95 கோடி மக்களின் பணம் ஒரு சதவீத பணக்கார இந்தியர்களிடம் – அதிர்ச்சி தரும் உலகளாவிய சமத்துவமின்மை அறிக்கை
1 % of Richest Indians hold more than 4 Times of Wealth held by the 95.3 Crore Citizens
பணக்காரர்கள் பணக்காரர்களாக மாறுகின்றனர், ஏழைகள் ஏழைகளாகவே வாழ்கின்றனர் – இன்னும் ஓயாத உலக பிரச்சனை இது தான். வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் அடிப்படை தேவை மற்றும் வேலைவாய்ப்பு என நாம் சொல்லிக்கொண்டே சென்றாலும், இன்றும் பணக்காரர்கள் – ஏழைகளுக்கு இடையிலான வளம் சார்ந்த இடைவெளி அதிகரித்து கொண்டு தான் செல்கிறது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
திரைப்படங்களில் வேண்டுமானால் ஏழையாக பிறக்கும் கதாநாயகன் பணக்காரனாக மாறலாம். இல்லையெனில் மக்களுக்காக போராடி, பணக்கார வில்லனை வீழ்த்தலாம். அங்கேயே பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கான மோதல் ஆரம்பித்து விட்டது. உண்மையில் ஒரு ஏழை பணக்காரராவதற்கான வழிமுறையை நம் அடிப்படை கல்வி சொல்லித்தரவில்லை. அதற்கு மாறாக ஆடம்பரத்தை மட்டுமே நாம் விரும்புகிறோம்.
ஆக்ஸ்பேம்(Oxfam) நிறுவனம் கென்யாவின் நைரோபி நகரத்தை தலைமையிடமாக கொண்டு, வறுமை ஒழிப்பு சார்ந்த சேவையை புரிந்து வருகிறது. இந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் உள்ள பணக்காரர்களின் வளம், உலக சமத்துவமின்மை விகிதம் ஆகியவற்றை அறிக்கையாக வெளியிட்டு வருகிறது.
சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையிலான அதிர்ச்சி தரும் சில விஷயங்களை கூறியிருந்தது. உலகின் 60 சதவீத மக்கள் சம்பாதிக்கும் பணத்தை காட்டிலும், அதிக சொத்து மதிப்பு கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை வெறும் 2,153 பில்லினியர்கள். ஆப்பிரிக்காவில் உள்ள அனைத்து பெண்கள் சம்பாதிக்கும் வளத்தை விட அதிக சொத்து, உலகின் 22 பணக்காரர்களிடம் உள்ளது.
நம் நாட்டில் 95.3 கோடி மக்களின் வளத்தை காட்டிலும் நான்கு மடங்கில் ஒரு சதவீத இந்தியர்களிடம் உள்ளது என அதிர்ச்சி கொடுக்கிறது ஆக்ஸ்பேம். அதாவது நாட்டில் உள்ள 70 சதவீத மக்களின் வளம் வெறும் ஒரு சதவீத பணக்காரரர்களிடம். நாட்டில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தின் தலைமை அதிகாரி சம்பாதிக்கும் ஒரு வருட வருவாயை பெற, பெண் ஊழியர் ஒருவர் 22,277 வருடங்கள் வேலை பார்த்தாக வேண்டும். அவர் பத்து நிமிடங்களில் சேர்க்கும் பணத்தை, தொழிலாளர் ஒருவர் ஒரு வருடம் முழுவதும் உழைத்தால் மட்டுமே கிடைக்கும்.
நாட்டில் உள்ள 63 மிகப்பெரிய பணக்காரர்களின் சொத்து மதிப்பு, நாட்டின் பட்ஜெட் மதிப்பை(2018-19 – ரூ. 24.42 லட்சம் கோடி) காட்டிலும் அதிகமாக உள்ளது. உலகளாவிய சமத்துவமின்மை(Global Inequality) ஒவ்வொரு காலத்திலும் அதிகரித்த வண்ணம் உள்ளதாக ஆக்ஸ்பேம் தெரிவித்துள்ளது. கடந்த தசாப்தத்தில்(Decade) உள்ள கோடீஸ்வரர்களின் வளம் குறைந்திருந்தாலும், இம்முறை கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உள்ளது.
சமத்துவம் சார்ந்த கொள்கைகள் வழிவகுக்கப்பட்டால் ஒழிய பணக்காரர்கள் – ஏழைகளுக்கு இடையிலான இடைவெளியை குறைக்க இயலாது என இந்த கூட்டமைப்பு சொல்கிறது. நிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்கள் தங்கள் வரியை நியாயமாக செலுத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டுமெனவும், கிடைக்கும் வரி பணத்தை அரசு முறையாக பொது சேவைகள் மற்றும் உட்கட்டமைப்புக்கு பயன்படுத்துவதை கண்காணிக்கும் முறைகள் கையாளப்பட வேண்டும் எனவும் ஆக்ஸ்பேம் மேற்கோள் காட்டுகிறது.
ஒரு பிரபல தொழில்முனைவோரிடம் கேட்ட உரையாடல், ‘ அரசின் கொள்கைகள் மற்றும் தொழில் புரிவதற்கான அம்சங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கூட்டு சேர்ந்து தொழில் புரிய ஆவல் காட்ட வேண்டும். லஞ்சம் ஏதும் கொடுக்காமல் கால தாமதமானாலும், நேர்மையாக அரசின் செயல்பாடுகளை அணுக வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நிதி சார்ந்து முன்னேறினால் தான் உண்மையான பணக்காரர்கள் உருவெடுப்பர்.
பணம் சார்ந்த கல்வியை கற்க வேண்டும். சேமிப்பு மற்றும் முதலீட்டின் அவசியத்தை உணர வேண்டும். இளம் வயதில் தொழில் புரிய சிறிய அளவில் ரிஸ்க் எடுக்க அஞ்ச கூடாது. அனைவரும் படித்து விட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நிலையை மாற்றி, பலர் தொழில்முனைவை தேர்ந்தெடுத்து வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அப்போது தான் அனைவருக்கும் பொருளாதார தன்னிறைவு கிடைக்கப்பெறும். இல்லையெனில், நம் நாட்டில் வயதானவர்களும், இளம் சிறார்களும் தங்கள் குடும்ப சூழ்நிலைக்காக வேலைக்கு செல்ல வேண்டியிருக்கும். ‘
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை