6 Things to know before invest in company fixed deposits:
நிறுவன வைப்பு தொகை திட்டத்தில் முதலீடு செய்ய போகிறீர்களா ?
கவனிக்க வேண்டிய ஆறு விஷயங்கள்:
பொதுவாக வங்கியில் நாம் முதலீடு செய்யும் வைப்பு தொகை ஒரு பாதுகாப்பான முதலீடாகும். அதை போல, நிறுவனங்களில் வைப்பு தொகை முதலீடு செய்யும் முன், நாம் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
- Safe on Investment முதலீட்டு பாதுகாப்பு:
நிறுவன வைப்பு தொகைக்கு கிடைக்கும் வட்டி, வங்கிகள் கொடுக்கும் வட்டியை விட சற்று அதிகம் தான். வங்கிகள் வைப்பு தொகை போன்ற பாதுகாப்பினை, நாம் நிறுவன வைப்பு தொகை திட்டத்தில் எதிர்பார்க்க இயலாது. ஏனெனில், வங்கிகளின் வைப்பு தொகைக்கு RBI(Reserve Bank of India) இன் வரையறுக்கப்பட்ட நிபந்தனைக்களுக்கு, வட்டி விகித கொள்கைக்கு உட்பட்டதாக இருக்கும். ஆனால் ஒரு நிறுவன முதலீட்டில் நாம் தான், அந்த நிறுவனத்தை பற்றிய தகவல்களையும், பாதுகாப்பையும் அறிய வேண்டும்.
- TDS (Tax Deducted at Source) பிடித்தம்:
ஒரு நிறுவன வைப்பு தொகைக்கு கிடைக்கும் வட்டி வருமானம் 5000 ரூபாய்க்கு மேல் சென்றால் TDS பிடித்தம் உண்டு. ஆனால் வங்கிகளில் TDS பிடித்தம் உங்களுக்கு கிடைக்கும் வட்டி வருமானம் 10,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் மட்டுமே !
- Higher rate of interest அதிக வட்டி விகிதம்:
நிறுவன வைப்பு தொகையில் நீங்கள் செய்யும் முதலீடுக்கு, வட்டி வருமானம் வங்கிகளை விட நிச்சயம் அதிகமாக தான் இருக்கும். ஆனால் அதே அளவுக்கு பாதுகாப்பற்ற(Risk) தன்மையும் உண்டு. உங்கள் ரிஸ்க் க்கு ஏற்றார் போல் ரிவார்டு உண்டு !
- Rating of the Company மதிப்பீடுகளை அலசுங்கள்:
பொதுவாக, ஒரு நிறுவன வைப்பு தொகை திட்டத்தில் முதலீடு செய்யும் முன், அதன் மதிப்பீடுகளை அலசுங்கள். சில நிதி நிறுவனங்கள் வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் வைப்பு தொகை திட்டத்திற்கு மதிப்பீடுகளை இலவசமாக வழங்குகின்றன. ( Financial Institutions like CRISIL, ICRA ) அவற்றினை கண்டறிந்து, அந்த நிறுவனம் பாதுகாப்பானதா மற்றும் நாம் செய்யும் முதலீடுக்கு உரிய வட்டி விகிதம் கிடைக்குமா என்று அறியலாம்.
- Background of the company நிறுவனத்தை அறியுங்கள்:
நீங்கள் முதலீடு செய்ய போகும் நிறுவனத்தை பற்றியும், அதன் கடந்த கால வரலாற்றை பற்றியும் அறியுங்கள். இதற்கு அந்த நிறுவனம் முதலீட்டாளருக்கு உரிய வருமானத்தை கொடுத்து உள்ளதா…நிறுவனத்தின் பொருளாதாரம் எப்படி… நிறுவனர்கள் எப்படி… வாடிக்கையாளர்கள் சேவை எவ்வாறு உள்ளது என்று அறிய வேண்டும்.
- Plan your Term காலத்திற்கு ஏற்றார் போல் முதலீடு செய்யுங்கள்:
நாம் ஏற்கனவே சொன்னது போல, நிறுவன வைப்பு முதலீடு என்பது ஒரு ரிஸ்க் நிறைந்தது என்பதால் உங்களது தேவைக்கு ஏற்றார் போல் முதலீடு செய்யுங்கள். உதராணமாக, ஒரு நிறுவனம் மிகவும் ரிஸ்க் தன்மை உள்ளது என்று அறிந்தால், குறுகிய கால முதலீடு செய்யுங்கள். ரிஸ்க் தன்மை பரவலாக உள்ளது என்றால், ஒரு சில வருடங்கள் (அ) நீண்ட கால முதலீட்டிற்கு செல்லுங்கள்.
*கவனிக்க:
- நீங்கள் செய்யும் எந்த முதலீடாக இருந்தாலும் சரி, பண பாதுகாப்பை பற்றியும், கையெழுத்திடும் ஆவணங்களை பற்றியும் அறிந்த பிறகே முடிவெடுங்கள்.
முதலீடும் திருவினையாக்கும்… !!
நன்றி, வர்த்தக மதுரை