Startup business ideas

பிரபல ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நஷ்டங்கள் – பேடிஎம் முதலிடம்

பிரபல ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நஷ்டங்கள் – பேடிஎம் முதலிடம் 

Net losses of Famous Startup Companies in India – Startup Mania

நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஜனவரி மாதத்தில் 7.16 சதவீதமாக இருந்தது. நகர்புறத்தில் 9.70 சதவீதமும், கிராமப்புறத்தில் 5.97 சதவீதமும் வேலைவாய்ப்பின்மை இருந்துள்ளது. அதிகபட்சமாக திரிபுராவில் 32.7 சதவீதமும், புதுச்சேரியில் 0.6 சதவீதமும் உள்ளது. தமிழகத்தின் வேலைவாய்ப்பின்மை விகிதம்(Unemployment Rate) 1.6 சதவீதம் மட்டுமே உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இதற்கு காரணமாக சொல்லப்படுவது புதிய தொழில் துவங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தான். எப்போதும் போல இருக்கும் தொழில் என்பதனை காட்டிலும் புதிய தொழில்முனைவு என்பது இப்போது வரவேற்கப்படுகிறது. குறிப்பாக தொழில்நுட்பம் சார்ந்த இணையவழியிலான நிறுவனங்களின் வருகைக்கு பின், ஸ்டார்ட் அப்(Startup) என்ற பெயர் பிரபலமடைந்துள்ளது.

பிளிப்கார்ட், ஓலா, உபெர், ஒயோ, ஸ்விக்கி, ஜோமாடோ, பேடிஎம், ரெட் பஸ், பஸ்ட் க்ரை(First Cry) என ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பெயர்களும் சந்தையில் அட்டகாசமாக வந்தடைந்தன. இது போன்ற நிறுவனங்களின் சேவைகளும் வாடிக்கையாளர்களை கவர்ந்தன. அதே வேளையில் நிறுவனங்களின் வருவாய் அதிகரித்து வந்தாலும், பெரும்பாலானவை நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகின்றன.

பெங்களூரு நகரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஒயோ(OYO) நிறுவனம் 2018-19ம் நிதியாண்டின் முடிவில் வருவாயாக 95.1 கோடி அமெரிக்க டாலர்களை ஈட்டியது. செலவினம் 127.4 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது. சொல்லப்பட்ட காலத்தில் நிகர நஷ்டமாக 33.5 கோடி அமெரிக்க டாலர்கள்  இருந்தது கவனிக்கத்தக்கது. இதுவே கடந்த 2017-18ம் ஆண்டில் வருவாய் 21 கோடி அமெரிக்க டாலர்களாகவும், நிகர நஷ்டம் 5.2 கோடி அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பேடிஎம்(Paytm) நிறுவனத்தின் நஷ்டமே அதிகமாக சொல்லப்பட்டுள்ளது. 2019ம் நிதியாண்டில் பேடிஎம் நிறுவனம் 4,200 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இது போல ஓலா நிறுவனம் ரூ. 2,600 கோடி நஷ்டத்தையும், உணவு விநியோக சேவையில் உள்ள ஸ்விக்கி(Swiggy) நிறுவனம் ரூ. 2,360 கோடி நஷ்டத்தையும் சந்தித்துள்ளது.

பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிகர நஷ்டம் ரூ. 3,800 கோடி மற்றும் ஜோமாடோ நிறுவனம் ரூ. 1000 கோடி நஷ்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிசி பஜார் 350 கோடி ரூபாயும், பஸ்ட் க்ரை ரூ. 120 கோடியும் மற்றும் குரோபர்ஸ்(Grofers) நிறுவனம் ரூ. 450 கோடியையும் நஷ்டமாக சந்தித்துள்ளது. சொல்லப்பட்ட நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தற்கு பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், புதிய தொழில்முனைவில் சில அடிப்படை விதிகளை பின்பற்றினால் நீண்டகாலத்தில் வெற்றிநடை போடலாம்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று (14-02-2020) சேலம் மாவட்டத்தின் கியாட் தொழில்நுட்ப பொறியியற் கல்லூரியில்(KIOT) தொழில்முனைவுக்கான துவக்க முகாம் நடைபெற்றது. தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பு(EDII-TN) மற்றும் தொழிலுக்கான நிதி முதலீடு செய்யும் நேட்டிவ் லீட்(Native Lead) இணைந்து செயல்பட்ட இந்த நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட புதிய தொழில்முனைவோர்கள்(New Startup Founders) பங்கேற்றனர்.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தொழில்முனைவோர்களுக்கான வணிக திட்டம்(Business Plan), வணிக மாதிரிகள்(Business Model) பற்றி விவரிக்கப்பட்டது. தொழில்முனைவுக்கு  தயாராகும் மற்றும் தொழில்முனைவில் ஏற்கனவே ஈடுபட்டிருப்பவர்களுக்கு தங்கள் தொழிலுக்கான நிதி முதலீட்டை எவ்வாறு தயார் செய்து கொள்ள வேண்டும், நிறுவனத்தை பதிவு செய்தல் மற்றும் வரி சார்ந்த மாற்றங்கள் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது.

முக்கியமாக மூன்று விஷயங்கள் தொழில்முனைவு சார்பாக சொல்லப்பட்டிருந்தது. தொழில்முனைவு என்பது வெறும் எண்ணங்களாக(Ideas) மட்டுமில்லாமல், அவை சந்தையில் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறும் இருக்க வேண்டுமென்பதை வெளிப்படுத்தியது. சமூகத்தில் நிலவும் பிரச்சனைகள் மற்றும் தேவைகளை(Problem Solving) அடிப்படையாக கொண்டு தொழில்முனைவு உருவாக்கப்பட வேண்டும். அதே வேளையில் அவை எதிர்காலத்தில் வருவாய் ஈட்டக்கூடியதாகவும், இடையூறு விஷயங்களை புறந்தள்ளும் தன்மையாகவும்(Scaling) இருக்க வேண்டும். 

வெறும் நிதியை பெறுவது மட்டுமே ஒரு தொழில்முனைவோரின் செயலாக இருந்து விட கூடாது. மாறாக, ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பில் புதிய கற்றலை நோக்கி இருக்க வேண்டும். விளம்பர நடவடிக்கைகளை தாண்டி, வாடிக்கையாளர்களின் மன நலன்களை புரிந்து கொள்ளுமாறு இருக்க வேண்டுமென கூட்டத்தில்(Knowledge Institute of Technology – Boot Camp) அறிவுறுத்தப்பட்டது.

அடிப்படை வணிகத்திற்கும், தொழில்முனைவுக்கும்(Business vs Entrepreneurship) உள்ள வேறுபாடுகளை கண்டறிந்து, தொழில்முனைவில் உள்ள ரிஸ்க் தன்மையை புரிந்து கொண்டு செயல்பட்டால் அது பல வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இதன் மூலம் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும். வெறுமென வேலைகள் கிடைக்கவில்லை என்பதனை கடந்து, தொழில் புரிதல் சமூகத்தை சிறக்க செய்யும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s