ரத்து செய்யப்பட்ட காசோலை (Cancelled Cheque) ஏன்…? எதற்கு ?
பொதுவாக, நமது பணபரிவர்த்தனையில் ரத்து செய்யப்பட்ட காசோலை தேவைப்படுவதை கவனித்திருப்போம். இது எதற்கு, எங்கே தேவைப்படுகிறது….
- வங்கி கணக்கு துவங்கும் போது
- KYC (Know your customer) என்று சொல்லப்படும் வாடிக்கையாளரை அறிதல் – தகவல்களை பெறும் போது
- ECS, EMI முறையில் நாம் தவணையை (அ) முதலீட்டை செலுத்தும் போது
- EPF (Employee Provident Fund) இல் பணம் பெறும் போது
- Insurance Policy எடுக்கும் போது
- Demat கணக்கை ஆரம்பிக்கும் போது…. இவ்வாறாக ரத்து செய்யப்பட்ட காசோலையை நாம் பயன்படுத்துவோம்.
எவ்வாறு பயன்படுத்துவது:
உங்களது செல்லுபடியாகும் காசோலையின் குறுக்கே இரு கோடிட்டு(crossed), “CANCELLED” என்று எழுதினால் அந்த காசோலை ரத்து செய்யப்பட்டதாக அர்த்தம். அது தான், CANCELLED CHEQUE.
பொதுவாக, ரத்து செய்யப்பட்ட காசோலையை, யாரும் தவறாக பயன்படுத்த முடியாது. பின்பு எதற்காக.. ?
ஆனால் உங்களின் கணக்கு எண், காசோலை எண், வங்கி பெயர், MICR Code தகவல்களை பெறலாம்.