Street Beg Economy slow down

இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்கிறதா ?

இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்கிறதா ?

Economy Slow down – Is the Indian Economy Falling 

 

கடந்த சில காலாண்டுகளாக இந்திய சந்தை நிறுவனங்களின் வருவாய் குறைந்து வருவதும், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் மந்தமடைந்து வருவதும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்குவிப்பதாக இல்லை. குறிப்பாக வாகன துறை விற்பனை வளர்ச்சியில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.

 

எளிமையாக சொன்னால், நாட்டில் உள்ள வங்கிகளின் நிதி நிலைமை மோசமாகி உள்ளது மற்றும் அதனை சார்ந்து மற்ற தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. வங்கிகளின் வாராக்கடன் மற்றும் நிர்வாக குறைபாட்டால் பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள்(PSU Banks Merger) இணைக்கப்பட்டு வந்தன. இருப்பினும் வங்கிகளில் ஏற்படும் நிதி மோசடிகள்(Scam), வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில் நடைபெற்று கொண்டிருக்கும் பணப்புழக்க நெருக்கடி ஆகியவை வரும் நாட்களில் தொழில்களை ஊக்குவிப்பதற்கு சாதகமாக இல்லை.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வங்கிகளில் ஏற்பட்டுள்ள நிதி பிரச்னைகள் தீடீரென்று ஏற்பட்ட விஷயமல்ல. கடந்த காலங்களில் நடந்த மோசடிகள், இடர் மேலாண்மை குறைபாடு ஆகியவையே இன்று வங்கிகளில் வாராக்கடனாக வந்துள்ளன. சமீபத்திய பட்ஜெட் அறிவிப்பும் இதனை வெளிப்படுத்தவே செய்கிறது.

 

வளர்ந்து வரும் சந்தையில் வேகமாக வளரும் நாடாக இந்தியா இருந்து வந்தாலும், கடந்த சில காலங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி சார்ந்த பிரச்னைகள் மற்றும் குழப்பங்கள் இந்திய பொருளாதாரத்தை வீழ்ச்சியை நோக்கி எடுத்து செல்கிறதா என்ற ஐயமும் ஏற்பட்டுள்ளது. உலகளவில் வர்த்தக போர், எல்லை பதற்றம், அணு ஒப்பந்தம் போன்ற காரணிகள் பொருளாதாரத்தை பாதிக்க நேரிட்டாலும், தற்போது உள்நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நிலைமை(Financial Crisis) விரைவாக சரி செய்யப்படுமா என்பது சந்தேகமே.

 

பட்ஜெட் அறிவிப்பில் துறை வாரியாக முக்கியத்துவம் கொடுக்கப்படாமல், வங்கிகள் மற்றும் அதனை சார்ந்த நிதி துறையை மட்டுமே அரசு கவனம் செலுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. பொதுத்துறை வங்கிகளில் 70,000 ரூபாய் கோடி அளவில் மறுமூலதனம் செய்யப்படுவது, வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில்(NBFC) ஏற்பட்டுள்ள நிதிச்சிக்கலை களைவது என அரசு பல்வேறு விஷயங்களை செய்து வருகிறது.

 

நிதி பற்றாக்குறையை சரி செய்வதற்கான காரணியாக வங்கிகளின் நிதி நிலைமையை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. தனிநபர் வருமான வரி வரம்பில் மாற்றம் செய்யப்படாதது, வாகனத்துறையில் உள்ள சிக்கலை சரி செய்யாமல் மின்சார வாகனங்களுக்கான சலுகை, பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்களிப்பை குறைப்பது மற்றும் பங்கு விலக்கல் இலக்கு(Disinvestment) ரூ. 1.05 லட்சம் கோடியாக நிர்ணயம் ஆகியவை நிதி சார்ந்த சிக்கலை தான் சொல்கிறது.

 

இதனிடையே பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் நிறுவனர்களின் பங்களிப்பை குறைப்பது மற்றும் பங்குகளை திரும்ப பெறுவதற்கான(Buyback of Shares) முறையில் 20 சதவீத வரி ஆகியவை இந்திய பங்குச்சந்தைக்கு பாதகமாக அமைந்துள்ளன. அந்நிய முதலீட்டாளர்களின்(FPI) வரி கொள்கையிலும் அரசு சலுகை அளிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் ஆண்டுக்கு ரூ. 2 கோடிக்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கான வரி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் பொருளாதாரத்தில் சுணக்கத்தை ஏற்படுத்தலாம்.

 

சாலை, உட்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் சுகாதாரத்திற்கு திட்டங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் இவை முழுமையாக வளர்ச்சி பெறும் நிலையில் மட்டுமே அவை பொருளாதாரத்திற்கு ஊக்குவிக்கும். இல்லையெனில், சொல்லப்பட்ட விஷயங்கள் நடுத்தர மக்கள் வாழ்வில் எதிர்மறை நிகழ்வை ஏற்படுத்தும் வாய்ப்புண்டு.  கல்வித்திறனை மேம்படுத்துவது மட்டுமில்லாமல் அவை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவை உறுதிப்படுத்த வேண்டும்.

 

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்துவதன் மூலமே, அவை தனிநபர் வருமானத்திலும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் உறுதுணையாக அமையும். வரும் நாட்களில் அரசின் கொள்கைகளும், அதனை சார்ந்த திட்டங்களும் மக்களுக்கு பயன் தருமா என்பதை கவனத்தில் கொள்ளலாம். அதே வேளையில் 5 ட்ரில்லியன் பொருளாதார இலக்கு($5 Trillion Economy) என்பதை விட, அத்தியாவசிய  தேவைகளுக்கு அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைமை மக்களுக்கு ஏற்படாமல் இருந்தால் நல்லது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s