மீட்கப்பட்ட நிறுவனங்கள், துணிச்சலான பங்குகள் – இந்த வார நிகழ்ச்சி நிரல்
Rising up from the Ashes – Bankruptcy to Brave – Webinar Meet
பங்குச்சந்தையில் பணம் பண்ணுவது எளிமையாக தெரிந்தாலும், தொழிலுக்கான அடிப்படை தன்மைகளை அறியாமல் ஒரு நிறுவனத்தை அவ்வளவு எளிதாக எடை போட்டு விட முடியாது. நூறு வருட அனுபவம் கொண்ட நிறுவனங்கள், தங்களை புதிய தொழில்நுட்பம் மற்றும் மாற்றத்திற்கு உட்படுத்தாத நிலையில் இன்று காணாமல் போயுள்ளன.
2008ம் ஆண்டு வாக்கில் நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர் மற்றும் உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகித்த திரு. அனில் அம்பானி, இன்று தனது பெரும்பாலான நிறுவனங்களை அடகு வைத்து திவால் நிலைக்கு சென்று விட்டார்(உங்கள் செல்வத்தை அழிக்கும் பங்குச்சந்தையின் கதை)
. சொல்லப்பட்ட வருடத்தில் பங்கு ஒன்று 800 ரூபாய்க்கு மேலாக வர்த்தகமாகியிருந்த நிலையில், நடப்பு 2021ம் வருடத்தில் இந்த பங்கு 2 ரூபாய்க்கு குறைவாக வர்த்தகமாகி வருகிறது.
இதற்கு காரணமாக சொல்லப்படுவது தொழிலில் அடைந்த தோல்வி – நிர்வாக குறைபாடு, அதிக கடன், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, தொழில்நுட்பத்தில் தவறான அணுகுமுறை ஆகியவை தான். இது போன்ற ஏராளமான நிறுவனங்களை நாம் உதாரணமாக சொல்லலாம். அரசு பொதுத்துறை நிறுவனங்கள் திவாலானால், அதனை களைய அரசு செயல்படும். ஆனால் தனியார் நிறுவனங்களின் செயல்பாடு அவ்வாறு இருப்பதில்லை. யாரேனும் அந்த நிறுவனத்தின் தொழிலை கையகப்படுத்த வேண்டும்.
அதே 2008ம் வருடத்தில் பெரிதும் பிரபலமாகாத மற்றொரு சகோதரர் திரு. முகேஷ் அம்பானி, இன்று நாட்டின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடமும், உலகளவில் முதல் பத்து இடங்களுக்குள் அங்கம் வகிக்கிறார். எப்படி இருப்பினும், அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த நிறுவனங்கள் சரிவர தொழில் புரியவில்லை என்றால், அது முதலீட்டாளர்களுக்கு தான் நட்டம்.
இன்னும் சில நிறுவனங்கள் திவால் நிலைக்கு அருகில் சென்றிருந்தும், பின்பு துணிச்சலாக மீட்கப்பட்டு இன்று முதலீட்டாளர்கள் வரவேற்கும் பங்குகளாக மாறியுள்ளன. அதன் அடிப்படை பகுப்பாய்வு காரணிகளும்(Fundamental Parameters) சிறப்பாக உள்ளன. ஆனால் இது போன்ற நிறுவனங்களை நாம் எளிமையாக கண்டுபிடித்து விட முடியாது.
மீட்கப்பட்ட நிறுவனங்களை பற்றியும், துணிச்சலான அந்த காரணத்தையும் அறிவோம், வாங்க…
இணைய வழியிலான நிகழ்ச்சி நிரல்(Webinar):
- 3 நிறுவன பங்குகள் & மூன்று வெவ்வேறு துறைகள்
- பங்கு முதலீட்டு போர்ட்போலியோ(Stock Portfolio) எவ்வாறு இருக்க வேண்டும் ?
- முதலீட்டாளர்களுக்கான ஆறு முதலீட்டு ரகசியங்கள்
- மீட்கப்பட்ட நிறுவனங்களை கண்டறிவது எப்படி ?
- புதிய திட்டங்களும், முதலீட்டு கற்றலும்
பதிவுக்கு: https://imjo.in/N3sGmA
பதிவுக்கு பின், நிகழ்ச்சிக்கான இணைப்பு உங்களுக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
பொறுப்பு-துறப்பு:
இந்த நிகழ்ச்சி நிரல் பங்குச்சந்தை அடிப்படை கற்றலுக்கான இணைப்பு மட்டுமே. இங்கே எந்தவொரு பங்குகளும் பரிந்துரைக்கப்படாது, அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) கொண்டு அலசப்படும் பங்குகள் விளக்கத்திற்கு மட்டுமே. முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை