18 பொதுத்துறை வங்கிகள், 32,000 கோடி ரூபாய் மோசடி – பாரத ரிசர்வ் வங்கி தகவல்
Rs. 32K Crore worth of Scams in 18 PSU Banks – RBI
சமீபத்தில் பாரத ரிசர்வ் வங்கி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்த 2018-19ம் நிதியாண்டில் வங்கி மோசடி சார்பாக 3,760 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக கூறியிருந்தது. இதன் மதிப்பு சுமார் 71,500 கோடி ரூபாய் எனவும், மோசடி நடந்த வங்கிகளில் பெரும்பாலும் பொதுத்துறை வங்கிகள் தான் அதிகமுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
2017-18ம் நிதியாண்டை காட்டிலும் 2018-19ம் நிதியாண்டில் வங்கி மோசடிகளின் அளவு 15 சதவீதம் அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது. பெரிய தொகை அளவிலான மோசடிகள் தான் அதிகம் இருந்ததாகவும், சிறிய தொகையான ரூ. 1 லட்சத்திற்கு குறைவான மோசடிகளின் (Bank Frauds) அளவு 0.1 சதவீதம் என்ற அளவில் மட்டுமே இருந்துள்ளதாகவும் பாரத ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
100 கோடி ரூபாய்க்கும் மேலான மோசடிகளை கண்டறிய வங்கிகளுக்கு நான்கு முதல் ஐந்து வருட காலம் தேவைப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது. நடப்பு 2019-20ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் பொதுத்துறை வங்கிகளில்(PSU Banks) நடைபெற்ற மோசடி வழக்குகள் 2,480. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 32,000 கோடி ரூபாய் எனவும், இந்த மோசடிகள் 18 பொதுத்துறை வங்கிகளில் நிகழ்ந்துள்ளதாகவும் பாரத ரிசர்வ் வாங்கி(RBI) கூறியுள்ளது.
சொல்லப்பட்ட 32,000 கோடி ரூபாய் வங்கி மோசடியில், ஸ்டேட் வங்கியில்(State Bank of India) மட்டும் சுமார் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடிகள் நடைபெற்றுள்ளது. முதல் காலாண்டில் ஸ்டேட் வங்கியின் சார்பாக பதியப்பட்ட மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 1200 ஆகும்.
மோசடி நடைபெற்ற பொதுத்துறை வங்கிகளில் கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிண்டிகேட், ஓரியண்டல், பரோடா மற்றும் யூனியன் வங்கி ஆகியவையும் அடக்கம். சிண்டிகேட் வங்கியில் சுமார் 800 கோடி ரூபாய் அளவிலான மோசடியும், கார்பொரேஷன்(Corporation Bank) வங்கியில் 960 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடியும் நடைபெற்றுள்ளது.
பரோடா(Bank of Baroda) மற்றும் ஓரியண்டல் வங்கி முறையே ரூ. 2,300 கோடி மற்றும் 2,130 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடிகள் 2019-20ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டில் நடந்துள்ளது. இதே போல் கனரா மற்றும் சென்ட்ரல் வங்கிகளிலும் சுமார் 2,000 கோடி ரூபாய் அளவிலான மோசடிகள் நடைபெற்றுள்ளது. வங்கி மோசடி சார்ந்து பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 42 வழக்குகளும், யூகோ வங்கியில்(UCO Bank) 34 வழக்குகளும், யூனியன் வங்கியில் 51 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.
பொதுத்துறை வங்கிகள் நஷ்டத்தில் இயங்கி வருவதும், வாராக்கடன் அளவு அதிகரிப்பதும் இது போன்ற காரணங்களால் தான் என சொல்லப்பட்டிருக்கிறது. நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் மோசடிகளின் விகிதம் ஒவ்வொரு காலத்திலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை