விப்ரோ நிறுவன மூன்றாம் காலாண்டு நிகர லாபம் ரூ. 2,456 கோடி
Wipro Q3FY20 Net profit of Rs. 2,456 Crore – Quarterly Results
இந்திய தொழில்நுட்ப பன்னாட்டு நிறுவனமான விப்ரோ, ஐ.டி. சேவையில் உள்ள முக்கிய நிறுவனமாக செயல்படுகிறது. ஆரம்ப காலத்தில் காய்கறிகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து வந்த நிறுவனம் (Western India Palm Refined Oil Ltd) பின்னர், தன்னை ஒரு ஐ.டி. நிறுவனமாக மாற்றி கொண்டது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த நிறுவனத்தின் சேவை 50க்கு மேற்பட்ட நாடுகளிலும், நிறுவன பணியாளர்களின் எண்ணிக்கை 1.70 லட்சத்திற்கு மேற்பட்டதாகவும் உள்ளது. கிசான், சன் பிளவர், கேமல்(Camel), துளசி, செந்தூர் பவுடர்(Santoor Talcum), விப்ரோ ஜாஸ்மின் மற்றும் விப்ரோ பேபி சாப்ட் ஆகியவை இதன் முக்கிய பிராண்டுகளாக வலம் வந்தன.
2019ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 12 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் வருவாய் 8.47 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என சொல்லப்பட்டுள்ளது. விப்ரோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 1.41 லட்சம் கோடி ரூபாய். நிறுவனர்களின் பங்களிப்பு(Promoters Holding) 74 சதவீதமாகவும், நிறுவன கடன் 9,000 கோடி ரூபாயாகவும் உள்ளது.
நிறுவன கடன் ஓரளவு இருந்தாலும், அதன் கடன்-பங்கு (Debt to Equity) விகிதம் 0.20 க்கு கீழ் தான் உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 16 மடங்கிலும், இருப்புநிலை கையிருப்பு ரூ. 49,940 கோடியாக உள்ளது. 2019-20ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 15,470 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ. 12,290 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது.
வரிக்கு முந்தைய லாபம் ரூ. 3,079 கோடி மற்றும் நிகர லாபம் ரூ. 2,456 கோடியாகவும் உள்ளது. இது கடந்த டிசம்பர் 2018 காலத்தில் ரூ. 15,060 கோடி வருவாயாகவும், நிகர லாபம் ரூ. 2,510 கோடியாகவும் இருந்துள்ளது. ஆக, காலாண்டு நிகர லாபம் இம்முறை குறைந்துள்ளது.
நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த மூன்று வருடங்களில் 5 சதவீதமும், ஐந்து வருடங்களில் 6 சதவீதம் மற்றும் 10 வருட கால அளவில் 9 சதவீதமாகவும் உள்ளது. இது போல லாப வளர்ச்சி(Profit Growth) ஐந்து வருட கால அளவில் 3 சதவீதமும், 10 வருடங்களில் 9 சதவீதமாகவும் உள்ளது.
நிறுவனத்தின் பங்கு விலை கடந்த மூன்று வருடங்களில் 11 சதவீதம், ஐந்து மற்றும் பத்து வருட கால அளவில் 4 சதவீதமும் விலை உயர்ந்துள்ளது. போனஸ் பங்குகள் மற்றும் டிவிடெண்ட் தொகைகள் இங்கு சேர்க்கப்படவில்லை. இதன் அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) பின்னொரு நாளில் காண்போம். (போனஸ் பங்குகளை கொண்டு கோடிகளை அள்ளிக்கொடுத்த விப்ரோ )
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை