Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

World Savings Day | Save Tax – Make Money

 

உலக சேமிப்பு தினம் – World Savings Day – October 31 

 

எளிய முறையில் சேமியுங்கள்… வரிச்சலுகையை பெறுங்கள்… செல்வத்தினை பெருக்குங்கள்…

(World Savings Day – October 31) உலக சேமிப்பு தினத்தையொட்டி ஒரு எளிய முறையில் சேமிக்க மற்றும் வரிச்சலுகையை பெற…

 

சேமிப்பு மற்றும் முதலீடு என்பது நம் எல்லோர் வாழ்விலும் மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு நாட்டின் வளர்ச்சியானது பெரும்பாலும் பொருளாதாரத்தினை சார்ந்தே இருக்கிறது. அதை போல, நமது தனி நபர் மற்றும் குடும்பத்தின்  பொருளாதார வளர்ச்சி, நமது சேமிப்பு மற்றும் முதலீட்டை சார்ந்தே உள்ளது.  நமது வருமானம் பெரும்பாலும் அரசுக்கு செலுத்தும் வரியாகவே செலவு செய்யப்படுகிறது. நாம் நமது சேமிப்பின் மூலம், நேர்மையான முறையில் அரசுக்கு வரி செலுத்துவதும் மற்றும் நமது பணத்தினை பெருக்குவது எப்படி என்பதை சில எளிய திட்டத்தின் மூலம் பார்ப்போம்.

 

 

1. PPF (Public Provident Fund) பொது வருங்கால வைப்பு நிதி:

 

நாம் ஏற்கனவே நமது இணைய பக்கத்தில்  PPF ல் முதலீடு செய்வது பற்றி விவரித்திருந்தோம்.

( How to invest in PPF  )

  • இது ஒரு வரி சேமிப்புடன் வரும் ஓய்வு காலத்திற்கான நிதி திட்டம்; ஆகையால் வருமான வரி வரம்புக்கு மேல் உள்ளவர்கள், இதன் மூலம் வரி சலுகை பெறலாம்.
  • PPF ல் வருமான வரி சலுகை பெற, அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 1,50,000 /- வரை முதலீடு செய்யலாம். (IT Rebate Under Section 80C of Income Tax Act, FY 2014-15 Onwards)
  • PPF ல் தற்போதைய வைப்பு வட்டி விகிதம்:   ஆண்டுக்கு  8.7 %
  • குறைந்த முதலீடு:   ரூ. 500 /-
  • அதிகபட்ச முதலீடு:  ரூ. 1,50,000 /- (வருமான வரிச்சட்டம் 2014-15 ன் படி)

 

ELSS (Equity Linked Savings Scheme) இ.எல்.எஸ்.எஸ் :

 

  • இது பரஸ்பர நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் ஒரு திறந்த-முனைய திட்டம்.
  • இதன் மூலம் நாம் வரிச்சலுகை (Section 80C of Income Tax Act) பெறமுடியும் மற்றும் நம் முதலீட்டின் மீதான வருமானத்தையும், வங்கிகளை காட்டிலும் சற்று அதிகமாக பெற முடியும்.
  • குறைந்த பட்ச முதலீடாக சில நிறுவனங்கள் 500 ரூ. முதல் அனுமதிகின்றன.
  • குறைந்த பட்ச Lock-in-period – 3 வருடங்கள்.

 

 

RGESS (Rajiv Gandhi Equity Savings Scheme):

 

  • 2012-13 ம் ஆண்டின் பட்ஜெட்டில், அன்றைய நிதி அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்களால் அறிவிக்கப்பட்ட திட்டம்.
  • இத்திட்டம் முதல் முறை முதலீடாளர்களுக்காக உருவாக்கப்பட்டது.
  • ஏற்கனவே மற்ற வரிச்சலுகை திட்டத்தில் ரூ.1,50,000 வரை சலுகை பெற்றவர்கள், இந்த திட்டத்தில் மேலும் ரூ. 50,000 /- அதிகபட்ச முதலீடாக (முதல் முறை முதலீட்டாளருக்கு மட்டும்) மேற்கொள்ளலாம்.

 

அனைவருக்கும் உலக சேமிப்பு தின நல்வாழ்த்துக்கள்…

முதலீடும் திருவினையாக்கும்… !!

நன்றி – வர்த்தக மதுரை 

 

 

Things to know before invest in Company Fixed Deposits(FD)

6 Things to know before  invest in company fixed deposits:

 

நிறுவன வைப்பு தொகை திட்டத்தில் முதலீடு செய்ய போகிறீர்களா ?

 

கவனிக்க வேண்டிய ஆறு விஷயங்கள்:

 

பொதுவாக வங்கியில் நாம் முதலீடு செய்யும் வைப்பு தொகை ஒரு பாதுகாப்பான முதலீடாகும். அதை போல, நிறுவனங்களில் வைப்பு தொகை முதலீடு செய்யும் முன், நாம் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

  1. Safe on Investment  முதலீட்டு பாதுகாப்பு:

நிறுவன வைப்பு தொகைக்கு கிடைக்கும் வட்டி, வங்கிகள் கொடுக்கும் வட்டியை விட சற்று அதிகம் தான்.  வங்கிகள்  வைப்பு தொகை போன்ற பாதுகாப்பினை, நாம் நிறுவன வைப்பு தொகை திட்டத்தில் எதிர்பார்க்க இயலாது. ஏனெனில், வங்கிகளின் வைப்பு தொகைக்கு RBI(Reserve Bank of India) இன் வரையறுக்கப்பட்ட நிபந்தனைக்களுக்கு, வட்டி விகித கொள்கைக்கு உட்பட்டதாக இருக்கும். ஆனால் ஒரு நிறுவன முதலீட்டில் நாம் தான், அந்த நிறுவனத்தை பற்றிய  தகவல்களையும், பாதுகாப்பையும் அறிய வேண்டும்.

  1. TDS (Tax Deducted at Source) பிடித்தம்:

ஒரு நிறுவன வைப்பு தொகைக்கு கிடைக்கும் வட்டி வருமானம் 5000 ரூபாய்க்கு மேல்  சென்றால் TDS பிடித்தம் உண்டு. ஆனால் வங்கிகளில் TDS பிடித்தம் உங்களுக்கு கிடைக்கும் வட்டி வருமானம் 10,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் மட்டுமே !

  1. Higher rate of interest  அதிக வட்டி விகிதம்:

நிறுவன வைப்பு தொகையில் நீங்கள் செய்யும் முதலீடுக்கு, வட்டி வருமானம் வங்கிகளை விட  நிச்சயம் அதிகமாக தான் இருக்கும். ஆனால் அதே  அளவுக்கு பாதுகாப்பற்ற(Risk) தன்மையும் உண்டு. உங்கள் ரிஸ்க் க்கு ஏற்றார் போல் ரிவார்டு உண்டு !

  1. Rating of the Company மதிப்பீடுகளை அலசுங்கள்:

பொதுவாக, ஒரு நிறுவன வைப்பு தொகை திட்டத்தில் முதலீடு செய்யும் முன், அதன் மதிப்பீடுகளை அலசுங்கள். சில நிதி நிறுவனங்கள் வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் வைப்பு தொகை திட்டத்திற்கு மதிப்பீடுகளை இலவசமாக வழங்குகின்றன. ( Financial Institutions like CRISIL, ICRA ) அவற்றினை கண்டறிந்து, அந்த நிறுவனம் பாதுகாப்பானதா மற்றும் நாம் செய்யும் முதலீடுக்கு உரிய வட்டி விகிதம் கிடைக்குமா என்று அறியலாம்.

 

  1. Background of the company நிறுவனத்தை அறியுங்கள்:

நீங்கள் முதலீடு செய்ய போகும் நிறுவனத்தை பற்றியும், அதன் கடந்த கால வரலாற்றை பற்றியும் அறியுங்கள். இதற்கு அந்த நிறுவனம் முதலீட்டாளருக்கு உரிய வருமானத்தை கொடுத்து உள்ளதா…நிறுவனத்தின் பொருளாதாரம் எப்படி… நிறுவனர்கள் எப்படி… வாடிக்கையாளர்கள் சேவை  எவ்வாறு உள்ளது என்று அறிய வேண்டும்.

 

  1. Plan your Term காலத்திற்கு ஏற்றார் போல் முதலீடு செய்யுங்கள்:

நாம் ஏற்கனவே சொன்னது போல, நிறுவன வைப்பு முதலீடு என்பது ஒரு ரிஸ்க் நிறைந்தது என்பதால் உங்களது தேவைக்கு ஏற்றார் போல் முதலீடு செய்யுங்கள். உதராணமாக, ஒரு நிறுவனம் மிகவும் ரிஸ்க் தன்மை உள்ளது என்று அறிந்தால், குறுகிய கால முதலீடு செய்யுங்கள். ரிஸ்க் தன்மை பரவலாக உள்ளது என்றால், ஒரு சில வருடங்கள் (அ)  நீண்ட கால முதலீட்டிற்கு செல்லுங்கள்.

 

*கவனிக்க:

  • நீங்கள் செய்யும் எந்த முதலீடாக இருந்தாலும் சரி, பண பாதுகாப்பை பற்றியும், கையெழுத்திடும் ஆவணங்களை பற்றியும் அறிந்த பிறகே முடிவெடுங்கள்.

 

முதலீடும் திருவினையாக்கும்… !!

 

நன்றி, வர்த்தக மதுரை

யார் இந்த ராகுல் யாதவ் (Rahul Yadav) ? Housing.com

 

யார் இந்த ராகுல் யாதவ் ?  (Who is  this Rahul Yadav ?)

 

  • ராஜஸ்தான் மாநிலம், அல்வார் நகரத்தின் 25 வயது இளைஞன்.
  • பள்ளி படிப்புகளில், அவ்வளவு ஈடுபாடில்லை; சுமாரான பள்ளி மாணவனாக வலம் வந்தவன்.
  • IIT-Bombay ல் கல்லுரி படிப்பை தொடங்கி, இறுதி ஆண்டில் படிப்பினை கை விட்டவர்.
  • இணையதளங்களில் (Online Space), செயலிகள் (Apps) உருவாக்குவதில் ஈடுபாடு கொண்டவர்.

 

 

இன்று….

 

  • ஹவுசிங்.காம் ன் நிறுவனர்.  ( CEO of Housing.com)
  • ரூ. 200 கோடி மதிப்புள்ள தனது பங்குகளை, நிறுவனத்தின் பணியாளர்களுக்கு
    கொடை அளித்தவர்.
  • சிறிய வயதில் இவ்வளவு தொகை தனக்கு தேவைப்படாது என்று அதிரடியாக தனது பணியாளர்களுக்கு பகிர்ந்தளித்தவர்.

 

 

Housing.com  பற்றி…

 

  • ஹவுசிங்.காம் நிறுவனம்,  ஜூன் 2012 ல் IIT-Bombay ல் படித்த 12
    இளைஞர்களால் ஒருங்கிணைந்து உருவாக்கப்பட்டது.
  • ஹவுசிங்.காம் நிறுவனம், வீடு வாடகைக்கு விடுவது, விற்பது, வாங்குவதற்கு
    வசதியாக இந்த தளம் உள்ளது.
  •  தற்போது, நிறுவனத்தில் 2250 ஊழியர்கள் உள்ளனர்.
  • Softbank, Nexus Venture Partners போன்ற நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்துள்ளன.

 

 

ஏன் Housing.com…

 

  • சர்வதேச அளவில் வீடு தேடும் பிரச்சனை தீர்க்கப்படாமல் உள்ளதாகவும்,
    அதற்கு தீர்வு தரும் சேவை தனக்கு சவால் மிகுந்ததாகவும் உள்ளதாக ராகுல்
    யாதவ் தெரிவித்துள்ளார்.

 

  • தற்போது, இது போன்ற நிறுவனங்கள் ஒவ்வொரு நாட்டிலும் 5 மட்டுமே உள்ளன.
    உலகம் முழுவதும் சுமார் 500 நிறுவனங்கள் மட்டுமே இதில் ஈடுபட்டுள்ளன.

 

 

Quotes of Rahul Yadav  (CEO of Housing.com, Entrepreneur)

 

”  If things aren’t working, I can write them off,” Rahul Yaadav says

 

“The problem with Indian start-ups is that people spend years on the
same ideas that just don’t work!”

 

 

இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்கள் மற்றும்
உறவினர்களுக்கு, Share செய்து கொள்ளலாம்.

நன்றி – வர்த்தக மதுரை

ரத்து செய்யப்பட்ட காசோலை (Cancelled Cheque) ஏன்..? எதற்கு..?

 

ரத்து செய்யப்பட்ட காசோலை (Cancelled Cheque) ஏன்…? எதற்கு ?

 

பொதுவாக, நமது பணபரிவர்த்தனையில் ரத்து செய்யப்பட்ட காசோலை தேவைப்படுவதை கவனித்திருப்போம். இது எதற்கு, எங்கே தேவைப்படுகிறது….

 

  • வங்கி கணக்கு துவங்கும் போது
  • KYC (Know your customer) என்று சொல்லப்படும் வாடிக்கையாளரை அறிதல் – தகவல்களை பெறும் போது
  • ECS, EMI முறையில் நாம் தவணையை (அ) முதலீட்டை செலுத்தும் போது
  • EPF (Employee Provident Fund) இல் பணம் பெறும் போது
  • Insurance Policy எடுக்கும் போது
  • Demat கணக்கை ஆரம்பிக்கும் போது…. இவ்வாறாக ரத்து செய்யப்பட்ட காசோலையை நாம் பயன்படுத்துவோம்.

எவ்வாறு பயன்படுத்துவது:

 

உங்களது செல்லுபடியாகும் காசோலையின் குறுக்கே இரு கோடிட்டு(crossed), “CANCELLED” என்று எழுதினால் அந்த காசோலை ரத்து செய்யப்பட்டதாக அர்த்தம். அது தான், CANCELLED CHEQUE.

 

 

cancelled_cheque_vm
எதற்காக பயன்படுகிறது:

 

பொதுவாக, ரத்து செய்யப்பட்ட காசோலையை, யாரும் தவறாக பயன்படுத்த முடியாது. பின்பு எதற்காக.. ?

 

ஆனால் உங்களின் கணக்கு எண், காசோலை எண், வங்கி பெயர், MICR Code தகவல்களை பெறலாம்.

சிறு சேமிப்பு வட்டி விகிதங்கள் – Savings Interest Rate – Financial Year 2016

2016 ம் நிதியாண்டின் சிறு சேமிப்பு வட்டி விகிதங்கள்:

 

நமது அரசு, ஏப்ரல் 1 ம் தேதி முதல் அறிவித்துள்ள வட்டி விகிதங்கள்..

 

Savings Interest Rate – Financial Year 2016:

 

  • PPF (Public Provident Fund): 8.7 %
  • KVP ( கிஸான் விகாஸ் பத்திரம்): 8.7 %
  • 10 வருட தேசிய சேமிப்பு பத்திரம் (NSC): 8.8 %
  • 5 வருட தேசிய சேமிப்பு பத்திரம் (NSC): 8.5 %
  • 5 வருட மாத வருமான திட்டம் (Monthly income scheme): 8.4 %
  • 5 வருட கால வைப்பு திட்டம் (Time Deposits): 8.5 %
  • 5 வருட தொடர் வைப்பு (RD): 8.4 %
  • 1 – 3 வருட கால வைப்பு திட்டம் (Time Deposits): 8.4 %
  • சேமிப்பு கணக்கு: 4 %

 

மேலுள்ள அனைத்தும் கடந்த நிதி ஆண்டினை ஒப்பிடும் போது, மாற்றம் எதுவுமில்லை.
வட்டி விகித மாற்றம் செய்யப்பட்ட திட்டங்கள்:

 

  • 5 வருட மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்: 9.3 % (முன்னர் – 9.2 %)
  • சுகன்யா சம்ரிதி கணக்கு திட்டம்: 9.2 % (முன்னர் – 9.1 %)

– வர்த்தக மதுரை