இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நான்காம் காலாண்டு லாபம் ரூ. 6,099 கோடி
Indian Oil Corporation(IOC) Q4FY19 net profit rises to Rs. 6,099 Crore
பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்(IOC) புது டில்லியை தலைமையிடமாக கொண்டு எண்ணெய் மற்றும் எரிவாயு சார்ந்த தொழிலை செய்து வருகிறது. இந்த நிறுவனம் தனது 2018-19ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிகர லாபமாக 6,099 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் 5,218 கோடி ரூபாயாக இருந்தது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மார்ச் மாத காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 1,26,214 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.1,15,338 கோடியாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் நிறுவன இயக்க லாபம் ரூ.10,876 கோடி. இதர வருமானமாக ரூ.1,059 கோடி குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஐந்து காலாண்டுகளில் இருந்த அதிகபட்ச தொகையாகும்.
ஐ.ஓ.சி. நிறுவனத்தின் விற்பனை அளவு கடந்த ஐந்து வருட காலத்தில் வெகுவாக குறைந்துள்ளது. பத்து வருட காலத்தில் இதன் விற்பனை வளர்ச்சி(Sales Growth) 6 சதவீதத்தை ஒட்டியே உள்ளது கவனிக்கத்தக்கது. நிறுவனத்தின் லாப வளர்ச்சி கடந்த 5 வருடத்தில் காணும் போது 34 சதவீதமாக உள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சந்தை மதிப்பு(Market Cap) 1,40,800 கோடி ரூபாயாகவும், புத்தக மதிப்பு 115 ரூபாய் என்ற அளவிலும் இருந்து வருகிறது. தற்போது நிறுவனத்தின் கடன் அளவு(Debt) 83,260 கோடி ரூபாயாக உள்ளது.
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு(Crude Processing) மற்றும் வருவாய் இரண்டிற்கும் உள்ள இடைவெளி பேரலுக்கு 5.40 (Per Barrel) அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. இதுவே 2017-18ம் ஆண்டில் 8.49 டாலர்கள் இருந்ததாக நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சொத்து மதிப்பு ரூ.1,24,216 கோடியாகவும் மற்றும் நடப்பு கடன் மதிப்பு 1,53,463 கோடி ரூபாயாகவும் இருக்கிறது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை