நுகர்வோர் சாதனங்கள் – தேநீர் – ரப்பர் – துறை சார்ந்த அலசலும், முதலீட்டு வாய்ப்புகளும்
Sectoral Analysis & Investment Opportunities – Webinar
பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களுக்கு பொதுவாக வங்கிகள், நிதி நிறுவனங்கள், வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த துறைகளின் நிறுவன பங்குகள் தான் உடனடியாக ஞாபகத்திற்கு வரும். தேசிய மயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரிந்து தகவல். ஆனால் நாம் நித்தமும் வீட்டில் பார்க்கும், பயன்படுத்தும் பொருட்களை பற்றிய நிறுவனங்களை அவ்வளவாக கண்டு கொள்வதில்லை.
அது போன்ற நிறுவனங்களில் நீடித்த தன்மை இல்லாத நுகர்வோர் பொருட்களை(FMCG) கூறலாம். நீடித்த தன்மை இல்லாத பொருட்கள் என சொல்லும் போது உணவு பொருட்கள் மற்றும் தனிநபர் சார்ந்த அழகு சாதன பொருட்களை சொல்லலாம். அதே வேளையில் நீடித்த தன்மை கொண்ட சில பொருட்களை சொல்ல வேண்டுமெனில் நம் வீட்டில் அதிக இடத்தை அடைத்து கொள்வது அவை தான்.
மரச்சாமான்கள், குளிர்சாதன பெட்டி, மைக்ரோவேவ், ஏர் கண்டிஷனர், துணி சலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்திகள், சமையலறை அடுப்புகள், ஹீட்டர்கள் மற்றும் இதர மின்னணு சாதனங்களை சொல்லலாம். இவை பொதுவாக ஒரு வருடத்திற்கு மேலாக பயன்படுத்தக்கூடிய மற்றும் நீடித்த தன்மை கொண்ட பொருட்கள்(Consumer Durables) எனலாம்.
மேலே சொல்லப்பட்ட Consumer Durables துறை, சந்தையில் பெரும்பாலோனர்களால் அறியப்படுவதில்லை. இவற்றின் தொழில்கள் வணிக சுழற்சியாக இருந்தாலும், நீண்ட காலத்தில் நல்ல வருவாயை முதலீட்டாளர்களுக்கு அளிக்கக்கூடியவை. இதனை பற்றிய அடிப்படை அலசலை தான் நாம் வரவிருக்கும் இணைய நிகழ்வில் பேச போகிறோம்…
வாங்க பேசுவோம்,
- துறை சார்ந்த அலசல்: நுகர்வோர் சாதனங்கள், தேநீர், ரப்பர் துறைகள்
- சாத்தியமான முதலீட்டு உத்திகள்(Potential Investing Strategies)
- பங்குகளை எளிதாக அளவிட்டு, சரியான பங்குகளை தேர்ந்தெடுப்பது எப்படி ?
- அடிப்படை முதலீட்டு பகுப்பாய்வு: சாக்லேட் அனாலிசிஸ்
- பரஸ்பர நிதிகளின்(Mutual Funds) மூலம் நீண்டகாலத்தில் செல்வத்தை பெருக்குதல்
நிகழ்ச்சி நிரல்:
நாள் & நேரம்: 08-05-2021 முதல் ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 05:30 மணிக்கு (இரண்டு மணிநேர பேச்சு)
கட்டணம்: ரூ. 499 மட்டுமே (ஐந்து வாரங்களுக்கு)
இது ஒரு இணைய வழியிலான நிகழ்வு. நிகழ்வுக்கு பதிவு செய்ய…
https://www.instamojo.com/varthagamadurai/stock-insights-version-40/
பதிவுக்கு பின், நிகழ்ச்சிக்கான இணைப்பு உங்களுக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
பொறுப்பு-துறப்பு:
இந்த நிகழ்ச்சி நிரல் பங்குச்சந்தை அடிப்படை கற்றலுக்கான இணைப்பு மட்டுமே. இங்கே எந்தவொரு பங்குகளும் பரிந்துரைக்கப்படாது, அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) கொண்டு அலசப்படும் பங்குகள் விளக்கத்திற்கு மட்டுமே. முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை