RBI monetary policy

வங்கிகளுக்கு சுமை, வாடிக்கையாளர்களுக்கு வரப்பிரசாதம் – புதிய வட்டி விகித வரையறை

வங்கிகளுக்கு சுமை, வாடிக்கையாளர்களுக்கு வரப்பிரசாதம் – புதிய வட்டி விகித வரையறை

Burden to banks, Boost to customers – New Interest rate Benchmark – RBI

 

நேற்று நடைபெற்ற (05-12-2018) மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தில் பாரத ரிசர்வ் வங்கியின் (RBI) வட்டி விகிதம் சம்மந்தமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. அதன் முடிவில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை எனவும், இதற்கு முன்னர் இருந்த 6.5 சதவீத வட்டி என்ற அளவிலே தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

 

ஆறு நபர்கள் கொண்ட நிதி கொள்கை குழு (Monetary Policy Committee) கூட்டத்தில் 5 பேர் வட்டி விகிதத்தில் இம்முறை மாற்றம் தேவையில்லை எனவும், ஒருவர் நடுநிலையாகவும் கூறியிருந்தனர். வங்கிகளின் வாராக்கடன் மற்றும் நிதி நிலை அறிக்கையில் ஏற்படும் வேறுபாட்டை கலைந்து, அதனை சீரமைக்கும் பணியில் உள்ளதாக  ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தாமல் இருக்கும் வேளையில், நாட்டின் பணவீக்க மதிப்பீடை குறைத்துள்ளது பாரத ரிசர்வ் வங்கி. நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில் நாட்டின் பணவீக்கம் 3.8 – 4.5 சதவீதமாக இருக்கும் என முன்னர் கணிக்கப்பட்டது. ஆனால் இப்போது பணவீக்கம் (Inflation) 2.7 – 3.2 சதவீதமாக இருக்கலாம் என மதிப்பீட்டை குறைத்துள்ளது.

 

கச்சா எண்ணெய் விலையின் சரிவு, அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் ஆதாயம் ஆகியவை பணவீக்க மதிப்பீட்டை குறைக்க துணைபுரிந்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும் வங்கிகளின் கடன் கொள்கைகளில் தனது இறுக்கத்தை தொடர்கிறது மத்திய வங்கி.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த காலாண்டு முடிவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) விகிதம் 7.1 சதவீதமாக குறைந்தது. கிராமப்புற வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் இன்னும் தேக்கநிலையே காணப்படுகிறது. நாட்டின் குறைவான உற்பத்தி மற்றும் விவசாய பொருட்களுக்கான சரியான விலை கிடைக்காதது பணவீக்க மதிப்பீட்டை குறைக்க காரணமாகவும் அமைந்துள்ளது. இதன் தாக்கம் தான் நாட்டின் GDP மதிப்பில் தெரிய வந்துள்ளது.

 

நடப்பு வருடத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7.4 சதவீத அளவில் இருக்கும் என நிதி கொள்கை குழு கூறியுள்ளது. வங்கிகளின் பத்திரங்கள் வைத்திருக்கும் விகிதத்தை (Bond Holding) காலாண்டிற்கு ஒரு முறை 25 புள்ளிகள் என்ற அளவில் குறைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் உள்ள நீர்மை நிறையையும் (Liquidity) அதிகரிக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

வீட்டுக்கடன் வாடிக்கையாளர்களுக்கு பெரும்சுமையாக இருந்த வட்டி விகித மாற்ற அமலில், இப்போது புதிய முறை சொல்லப்பட்டுள்ளது. முன்னர் பாரத ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் போது, உடனே வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களின் கடன் அளவில் வட்டி விகிதத்தை உயர்த்தும். அதே சமயம் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தால், அது விரைவாக வாடிக்கையாளர்களுக்கு சேராது. வட்டி விகித உயர்வில் மட்டும் விரைவான நடைமுறையை கையாளும் வங்கிகளால் வீட்டுக்கடன் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு சுமையாக காணப்பட்டது. மிதவை விகிதத்தில் (Floating Rate) கடனை பெறுவோருக்கு இது ஒரு சிக்கலாகவே இருந்தது. ஆனால் இவற்றில் தற்போது ரிசர்வ் வங்கி புதிய முறையை புகுத்த உள்ளது.

 

இதுவரை வங்கிகளுக்கு உள்ளே மட்டும் சொல்லப்பட்ட வட்டி விகித மாற்றம், இனி வெளிப்படையாக வட்டி விகித வரையரைகளுடன் (Benchmark) வரவிருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மிதவை வட்டி விகிதத்தை உடனடியாக தெரிந்து கொள்ளலாம். வங்கிகளும் அதனை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த புதிய முறை வாடிக்கையாளர்களுக்கு நலனை கொடுக்கும். அதே வேளையில், வங்கிகளில் இதற்கான கொள்கைகளும் மாற்றப்படும். வங்கிகளுக்கும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கும் இது தொடக்கத்தில் பாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வட்டி விகித வரையறை வரும் ஏப்ரல் 1, 2019 முதல் அமலாகலாம் என தெரிகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s