2020ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவாகவே இருக்கும் – சர்வேதச நாணய நிதியம்
India’s GDP for FY20 would be 4.8 Percent – IMF Projection
நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த செப்டம்பர் காலாண்டு முடிவில் 4.5 சதவீதமாக இருந்தது. இது ஆறு வருட கால குறைவான விகிதமாக சொல்லப்பட்டது. இன்னும் டிசம்பர் 2019 காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் 2019-20ம் நிதியாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி(GDP Growth) 4.8 சதவீதமாக இருக்கும் என சர்வேதச நாணய நிதியம் குறைத்து மதிப்பிட்டுள்ளது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
உலகளாவிய பொருளாதார காரணிகள் ஒருபுறம் இருந்தாலும், உள்நாட்டில் நிலவும் காரணிகளும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதித்துள்ளன. கடந்த அக்டோபர் மாத அறிக்கையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என கணித்த சர்வேதச நாணய நிதியம்(IMF), தற்போது இந்த மதிப்பீட்டை குறைத்து வெளியிட்டுள்ளது.
வளர்ச்சியை குறைத்து மதிப்பிட்டதற்கு காரணமாக சொல்லப்படுவது, ‘ வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில் காணப்படும் பிரச்சனைகள் மற்றும் கிராமப்புறங்களில் நிலவும் குறைவான வருமான வளர்ச்சி ஆகியவையே. நிறுவனங்களுக்கான வரி குறைப்பு நடவடிக்கை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதாக ஊக்குவிக்கப்போவதில்லை.
அதற்கு மாறாக உட்கட்டமைப்பை மேம்படுத்தி அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இதன் மூலம் கிராமப்புற வருவாயும் மேம்படும். இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை வலுப்படுத்தும் ‘ எனவும் சொல்லப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2019-20ம் ஆண்டில் 4.8 சதவீதமாகவும், இதுவே 2020-21ம் நிதியாண்டில் 5.8 சதவீதமாகவும் மற்றும் 2021-22ம் ஆண்டில் 6.5 சதவீதமாக இருக்கலாம் என நாணய நிதியம் கூறியுள்ளது. இது போல உலக பொருளாதார வளர்ச்சி(World GDP) மதிப்பீட்டையும் குறைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 2.9 சதவீதமும், 2020-21ம் ஆண்டில் 3.3 சதவீதம் மற்றும் 2021-22ம் நிதியாண்டில் 3.4 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 2019-20ம் நிதியாண்டில் 2.3 சதவீதமாக இருக்கும் எனவும், அதே வேளையில் சீனாவின் வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் எனவும் சர்வேதச நாணயம் நிதியம் கூறியுள்ளது. ஏறக்குறைய அனைத்து வளரும் நாடுகளின் வளர்ச்சியும் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வேகமாக வளரும் நாடுகளின் (Emerging Economy) வரிசையில் இந்தியா கடந்த சில காலாண்டுகளாக பின்னுக்கு செல்கிறது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நாட்டின் பொருளாதார மதிப்பு சுமார் 2.8 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா அடுத்த 7-10 வருடங்களில் பொருளாதார மதிப்பில் வல்லரசான அமெரிக்காவை வீழ்த்தலாம் என ஒரு கணிப்பு கூறுகிறது. அதே வேளையில் சீன நாட்டின் வளர்ச்சி அடுத்த 30-50 வருடங்களில் அபரிதமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை