Budget India

இன்று நாட்டின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் 2019

இன்று நாட்டின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் 2019

India’s interim budget today for the year 2019.

 

மத்தியில் ஆளும் அரசாங்கத்தின் கடைசி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. 2019ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட், இடைக்கால பட்ஜெட்டாகவே இருக்கும் என தெரிகிறது. நடப்பு ஆட்சியில் இதுவரை நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ(Arun Jaitley) தலைமையில் வெளியிடப்பட்டு வந்த பட்ஜெட் தாக்கல், இம்முறை தற்காலிக நிதி அமைச்சர் பியூஸ் கோயல்(Piyush Goyal) தலைமையில் அமைய உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பொதுவாக பட்ஜெட் தாக்கல் நிகழும் நாளன்று அனைவரிடமும் ஒரு எதிர்பார்ப்பு ஏற்படத்தான் செய்யும். வரிச்சலுகைகள்(Income Tax Slabs), சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கான கொள்கைகள், விவசாயம் சார்ந்த நிவாரண நடவடிக்கைகள் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பிற விஷயங்களை நாம் கவனிக்க தொடங்குவோம். இன்று நடைபெறும் பட்ஜெட், இடைக்கால பட்ஜெட்(Interim Budget) தான் எனினும், வரி சார்ந்த அறிவிப்புகள், நிதி பற்றாக்குறை எண்கள்(Fiscal Deficit), வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் ஆகியன விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.

 

நம் ஒவ்வொருவர் வீட்டிலும் நாம் மேற்கொள்ளும் வரவு-செலவுகளை(Budget Planning) போன்றே, ஒரு நாட்டினுடைய பட்ஜெட்டும் அவசியமாகும். இது நமக்கான பட்ஜெட் அல்ல என்று நாம் ஒதுக்கி விட முடியாது. நமது நாட்டிற்கான பட்ஜெட்டை திட்டமிட நாம் மற்றொருவரை பொறுப்பில் அமர செய்துள்ளோம் என்பதை நாம் நினைவில் கொள்வது முக்கியம். நடப்பு 2019ம் நிதியாண்டில் நாட்டின் நிதி பற்றாக்குறை(Fiscal Deficit) 3.3 சதவீதமாக இருக்கலாம் என முன்னர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது அவற்றில் 20 புள்ளிகள் வரை மாற்றம் இருக்கலாம் என தெரிகிறது. 2019-20ம் நிதியாண்டின் நிதி பற்றாக்குறை இலக்கு 3.2 – 3.3 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

பட்ஜெட் தாக்கலில் அரசு தனது நிதியை (வரவு-செலவு) எவ்வாறு கையாண்டது என்பதை நாம் இன்று அறியலாம். மேலும், வரப்போகும் நாட்களில் அரசாங்கத்தின் நிதி சார்ந்த திட்டங்கள் என்ன என்பதை அறிய முடியும். பண மதிப்பிழப்பு(Demonetization), ஜி.எஸ்.டி.(GST) வரி போன்றவை சிறு மற்றும் குறுந்தொழில்களை வெகுவாக பாதித்துள்ளதாக சொல்லப்படுகின்றன. நாட்டில் வேலைவாய்ப்பு(Unemployment Rate) சார்ந்த எண்களும் முக்கியத்துவம் பெறுகிறது. வங்கிகளின் வாராக்கடன் நிலையும் கவலை அளிக்கிறது.

 

இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரவிருக்கும் நிலையில், இன்று வெளியிடப்படும் இடைக்கால பட்ஜெட் நிதி நலன் சார்ந்து இருக்குமா அல்லது தேர்தல் வியூகத்தில் அமையப்போகுமா என்பது தெரிய வரும். இன்றைய பட்ஜெட்டில், மக்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்படும் விஷயமாக வரிச்சலுகைகள்(Tax Concessions) மற்றும் விவசாயம் சார்ந்த கொள்கைகளாக இருக்கலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s