Category Archives: Taxes

நிலைக்கழிவு – வருமான வரி தாக்கல் – பாடம் 3

நிலைக்கழிவு – வருமான வரி தாக்கல் – பாடம் 3

Standard Deduction – Income Tax Returns (Filing) – Lesson 3

 

தனி நபர் ஒருவரின் ஆண்டு வருவாயில் ஒரு நிலையான தொகை கழிக்கப்படுவதால் வரிக்கு உட்பட்ட வருமானத்தை குறைக்க உதவும். இதன் மூலம் ஒருவரின் வரி செலுத்திய தொகையும் குறைக்கப்படும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பொதுவாக ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவருக்கு தனது சம்பளத்தில் சில பிடித்தங்கள்(Deductions) இருக்கும். அதே போல, தான் பெற்ற வருவாயில் சில வரி சலுகைகளும் கிடைக்கப்பெறும். உதாரணத்திற்கு வீட்டு வாடகை, விடுமுறை மூலமாக பெற்ற தொகை(Leave Encashment), குழந்தைகளுக்கான கல்வி செலவுகள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி(Providend Fund) போன்றவற்றிற்கு வரி விலக்கு உண்டு.

 

இது போக வருமான வரி துறையால் அறிவிக்கப்பட்ட நிலைக்கழிவுகளையும்(Standard Deduction) நாம் வரி சலுகையாக பெறலாம். கடந்த 2018ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் படி, மாத சம்பளம் வாங்கும் ஒருவருக்கு ரூ.40,000 /- வரை நிலைக்கழிவாக தனது வருவாயில் குறைத்து கொள்ள முடியும். நடப்பு வருட பட்ஜெட்டில் இந்த தொகை ரூ. 50,000 /- ஆக உயர்த்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. உயர்த்தப்பட்ட இந்த சலுகை நிதியாண்டு 2019-20 க்கு உரியதாகும். இதனை நாம் அடுத்த மதிப்பீட்டு காலத்தில் மட்டுமே பெற முடியும்.

 

மருத்துவ செலவுகள், பயணப்படிகள்(Transport Allowance) ஆகியவை இந்த நிலைக்கழிவு தொகையில் அடங்கும். முன்னர் பயணப்படி ரூ. 19,200 /- மற்றும் மருத்துவ செலவுகள் ரூ. 15,000 /- (ஆண்டுக்கு) வரையிலான தொகைக்கு மட்டுமே நாம் நிலைக்கழிவுகளை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.  எனவே இதுவரை வருமான வரி தாக்கல் செய்தவர்கள் மருத்துவ செலவுகள் மற்றும் பயணப்படிகளை தனித்தனியாக சமர்ப்பித்த நிலை மாறி, இந்த ஆண்டின் மதிப்பீட்டு காலத்தில்(AY 2019-20) அடிப்படை நிலைக்கழிவுகளாக 40,000/- ரூபாய் வரை கழித்து கொள்ளலாம்.

 

உதாரணத்திற்கு உங்கள் ஆண்டு வருவாய் ரூ.6 லட்சம் எனில், நிலைக்கழிவுகள் 40,000 /- ரூபாயை கழித்தது போக உங்களது வருமானம் ரூ.5,60,000 /- ஆக குறையும். அடுத்த வருட மதிப்பீட்டு காலத்தில்(AY 2020-21) இது 6,00,000 – 50,000 = 5,50,000 /- ஆக இருக்கும். மேலும் மற்ற வரிச்சட்ட பிரிவுகளின் (80C, 80D, 80E, 80G, etc) கீழும் நாம் வரி சலுகையை பெறலாம்.

 

ஒரு நிறுவனத்தில் தற்சமயம் பணிபுரியும் ஒருவர் ஏற்கனவே வேலை பார்த்த அல்லது ஓய்வு பெற்ற நிறுவனத்தில் ஓய்வூதியம் (பென்ஷன்) பெற்று வந்தால், அந்த வருமானம் வரிக்கு உட்பட்டதாகும். எனவே, அவரது மொத்த வருவாய் வருமான வரிக்கு உட்பட்டதாக இருக்கும் பட்சத்தில் அவர் அதற்கான வரியை செலுத்த வேண்டும். இந்நிலையிலும் அவர் அடிப்படை நிலைக்கழிவான ரூ. 40,000 /- சலுகையை பெறலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வருவாய் ஆதாரங்கள் – வருமான வரி தாக்கல் – பாடம் 2

வருவாய் ஆதாரங்கள் – வருமான வரி தாக்கல் – பாடம் 2

Sources of Income – Income Tax Returns (Filing) – Lesson 2

 

சென்ற பாடத்தில் Financial Year மற்றும் Assessment Year என்ன என்பதை பற்றி நாம் பார்த்தோம். ஒருவர் சொல்லப்பட்ட மதிப்பீட்டு காலத்தில்(AY 2019-20) தனது வரி தாக்கலை செய்வது, அதற்கு முந்தைய வருடத்தில்(Previous year i.e 2018-19) பெற்ற வருவாய்க்கு தான்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தனி நபர் ஒருவர் தான் பெற்ற வருமானத்திற்கு ஏற்ப வரி சட்டங்களும் உள்ளன. வருமான அளவினை கொண்டு வருமான வரி விகிதங்களும்(Income Tax Slab & Rates 2019) மாறுபடும். இதற்கான வருவாய் ஆதாரங்கள்(Sources of Income) எவ்வாறு அமைகிறது என்பதனை பார்ப்போம். வருமான வரி செலுத்தும் ஒருவருக்கு தனது வேலையின் மூலம் கிடைத்த மாத ஊதியம் மட்டுமில்லாமல் மற்ற வருவாய் ஆதாரங்களும் உள்ளன. அவை,

 

  • சம்பள வருமானம்(Income from Salary) – ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் போது கிடைக்கும் மாத ஊதியம், படிகள் மற்றும் அதனை சார்ந்த பிற வருவாய்.

 

  • வீடு மூலம் பெறும் வருமானம்(Income from House Property) – வீடு அல்லது கட்டிடங்கள் மூலம் பெறும் வாடகை வருமானம்.

 

  • மூலதன ஆதாய வருமானம்(Capital Gains) – ஒரு மூலதன சொத்துக்களை விற்கும் போது பெறும் லாபம் அல்லது நட்டம்.

 

  • வணிகம் அல்லது தொழில்முனைவின் மூலம் வருமானம்(Income from Business / Profession) – தனது தொழில் அல்லது வணிகத்தின் மூலம் பெறும் வருமானத்திற்கு.

 

  • மற்ற வருவாய் ஆதாரங்கள்(Other Source of Income) – பரிசுகள், வங்கி கணக்குகளில் பெறும் வட்டி வருமானம், குடும்ப ஓய்வூதியம்.

டி.டி.எஸ். பிடித்தம்(Tax Deducted at Source -TDS):

 

வருமான வரி சட்டத்தின் படி, நாம் பெறப்போகும் வருமானத்திற்கு முன்னரே வரி பிடித்தம் செய்யப்படும், இதனை டி.டி.எஸ். பிடித்தம் (Tax Deducted at Source) என்கிறோம். நாம் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் பட்சத்தில் ஒரு நிதியாண்டுக்கான உத்தேச வருமானத்தை நிறுவனமே கணக்கிட்டு, அதற்கான வரி தொகையை நமது சம்பளத்தில் பிடித்து கொள்ளும். நிறுவனத்தில் நாம் சமர்ப்பித்த வரி சலுகை மதிப்புகள் போக, ஏதேனும் இருப்பின் வருமான வரி தாக்கல் செய்யும் போது, வரி சலுகைகளை பெறலாம்(சலுகை இருப்பின்). இதன் மூலம் நம்மிடம் நிறுவனம் பிடித்த தொகையை நாம் திரும்ப பெறலாம். வரி சலுகைக்கான ஆவணங்களை சரி பார்த்தும், பாதுகாப்பாகவும் வைத்து கொள்வது அவசியம்.

 

வங்கியில் உள்ள நமது சேமிப்பு கணக்கு(Savings Account) மற்றும் வைப்பு நிதி திட்டங்களுக்கு(Fixed Deposit) கிடைக்கப்பெறும் வட்டி வருமானமும் வரிக்கு உட்பட்டது. நடப்பு வரி சட்டப்படி, தனி நபர் ஒருவரின் ஆண்டு வருவாய் ரூ.2,50,000 க்கு மேலாக இருக்கும் பட்சத்தில் அவர் வரி செலுத்த(Tax Payer) அல்லது வரி தாக்கல்(Tax Return) செய்யக்கூடியவராக உள்ளார். வங்கிகளுக்கு நாம் நிறுவனத்தில் பெறும் வருமானத்தை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆதலால், வங்கிகளுக்கான வரி சட்டங்களின் படி, வாடிக்கையாளர்கள் பெறும் வட்டி வருமானத்திற்கு டி.டி.எஸ். பிடித்தம் செய்ய வேண்டும். இது சேமிப்பு கணக்கு மற்றும் வைப்பு நிதிக்கு பொருந்தும். முன்னர் ஒரு நிதியாண்டில் பெறப்படும் வட்டி வருமான தொகை ரூ.10,000 க்கு மேலாக இருந்தால் வங்கி 10 சதவீதம் டி.டி.எஸ். பிடித்தம் செய்யும். இந்த வருட புதிய பட்ஜெட் அடிப்படையில் ரூ. 40,000 /- வரையிலான வட்டி வருமானத்திற்கு வங்கிகள் பிடித்தம் செய்யாது.

 

வங்கிகளில் நாம் வட்டி வருமானத்தை கையில் பெறாவிட்டாலும், ஒவ்வொரு வருடமும் சொல்லப்பட்ட தொகைக்கு மேலாக வட்டி தொகை இருந்தாலே வங்கிகள் 10 சதவீதம் டி.டி.எஸ். பிடிக்கும். பான்(PAN) எண்ணை வங்கியில்  இணைக்காத நிலையில் இது 20 சதவீதமாக எடுத்து கொள்ளப்படும். வங்கிகள் டி.டி.எஸ். பிடித்தம் செய்யாவிட்டாலும் அது நமது மொத்த வருமானத்தில் சேர்க்கப்பட்டு, அதற்கேற்ப வரி வசூலிக்கப்படும்.

 

நாம் வருமான வரி செலுத்தும் நபராக இருக்கும் பட்சத்தில், வங்கிகள் பிடித்தம் செய்த தொகை போக, மேலும் ஏதேனும் தொகையை செலுத்த வேண்டுமென்றால், இதனை நாம் வரி தாக்கல் செய்யும் போது, படிவம் 26AS ல் தெரிய வரும். நாம் வருமான வரி வரம்பிற்குள் வராத பட்சத்தில், வங்கிகளில் பிடித்தம் செய்யப்பட்ட வட்டி தொகையை திரும்ப பெறலாம்.

 

பொதுவாக வங்கிகளில் டி.டி.எஸ். பிடித்தம் செய்யாமலிருக்க படிவம் 15G ஐ பயன்படுத்தலாம். மூத்த குடிமக்கள் 15H என்ற படிவத்தை நிரப்ப வேண்டும். 15G மற்றும் 15H படிவங்கள் வங்கிகளில் கிடைக்கப்பெறும்.

 

இன்னும் திட்டமிடுவோம்…

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி,  வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வருமான வரி தாக்கல் – திட்டமிடுவோம் மற்றும் பயன்பெறுவோம் – பாடம் 1

வருமான வரி தாக்கல் – திட்டமிடுவோம் மற்றும் பயன்பெறுவோம் – பாடம் 1

Income Tax Returns (Filing) – Plan & Benefits – Lesson 1

 

2018-19ம் நிதி வருடத்தை முடித்து விட்டு, 2019-20ம் நிதியாண்டில் நாம் காலெடுத்து வைத்துள்ளோம். முன்னர் வருமான வரி செலுத்துபவர்கள் மட்டுமே வரி தாக்கலை செய்து வந்த நிலையில் இன்று மாத சம்பளம் வாங்கும் (பெரும்பாலும் அமைப்பு சார்ந்த) அனைவரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

‘ நான் தான் வருமான வரி கட்ட தேவையில்லையே, அப்புறம் எதற்கு நான் வரி தாக்கல் செய்ய வேண்டும் ? ‘ என கேட்பதற்கு பதிலாக வருமான வரி தாக்கல் சார்ந்த சில எளிமையான விஷயங்களை நாம் கற்று கொண்டாலே, பின்னாளில் அது பயன் தரும். ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்கும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டாலும், தனி நபர் ஒருவர் தனது வரி தாக்கலை செய்வதற்கு, ஆதார் எண் அவசியமாக்கப்பட்டுள்ளது.

 

இந்த பகுதியில் நாம் வருமான வரி சார்ந்த சில எளிமையான வழிமுறைகளை தெரிந்து வைத்து கொண்டு(Basics Education), நமக்கான வரி சலுகைகள் மற்றும் அதனை சார்ந்த திட்டங்களில் பயன் பெறலாம். வரி தாக்கல் செய்யும் முன், நாம் முன்னேற்பாடாக சில தகவல்களையும் சேகரித்து வைத்து கொள்வது சிரமத்தை ஏற்படுத்தாமல் இருக்கும்.

 

வாருங்கள், முதல் பாடத்திற்குள் செல்லலாம்.

 

நாம் இப்போது 2018-19ம் நிதியாண்டின், அதாவது ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019ம் வரையிலான காலத்திற்கு வரி தாக்கல் செய்யக்கூடிய காலத்தில் இருக்கிறோம். மேலே சொன்ன காலத்தில் நாம் ஈட்டிய வருவாய்க்கு ஏற்ப நமது வருமான வரி அமையலாம் அல்லது வரி தாக்கல் செய்யக்கூடியவராக இருக்கலாம்.

 

நிதியாண்டு(Financial Year or Fiscal Year) என்றால் என்ன ?

 

ஒரு நிறுவனம் அல்லது அரசாங்கத்தை பொறுத்தவரை அதன் கணக்கீட்டு காலம் 52 வாரங்கள் அல்லது 12 மாதங்கள் ஆகும். நிறுவனத்தின் வரவு-செலவு மற்றும் லாப-நட்ட நிதி அறிக்கைகள்(Financial Statements) இந்த 12 மாத அளவில் கணக்கீடு செய்யப்படும். பொதுவாக ஆங்கிலேய காலத்திலிருந்து 12 மாத காலம் என்பது ஒரு வருடத்தின் ஏப்ரல் மாதம் தொடங்கி அடுத்த வருடத்தின் மார்ச் மாதம் வரை என வரையறுக்கப்பட்டுள்ளது. இதனை தான் நாம் நிதியாண்டு(Financial Year) என்கிறோம்.

 

சொல்லப்பட்ட ஏப்ரல்-மார்ச் காலத்தில் நாம் ஏதேனும் வருவாய் பெற்றிருந்தால் (இழப்பு இருந்தாலும்) அதனை மதிப்பீடு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு 2018-19ம் நிதியாண்டில், அதாவது ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019ம் வரையிலான காலத்தில் உள்ள வருவாயை நாம் மார்ச் 2019க்கு பின்னர் தான் மதிப்பீடு செய்ய முடியும். நடந்து முடிந்த ஒரு நிதி வருடத்திற்கான கணக்கை நாம் அடுத்த நிதி வருடத்தில் தான் மதிப்பீடு(Assessing) செய்கிறோம் மற்றும் வரியை தாக்கல் (Income Tax Return Filing) செய்கிறோம். இந்த காலத்தை மதிப்பீட்டு காலம்(Assessment Year) எனலாம்.

 

கவனிக்க:

 

  • நீங்கள் வருவாய் ஈட்டிய காலம் (ஏப்ரல் – மார்ச்) ஒரு நிதியாண்டு எனப்படும். 2010 ஏப்ரல் முதல் 2011 மார்ச் வரை என்பது ஒரு நிதியாண்டு. இதனை 2010-11 நிதி வருடம் அல்லது 2011ம் நிதியாண்டு என்பர் – FY 2010-11 OR Fiscal year 2011.

 

  • நாம் வருவாய் பெற்ற காலத்தை நிதியாண்டு ஆண்டு எனவும், அதனை மதிப்பீடு செய்த காலத்தை மதிப்பீட்டு ஆண்டு(Assessment year) எனவும் அழைக்கிறோம்.

 

  • 2018-19ம் நிதியாண்டிற்கான மதிப்பீட்டு காலம் 2019-20ம் வருடமாகும். நீங்கள் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் இந்த வருடத்தின் மார்ச் மாத காலம் வரையிலான வருமானத்திற்கு, நடப்பு ஏப்ரல் மாதம் முதல் வரி தாக்கல் செய்யலாம். பொதுவாக வரி தாக்கல் செய்வதற்கு மதிப்பீட்டு காலத்தின் ஜூலை மாதம் வரை அனுமதிக்கப்படும் – ஜூலை 31, 2019 (AY 2019-20)

 

இன்னும் திட்டமிடுவோம்…

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com