அயல்நாட்டிலிருந்து இந்தியர்கள் அனுப்பிய பணம் 850 கோடி டாலராக குறைந்துள்ளது – வெளியுறவு விவகார அமைச்சகம்
Indians abroad remittances fall by 850 Crores – MEA
நம் நாட்டிலிருந்து வெளிநாட்டில் வேலை பார்க்கும் மற்றும் வேலை தேடி செல்லுபவர்களின் எண்ணிக்கை(Indians abroad) ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. உலகிலேயே ஒரு நாட்டில் இருந்து மற்ற நாடுகளுக்கு இடம்பெயரும் அளவு இந்தியாவில் தான் அதிகமாக உள்ளது. சுமார் 3 கோடி மக்களுக்கு மேல் வெளிநாட்டில் வெளிநாடு வாழ் இந்தியர் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களாக உள்ளனர் (NRI and Person of Indian origin).
வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பெரும்பாலும் அமெரிக்கா, அரபு நாடுகள், கனடா மற்றும் ஆஸ்திரேலியா நாட்டிலும் வசித்து வருகின்றனர். இவர்கள் வேலை மற்றும் தொழில் பார்த்து ஈட்டும் வருமானங்கள் மூலம் நம் நாட்டிற்கு அந்நிய செலவாணியாக அரசுக்கு வருமானம் வருகிறது.
இன்று(04-04-2018) மக்களவையில் (Lok Sabha) இது சம்மந்தமான ஒரு கேள்விக்கு வெளியுறவு துறை விவகார அமைச்சகத்தின்(Ministry of External Affairs) சார்பில் பதிலளிக்கப்பட்டது. வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் மூலம் 2014-15 ம் நிதியாண்டில் 6982 கோடி டாலர்கள் வந்ததாகவும், இதுவே 2015-16 ம் ஆண்டில் 6559 கோடி டாலராக மதிப்பு குறைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மேலும் 2016-17 ல் வெளிநாட்டு இந்தியர் மூலம் அனுப்பப்பட்ட தொகையானது 6129 கோடி டாலராக குறைந்ததாக சொல்லப்பட்டது. கடந்த 2017 ம் வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை பெறப்பட்ட தொகை 3347 கோடி அமெரிக்க டாலர்கள் ஆகும்.
2014-15 மற்றும் 2016-17 ஆண்டுகளுக்கு இடையே பெறப்பட்ட தொகையில் 850 கோடி அமெரிக்க டாலராக குறைந்ததாகவும் விவகார அமைச்சகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு கேள்விக்கு அமைச்சகம் பதிலளிக்கும் போது, தூதரக ஊழியர்களின்(Embassy staff) பற்றாக்குறைகளை கவனித்து வருவதாகவும், அவற்றில் தீர்வு காணப்படும் எனவும் கூறியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் விவகார சபை புள்ளிவிவரங்களின் படி சுமார் 1.6 கோடி இந்தியர்கள் புலம் பெயர்ந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9 ம் தேதி வெளிநாட்டு இந்தியர்கள் நாள் (Overseas Indians’ Day) கொண்டாடப்படுகிறது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை