Anuh Pharma logo

அனுக் பார்மா – ஸ்மால் கேப் பங்கு – பங்குச்சந்தை அலசல்

அனுக் பார்மா – ஸ்மால் கேப் பங்கு – பங்குச்சந்தை அலசல் 

Anuh Pharma – Small Cap – Fundamental Analysis

எஸ்.கே. குழும நிறுவனங்களின் ஒரு அங்கம் தான் அனுக் பார்மா. மும்பையை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் கடந்த 1960ம் ஆண்டு துவங்கப்பட்டது. காசநோய்க்கான மருந்து, மலேரியா மற்றும் இதர பாக்டீரியா எதிர்ப்பு மருந்து தயாரிப்பு, விற்பனை மற்றும் ஏற்றுமதிகளை இந்த நிறுவனம் செய்து வருகிறது. காசநோய் எதிர்ப்பு மற்றும் மேக்ரோலைட்ஸ் ஆகிய தயாரிப்புகளில் நாட்டின் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனமாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

எஸ்.கே. குழுமம்(SK Group) மருந்து தயாரிப்பு போக சுகாதாரம், கல்வி, ஏற்றுமதி, கெமிக்கல், சமூக சேவை ஆகியவற்றிலும் பங்காற்றி வருகிறது. அனுக் பார்மா நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 370 கோடி. தற்போதைய பங்கு ஒன்றின் விலை 150 ரூபாய்க்கு அருகில் வர்த்தகமாகி வருகிறது. புத்தக மதிப்பு 66 ரூபாயாக உள்ளது. எனவே பங்கு விலை புத்தக மதிப்பை காட்டிலும் இரண்டு மடங்கில் உள்ளது.

கடன்-பங்கு விகிதம் 0.06 ஆக உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம்(Interest Coverage Ratio) 91 மடங்காக உள்ளது குறிப்பிடத்தக்கது. கடனில்லாத நிறுவனமாக உள்ள அனுக் பார்மா நிறுவனர்களின் பங்களிப்பு 72 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் ஏதும் நடைபெறவில்லை. டிசம்பர் 2019 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 76 கோடியாகவும், செலவினம் 67 கோடி ரூபாயாகவும் உள்ளது.

டிசம்பர் காலாண்டில் நிறுவனம் ரூ. 6.30 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 2018-19ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 318 கோடியாகவும், நிகர லாபம் 20.50 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த மூன்று வருடங்களில் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. ஐந்து வருட காலத்தில் 4 சதவீதமும், பத்து வருடங்களில் 10.3 சதவீதமாகவும் உள்ளது.

லாப வளர்ச்சி ஐந்து வருடங்களில் 6 சதவீதமும், கடந்த பத்து வருட காலத்தில் 10.5 சதவீதமாக உள்ளது. பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 16.5 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. அதே வேளையில் மூன்று வருட காலத்தில் 11 சதவீதம் விலையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதுவரை நிறுவனம் ஐந்து முறை போனஸ் பங்குகளை(Bonus Issue) முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது. அளிக்கப்பட்ட போனஸ் பங்குகள் அனைத்தும் பங்கு ஒன்றுக்கு, ஒன்றுக்கும் மேலாக தான் இருந்துள்ளது.

நிறுவனத்தின் இருப்பு நிலை கையிருப்பு தொகை ரூ. 152 கோடியாகும். பங்கின் மீதான வருவாய்(Return on Equity) கடந்த ஒரு வருடத்தில் 14 சதவீதத்தில் உள்ளது. இதுவே ஐந்து வருட காலத்தில் 16 சதவீதமும், பத்து வருடங்களில் 17 சதவீதமாகவும் இருக்கிறது. சமீப தகவலில், பங்கு ஒன்றுக்கு 2.75 ரூபாயை டிவிடெண்ட் தொகையாக(Dividend) அறிவித்துள்ளது அனுக் பார்மா நிறுவனம்.

மும்பை பங்குச்சந்தையில் மட்டுமே வர்த்தகமாகும் அனுக் பார்மா நிறுவனத்தின் உண்மையான விலை பங்கு ஒன்றுக்கு ரூ. 160 ஐ மதிப்பாக பெறும். பங்குகளை வாங்க விரும்புவோர் ஒரு நிறுவனத்தின் அடிப்படை பகுப்பாய்வுகளை(Fundamental Analysis – Free Course) கண்டறிந்து, சரியான விலையில் முயற்சி செய்ய வேண்டும். அலசுவதற்கு நேரமில்லாதவர்கள் அல்லது சிரமமாக எண்ணுபவர்கள், தகுந்த நிதி ஆலோசகரை கொண்டு பங்குகளில் முதலீடு செய்யலாம். பங்குகளை வாங்கி வைப்பது மட்டுமே வேலையாக இல்லாமல், வருங்காலங்களில் அதன் நிதி அறிக்கையையும் அலசுவது அவசியம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.