LTCG tax equity

நீண்ட கால மூலதன ஆதாய வரி – ஏப்ரல் 1, 2018 முதல் கணக்கீடு

நீண்ட கால மூலதன ஆதாய வரி – ஏப்ரல் 1, 2018 முதல் கணக்கீடு

Long Term Capital Gains Tax(LTCG) – Effect from April 1, 2018

 

  • நீண்ட கால மூலதன ஆதாய வரி(LTCG) கணக்கீடு ஜனவரி 31, 2018 க்கு பிறகான பங்கு விற்பனைக்கு என பொது பட்ஜெட் 2018 ல் அறிவிக்கப்பட்டது. தற்போது இவற்றில் மத்திய அரசின் நிதி அமைச்சகம் மாற்றத்தை ஏற்படுத்தி, விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதாவது, வரும் ஏப்ரல் 1, 2018 (Effect from April 1, 2018) பிறகான பங்கு விற்பனைக்கு தான் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

  • நீண்ட கால மூலதன ஆதாய வரி (10 % Tax) ஏப்ரல் 1, 2018 முதல் பங்கு மற்றும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகளுக்கான பரிவர்த்தனைகளுக்கு பொருந்தும்.

 

  • ஜனவரி 31, 2018 க்கு முன்பு வாங்கியிருந்த பங்குகளுக்கு, அன்றைய தேதியில் (January 31 ) இருந்த பங்கின் அதிகபட்ச விலையை கொண்டு நீண்ட கால மூலதன ஆதாய வரி கணக்கிடப்படும் எனவும், பிப்ரவரி 1 முதல் மார்ச் 31 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு மற்றும் அதன் லாபத்திற்கு வருமான வரிச்சட்டம் – Exemption on Section 10 (38) of Income Tax Act  கீழ் விலக்கு அளிக்கப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

 

  • பரஸ்பர நிதிக்கும் ஜனவரி 31, 2018 ல் அதன் நிகர சொத்து மதிப்பு (Net asset value -NAV) அடிப்படையில் கணக்கிடப்படும்.

 

  • ஜனவரி 31, 2018 வரையிலான பங்கு மற்றும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகளுக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி இல்லை. மார்ச் 1, 2018 பிறகான பங்கு லாபத்திலும் ரூ. 1 லட்சம் வரை விலக்கு உள்ளது.

 

  • பிப்ரவரி 1 முதல் மார்ச் 31 வரையிலான நீண்ட கால  மூலதன  நஷ்டத்திற்கு  விலக்கு பெற  முடியாது. ஆனால் ஏப்ரல் 1 முதலான  பரிவர்த்தனைகளுக்கு விலக்கு அனுமதிக்கப்படும்.

 

வாழ்க  வளமுடன்,

 

நன்றி, வர்த்தக  மதுரை

 

www.varthagamadurai.com

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.