ஒரே வருடத்தில் ஒரு லட்சம் ரூபாயை 2.5 லட்சம் ரூபாயாக மாற்றிய எச்.டி.எப்.சி.(HDFC Mutual Fund) மியூச்சுவல் பண்ட் பங்கு
153 Percent Returns in a year – HDFC Asset Management Company – Mutual Fund
எச்.டி.எப்.சி.(HDFC) குழுமத்தின் துணை நிறுவனமான எச்.டி.எப்.சி. அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனி(HDFC Asset Management Company) பரஸ்பர நிதி துறையில் தனது சேவையை அளித்து வருகிறது. டிசம்பர் 2019 மாத முடிவின் படி, எச்.டி.எப்.சி. மியூச்சுவல் பண்ட் நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ. 3.82 லட்சம் கோடி. வேறு எந்த பரஸ்பர நிதியும் இந்தளவு தொகையை கொண்டிருக்காததால், தற்போது எச்.டி.எப்.சி. பரஸ்பர நிதி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இரண்டாம் இடத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. மியூச்சுவல் பண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் எஸ்.பி.ஐ. மியூச்சுவல் பண்டு நிறுவனமும் உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில் எச்.டி.எப்.சி. அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. அப்போதைய பங்கு ஒன்றின் விலை ரூ. 1100 என வெளியிடப்பட்டது. தற்போது இந்த நிறுவன பங்கு ஒன்றின் விலை ரூ. 3,178.
எச்.டி.எப்.சி. மியூச்சுவல் பண்டு(Mutual Fund) நிறுவனத்தின் சந்தை மதிப்பு 67,600 கோடி ரூபாய். பரஸ்பர நிதி துறையில் சேவை புரிவதால், நிறுவனத்திற்கு கடன் எதுவும் இல்லை. வட்டி பாதுகாப்பு விகிதமும் 258 மடங்கில் உள்ளது முதலீட்டாளருக்கு சாதகமான அம்சம். நிறுவனர்களின் பங்களிப்பு 80 சதவீதமாக உள்ளது.
கடந்த மூன்று வருட கால விற்பனை வளர்ச்சி 11 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 25 சதவீதமாகவும் உள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இந்த பங்கின் விலை ரூ. 1,470 என்ற விலையில் வர்த்தகமாகி கொண்டிருந்தது. 52 வார உச்சபட்ச விலையாக பங்கு ஒன்றுக்கு ரூ. 3,844 வரை சென்றுள்ளது. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 150 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது.
அதாவது ஒரு வருடத்திற்கு முன்பு, நாம் ரூ. 1 லட்சத்தை இந்த பங்கில் முதலீடு செய்திருந்தால், பங்கு ஒன்றுக்கு 3,800 ரூபாய் என்ற விலையில் விற்கும் போது, நமக்கு கிடைக்கப்பெறுவது ரூ. 2.58 லட்சம். லாபம் மட்டுமே 1.58 லட்சம் ரூபாய் என அளவிடப்படுகிறது.
டிசம்பர் 2019 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 525 கோடியாகவும், செலவினம் 111 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ. 466 கோடி மற்றும் மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம்(Net Profit) 353 கோடி ரூபாய். கடந்த டிசம்பர் 2018 காலாண்டில் நிகர லாபம் 243 கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது சொல்லப்பட்ட லாபம் 45 சதவீதம் கூடுதலாகும்.
2018-19ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 2,075 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 931 கோடி ரூபாயாகவும் இருந்தது. செப்டம்பர் 2019 காலாண்டு முடிவின் படி, நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ. 3,307 கோடி. பங்கு முதலீட்டின் மீதான வருவாய்(ROE) கடந்த ஒரு வருடத்தில் 35 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை