HDFC Bank logo

லாபத்திற்கு மட்டுமே பெயர் போன தனியார் வங்கி ஜாம்பவான் – எச்.டி.எப்.சி. வங்கி

லாபத்திற்கு மட்டுமே பெயர் போன தனியார் வங்கி ஜாம்பவான் – எச்.டி.எப்.சி. வங்கி 

India’s Largest Private Sector Bank – HDFC Bank – Q3FY20

வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவனமான எச்.டி.எப்.சி.(HDFC) குழுமத்தின் ஒரு அங்கம் தான் எச்.டி.எப்.சி. வங்கி. துணை நிறுவனமாக செயல்படும் இந்த வங்கி, நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியாகவும் செயல்படுகிறது. இதன் இந்திய சந்தை மதிப்பு சுமார் ரூ. 7 லட்சம் கோடி.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நிதி சேவையில் உள்ள இந்த வங்கி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி பணியாளர்களை கொண்டு சேவை புரிந்து வருகிறது. கடந்த ஆண்டில் உலகின் சிறந்த பிராண்டுகளில் 60வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 25 வருடங்களுக்கு முன்னர் துவங்கப்பட்ட எச்.டி.எப்.சி. வங்கி(HDFC Bank) இன்று 2,700 நகரங்களில் 5,500க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு, இதுவரை 2.5 கோடி டெபிட் கார்டுகள் மற்றும் 1.3 கிரெடிட் கார்டுகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ளது.

வங்கியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 11.89 லட்சம் கோடி. இன்று அனைத்து பரஸ்பர நிதி சேவைகளின் திட்டத்தில்(Mutual Funds Scheme Portfolio) முன்னிலை வகிப்பது எச்.டி.எப்.சி. வங்கி தான். வங்கியின் மீதான நம்பிக்கையால் இந்த நிறுவனத்தின் பங்கு விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த 10 வருடங்களில் இந்த பங்கின் விலை 22.50 சதவீத ஏற்றத்தை பெற்றுள்ளது. போனஸ் மற்றும் டிவிடெண்ட் தொகைகள் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை.

2019-20ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் வங்கியின் வருவாய் ரூ. 29,370 கோடி என சொல்லப்பட்டுள்ளது. நிதி லாபமாக ரூ. 3,233 கோடியும், வரிக்கு முந்தைய லாபமாக ரூ. 9,902 கோடியும் உள்ளது. வங்கியின் நிகர லாபமாக ரூ. 7,416 கோடி சொல்லப்பட்டுள்ளது. கடந்த 2018-19ம் ஆண்டின் டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடும் போது, தற்போதைய நிகர லாபம் 33 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது. இம்முறை இதர வருவாய் நிகர லாபத்தை ஊக்குவித்துள்ளது.

வங்கியின் வருவாய் கடந்த 10 வருடங்களில் 20 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. இது போல வங்கியின் லாப வளர்ச்சியும் கடந்த பத்து வருட காலத்தில் 25 சதவீதமாக இருக்கிறது. பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(ROE), பத்து வருடங்களில் 18 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பாக ரூ. 1.48 லட்சம் கோடி உள்ளது. மொத்த வாராக்கடன் விகிதம், கடந்த டிசம்பர் 2019 காலாண்டில் 1.45 சதவீதமாக உள்ளது. நிகர வாராக்கடன் 0.48 சதவீதமாக உள்ளது. இது 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், மொத்த வாராக்கடன் 1.38 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் விகிதம் 0.42 சதவீதமாகவும் இருக்கிறது. பொறுப்புகளுக்கான ஒதுக்கீடு(Provisions) மூன்றாம் காலாண்டில் 38 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கான ஒதுக்கீட்டு தொகை முன்னர் ரூ. 2,211 கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ. 3,043 கோடி என சொல்லப்பட்டுள்ளது.

எச்.டி.எப்.சி. வங்கியின் கடன்-பங்கு விகிதம் 6.97 மற்றும் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 1.64 மடங்கில் உள்ளது. பொதுவாக மற்ற துறையில் உள்ள நிறுவனங்களின் கடன்-பங்கு மற்றும் வட்டி பாதுகாப்பு விகிதத்துடன் வங்கித்துறையில் உள்ள நிறுவனங்களை ஒப்பிட கூடாது. ஏனெனில், நிதித்துறையில் கடன் வழங்கினால் மட்டுமே வருவாய் கிடைக்கப்பெறும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s