ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் காலாண்டு லாபம் ரூ. 9516 கோடி
Reliance Industries Q2 Net Profit rises to Rs. 9516 Crores
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் கடந்த காலாண்டு (ஜூலை-செப்டம்பர் 2018 RIL -Q2 Results ) முடிவுகளை இன்று வெளியிட்டது. நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு லாபமாக ரூ.9516 கோடியை பதிவு செய்தது. இதற்கு முந்தைய காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) நிகர லாபமாக 9,459 கோடி ரூபாயை ஈட்டியது.
கடந்த காலாண்டின் வருமானமாக ( FY19 Q2 Revenue) 1,56,291 கோடி ரூபாயை பெற்றுள்ளது. முந்தைய காலாண்டில் இது 1,41,699 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த நிதியாண்டில் ஜூலை – செப்டம்பர் மாத காலத்தில் நிகர லாபம் 8,109 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில் அதன் வருமானம் 1,01,169 கோடி ரூபாயாகும்.
முந்தைய வருட இரண்டாவது காலாண்டு லாபத்தை ஒப்பிடுகையில், தற்போதைய நிகர லாபம் 17.35 சதவீதம் அதிகமாகும். 2019 ம் நிதி வருடத்தில் முதல் அரையாண்டு வருமானமாக 2,97,990 கோடி ரூபாயும், நிகர லாபமாக ரூ. 18,975 கோடியாகவும் உள்ளது.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நடந்து முடிந்த காலாண்டில் ஒரு பங்குக்கான வருமானம் (EPS -Earning per share) ரூ. 16.10 /- ஆக உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது வருமானம் 54 சதவீதம் உயர்ந்துள்ளது. பெட்ரோல் மற்றும் சுத்திகரிப்பு உற்பத்தியின் அதிக விலை மதிப்பீடுகளின் மூலம் வருமானம் உயர்ந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. புதிய பெட்ரோ-கெமிக்கல் வசதிகளும், அதனை சார்ந்த கமிஷன் மற்றும் அதிகப்படியான அளவுகள் வருமானத்திற்கு துணைபுரிந்துள்ளன.
டிஜிட்டல் சேவையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோவின் (R-Jio) காலாண்டு லாபம் 681 கோடி ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற காலாண்டில், ARPU (Average Revenue Per User) என்று சொல்லக்கூடிய ஒரு பயனாளருக்கான சராசரி வருவாய் மாதத்திற்கு ரூ.131.7 ஆக உள்ளது.
ஹாத்வே கேபிள் (Hathway Cable and Datacom) நிறுவனத்தில் ரிலையன்ஸ் ஜியோ ரூ. 2940 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்க உள்ளது. இதன் மூலம் ஹாத்வே நிறுவனத்தில் ஜியோவின் பங்கு 51 சதவீதமாக உயரும். அதே போல டென் நெட்ஒர்க் (Den Networks) நிறுவனத்திலும் ஜியோ 66 சதவீத பங்குகளை தக்கவைக்க முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக இந்த இரண்டு நிறுவனத்தையும் ஜியோ கையகப்படுத்தும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை