திலும் தொடரும் எனலாம். பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களால் சொல்லப்பட்ட விஷயம், வருமான வரியில் உள்ள வரி தள்ளுபடியே ஒரு சலுகையாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி தள்ளுபடியாக(Tax Rebate) ரூ. 12,500 /- என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இந்த வரி தள்ளுபடி சலுகை இல்லை. இதனை ஒரு உதாரணத்தின் மூலம் நாம் காணலாம்.

 

35 வயதான ராம் என்பவர் நடப்பு நிதியாண்டில் பெற்ற வருமானம் ரூ. 5 லட்சம் எனில், வருமான வரி விகிதங்களின் படி அவர் வரி செலுத்துபவராக உள்ளார். அவரது வருமானம் ஆண்டுக்கு ரூ. 2,50,000 க்கு மேல் உள்ளதால் ரூ. 2,50,001 லிருந்து ரூ. 5,00,000 வரையிலான வருமானத்திற்கு 5 சதவீத வரி எனும் போது செலுத்த வேண்டிய வரித்தொகை ரூ. 12,500. நடப்பு ஆண்டில் கணக்கிட்டால் ரூ. 3 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி தள்ளுபடியாக(Tax Rebate) ரூ. 2500 கொடுக்கப்பட்டு வருகிறது. இனி வரும் நிதியாண்டில் வரி தள்ளுபடி தொகை ரூ. 2500 லிருந்து 12,500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வரி தள்ளுபடிக்கான வருமான வரம்பும் ரூ. 3 லட்சத்திலிருந்து 5 லட்ச ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. அவ்வாறு பார்க்கும் போது, நடப்பு நிதி வருடத்தில் ரூ. 12,500 ஐ வரியாக செலுத்தும் ராம், அடுத்த வருடத்தில் இதே 5 லட்ச ரூபாய் வருமானத்தை கொண்டிருக்கும் போது, அவருக்கு வரி தள்ளுபடியாக ரூ. 12,500 /- பிரிவு 87(A) ன் கீழ் கிடைக்கிறது. அதனால் இனி அவர் வரி செலுத்துபவராக இருக்க மாட்டார்.

 

வருமான வரி வரம்பில் மாற்றம் ஏதும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமான வரம்பில், அவருக்கு வரி தள்ளுபடியே தவிர வரம்பில் அல்ல (Benefits only on Tax Rebate, not in Tax Slab rates). ராம் வேலை பார்க்கும் நிறுவனம் அவரது வருமானத்திற்கான (ரூ. 5 லட்சம்) TDS பிடித்ததை மேற்கொள்ளும். பின்னர் ராம் தனது வருமானத்தை தாக்கல் செய்வதன் மூலம் ரூ. 12,500 ஐ வரி தள்ளுபடியாக பெறலாம்.

 

40 வயதுடைய சோமு என்பவரின் ஆண்டு வருமானம் ரூ. 5,01,000 /-. இவர் ராமை விட 1000 ரூபாயை மட்டுமே கூடுதல் வருமானமாக பெறுகிறார். ஆனால், சோமுவின் வருமானம் ரூ. 5 லட்சம் வரம்பை கடந்துள்ளது. அதனால் இவருக்கு ரூ. 12,500 /- வரி தள்ளுபடி என்பது கிடைக்காது. இவருடைய வருமான வரி என கணக்கிட்டால், ரூ. 2,50,001 – ரூ. 5,00,000 வரையிலான வருமானத்திற்கு 5 சதவீதமும், ரூ. 5,00,001 – ரூ. 5,01,000 வரையிலான வருமானத்திற்கு 20 சதவீதமும் வரி விதிக்கப்படும். ஆக, சோமு வருமான வரியாக ரூ. 12,700 (12500 + 200) ஐ செலுத்த வேண்டும்.  செலுத்த வேண்டிய வரி தொகைக்கு செஸ் மற்றும் சர்சார்ஜ் கட்டணங்கள்(Cess & Surcharge) தனி.

 

சோமு தனது வருமான வரி தொகையை குறைக்க வருமான வரிச்சட்டம் பிரிவு 80 (80C,D,E,etc) ன் கீழ் வரிச்சலுகையை பெறலாம். வருமான வரி வரம்பில் ரூ. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வருமானம் கொண்டவர்கள் அல்லது 20 % மற்றும் 30% அடுக்கில் உள்ளவர்களுக்கு வரி தள்ளுபடி கிடையாது. இருப்பினும் அவர்கள் மற்ற வரி விலக்குகள்(Tax exemption) மூலம் தங்களின் வரி செலுத்தும் தொகையை குறைக்கலாம். நடப்பு நிதியாண்டில் நிலைக்கழிவு தொகை(Standard Deduction) ரூ. 40,000 ஆக உள்ளது. இனி அடுத்த ஆண்டு முதல் இதன் வரம்பு ரூ. 50,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

வங்கிகள் மற்றும் அஞ்சலக சேமிப்பில் இருக்கும் வைப்பு தொகைக்கான வட்டி வருமானம்(Interest Income) ஆண்டுக்கு ரூ.10,000 க்கு மேல் இருந்தால், குறிப்பிட்ட வங்கியில் அல்லது அஞ்சலக அலுவலகத்தில் டி.டி.எஸ்.(Tax Deducted at Source) பிடித்தம் செய்யப்பட்டும். இனி வரும் 2019-20 நிதியாண்டு முதல் இந்த வரம்பு ரூ. 10,000 லிருந்து ரூ. 40,000 /- ஆக மாற்றப்பட்டுள்ளது.

 

பட்ஜெட் சம்மந்தமான இன்னும் பிற தகவல்கள் அடுத்த பதிவில் ஏற்றப்படும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s