Motorcycle Auto sales

வாகனத்துறை 2019 மறு பார்வை – எச்சரிக்கை தேவை

வாகனத்துறை 2019 மறு பார்வை – எச்சரிக்கை தேவை 

How was the Automobile Sector in India ? – December 2019 Review

இந்திய வாகனத்துறை கடந்த 2019ம் வருடம் முழுவதும் சுணக்கத்தில் தான் இருந்தது. பி.எஸ். 6 (Bharat Stage VI) சுழற்சி முறைக்கான விதிமுறைகள் வரும் ஏப்ரல் 1, 2020 முதல் அமல்படுத்தப்பட உள்ளன. எனவே நாட்டில் உள்ள அனைத்து வாகன உற்பத்தியாளர்களும், வரும் 2020-21ம் நிதியாண்டு முதல்  பி.எஸ். 6 ரக இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மட்டுமே தயாரிக்க வேண்டும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஏப்ரல் 1, 2020 முதல் பி.எஸ். 6 ரக வாகனங்களை மட்டுமே விற்க வேண்டும் மற்றும் பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனத்துறை கடந்த டிசம்பர் மாதத்திலும் விற்பனையில் தொய்வான நிலையை தான் எட்டியது.

இருப்பினும், இந்த தேக்கநிலை வரும் காலங்களில் சரி செய்யப்படலாம். வரும் காலங்களில் மின்னணு சார்ந்த வாகனங்களுக்கு(EV) முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், வாகனத்துறை மற்றும் அதனை சார்ந்த தொழில்நுட்பம் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்த துறையில் வரும் நாட்களில் அதிகப்படியான வேலையிழப்புகளும், அதே வேளையில் புதிய வேலைவாய்ப்புக்கான சூழலும் ஏற்படலாம்.

கடந்த டிசம்பர் 2019 காலத்தில் வாகனத்துறை வளர்ச்சி 13 சதவீதம் சரிந்துள்ளது. இது கடந்த 15 வருடங்களில் காணப்பட்ட குறைந்த வளர்ச்சி விகிதமாக சொல்லப்படுகிறது. முக்கிய காரணியாக பயணிகள் வாகனங்களும், இரு சக்கர வாகனம் மற்றும் வணிக வாகனங்களின் விற்பனை வளர்ச்சி சரிந்துள்ளது.

இரு சக்கர வாகனங்களின் விற்பனை வளர்ச்சி 12 சதவீதமும், பயணிகள் கார் விற்பனை வளர்ச்சி 8.50 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஏப்ரல் முதல் டிசம்பர் 2019 வரையிலான காலத்தில் பயணிகள் வாகனங்கள் 16.40 சதவீத சரிவை சந்தித்துள்ளன. சொல்லப்பட்ட காலத்தில் ஒட்டுமொத்த வணிக வாகனங்கள்  விற்பனை 21 சதவீதம் சரிவடைந்துள்ளது.

இரு சக்கர வாகனங்கள் ஏப்ரல் – டிசம்பர் 2019 காலத்தில் 16 சதவீதம் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த காலத்தில் நாட்டின் ஒட்டுமொத்த வாகன ஏற்றுமதி 3.86 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

டிசம்பர் மாதத்தில் அசோக் லேலண்ட்(Ashok Leyland) நிறுவனம் வாகன விற்பனையில் 28 சதவீதம் சரிவடைந்துள்ளது. இது போல ராயல் என்பீல்ட்(Royal Enfield – Eicher Motors) 13 சதவீதம், ஹீரோ மோட்டார் 6.50 சதவீதம் மற்றும் மாருதி விற்பனை 4 சதவீதம் என்ற அளவிலும் விற்பனையில் சரிவை சந்தித்துள்ளன. டி.வி.எஸ். மோட்டார் மற்றும் டாட்டா மோட்டார்ஸ் இரண்டும் 14 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளன. பஜாஜ் ஆட்டோ நிறுவனமும், மஹிந்திரா நிறுவனமும் விற்பனை வளர்ச்சியில் தொய்வை சந்தித்துள்ளன.

அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) பூர்த்தி செய்யும் நிறுவனங்களை இந்த துறையில் கண்டறிந்து, பங்கு விலை மலிவாக கிடைக்கப்பெறும் போது, சிறு அளவில் முதலீடு செய்வது சாதகமான அம்சமாக இருக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s