Telecom Wireless

அதென்ன குறைந்தபட்ச ரீசார்ஜ் – 35 ரூபாய் திட்டம் ?

அதென்ன குறைந்தபட்ச ரீசார்ஜ் – 35 ரூபாய் திட்டம் ?

25 Crore Mobile users be moved to Minimum Recharge Plan Rs. 35 – Telecom in India

 

கடந்த காலத்தில் கைபேசி பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு இருந்த போதும், ப்ரீபெய்ட் (Prepaid) என்று சொல்லும் முன்பணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளருக்கும், பேசி விட்டு பின்பு பணம் செலுத்தும் போஸ்ட்பெய்ட் (Postpaid) வாடிக்கையாளருக்குமான இடைவெளி மிக அதிகமாக இருக்கும். ஆனால் ஸ்மார்ட் போன் மற்றும் 4G அலைவரிசை வந்த பிறகு இதற்கான இடைவெளி வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது குறைந்தபட்ச பயன்பாட்டின் அளவு அதிகரித்தது தான்.

 

முன்னர் கைபேசி வாடிக்கையாளர்களின் சராசரி மாத பயன்பாட்டு செலவு (Average Usage) ரூ. 50 ஐ தாண்டாது. விலை வெட்டிகள் (Rate Cut), உயர்த்திகள் (Boosters) மற்றும் முழு டாக் டைம் என பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வந்த நிலையில், இன்று அளவில்லா அழைப்புகளும், இணைய பயன்பாடு (Unlimited Calls and Data) என்ற இரு விஷயம் மட்டுமே வாடிக்கையாளரை தக்க வைத்து கொண்டுள்ளது. இதன் மூலம் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருமானமும் அதிகரித்துள்ளது.

 

சமீபத்தில் தொலைத்தொடர்பு துறை வெளியிட்ட தகவல்களின் படி, ஏர்டெல் மற்றும் ஜியோவில் ஒரு பயனருக்கான சராசரி மாத வருவாய் (Average Reveneu per user -ARPU) 100 ரூபாய்க்கு குறையாமல் இருப்பதாகவும், வோடபோன் – ஐடியா இணைப்பிற்கு பிறகு அதன் ஒரு பயனருக்கான சராசரி மாத வருவாய் 88 ரூபாய் என்ற அளவிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சுமார் 25 கோடி வாடிக்கையாளர்கள் ஒரே கைபேசியில் இரு சிம் கார்டை பயன்படுத்துபவராக உள்ளனர் என்றும், அவர்களின் மாத ரீசார்ஜ் 10 ரூபாய்க்கு குறைவாக இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. வரும் அழைப்புகளை ஏற்க மட்டுமே பயன்படுத்தும் இது போன்ற வாடிக்கையாளர்களில் ஏர்டெல் நிறுவனம் (Airtel) 10 கோடி நபர்களையும், வோடபோன் ஐடியா நிறுவனம் சுமார் 15 கோடி வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது.

 

இது போன்ற வாடிக்கையாளர்களின் வாயிலாக ஏர்டெல் நிறுவனம் ஆண்டுக்கு 1200 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டுகிறது. அதே நேரத்தில் வோடபோன் ஐடியா (Vodafone Idea) வருடத்திற்கு ரூ.1800 கோடியை வருமானமாக பெறுகிறது. இவர்களை குறைந்த பட்ச ரீசார்ஜ் (Minimum Recharge) என்ற அமைப்பில் கொண்டுவர இந்த இரு நிறுவனங்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் கேட்டு கொண்டுள்ளது.

 

கடந்த சில வாரங்களாக, ‘ இனி இன்கமிங் கால்கள் இலவசம் இல்லை (No Free Incoming Calls)‘ என்ற செய்தி மக்களிடையே வந்த நிலையில், தற்போது இந்த செய்தியும் கைபேசி வாடிக்கையாளர்கள் இடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. குறைந்தபட்ச மாத ரீசார்ஜ் – 35 ரூபாய் என்ற திட்டத்துடன் இரு நிறுவனங்களும் களம் இறங்கியுள்ளது. இதனால் இனி மாதத்திற்கு குறைந்தபட்சம் 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செலுத்தினால் மட்டுமே பயன்பாட்டை தொடர முடியும். தவறும் பட்சத்தில் வெளிச்செல்லும் அழைப்புகள் (Outgoing Calls) நிறுத்தப்படும் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூறியுள்ளது.
( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சொல்லப்பட்ட 25 கோடி வாடிக்கையாளர்களில் குறைந்தபட்சம் 50 சதவீதம் பேர் – 35 ரூபாய் திட்டத்திற்கு மாற்றப்பட்டாலே ஏர்டெல் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு சுமார் 900 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும். இதுவே வோடபோன் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ. 1300 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கக்கூடும். இந்த 25 கோடி வாடிக்கையாளர்களும் 2G அலைவரிசையில் இருப்பவர்கள் என்றும், இவர்கள் 3G மற்றும் 4G வரிசைக்கு மாற்றம் பெறும் போது, மாத பயன்பாடு அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) சந்தைக்கு வந்த பிறகு, தொலைத்தொடர்பு நிறுவனங்களிடைய கடும் போட்டி நிலவுகிறது. 35 ரூபாய் திட்டம் ஜியோ நிறுவனத்தை எந்தவிதத்திலும் பாதிக்காது என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். ஜியோ நிறுவனம் ஏற்கனவே தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து மாத குறைந்த பட்ச தொகையாக ரூ. 49 ஐ நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஜியோவின் ஒரு பயனருக்கான சராசரி வருவாய் (ARPU) ரூ. 130 ஆக உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s