தைரோகேர் டெக்னாலஜிஸ் – பங்குச்சந்தை அலசல்
Thyrocare Technologies – Think Thyroid, Think Thyrocare – Fundamental Analysis
1996ம் ஆண்டு கோவை அப்பநாயக்கன்பட்டி புதூரை சேர்ந்த திரு. வேலுமணி அவர்களால் துவங்கப்பட்ட நிறுவனம் தான் தைரோகேர் டெக்னாலஜிஸ். மருத்துவ சேவையில் உள்ள இந்த நிறுவனம் தைராய்டு பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த துறையில் நாட்டின் முதல் தானியங்கி ஆய்வக நிறுவனமாகவும் தைரோகேர் உள்ளது. நிறுவனர்(Velumani Arokiaswamy), பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் விஞ்ஞானியும் ஆவார்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தைரோகேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 3,300 கோடி. இதன் புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 75 ரூபாயாக உள்ளது. தற்போதைய பங்கு ஒன்றின் விலை புத்தக மதிப்பை காட்டிலும் 8 மடங்கில் உள்ளது. கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் 0.03 ஆக இருக்கிறது. எனவே நிறுவனத்திற்கு பெரிதான கடன் எதுவுமில்லை.
நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 140 மடங்காக உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 66 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் ஏதும் நடைபெறவில்லை. செப்டம்பர் 2019ம் காலாண்டின் முடிவில் நிறுவனத்தின் கையிருப்பு ரூ. 344 கோடியாக உள்ளது. 2018-19ம் நிதியாண்டில் வருவாய் ரூ. 370 கோடியாகவும், செலவினம் ரூ. 222 கோடியாகவும் இருந்துள்ளது. நிகர லாபம் ரூ. 95 கோடி என சொல்லப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளில் 16 சதவீதமும், ஐந்து வருட காலத்தில் 20 சதவீதமும் வளர்ந்துள்ளது. இது போல லாபம் மூன்று வருடங்களில் 16.50 சதவீதமும், ஐந்து வருடங்களில் 15 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. பங்கு விலை கடந்த ஒரு வருட காலத்தில் 14 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. பங்கின் மீதான வருவாய் கடந்த ஒரு வருடத்தில் 20 சதவீதம் வளர்ந்துள்ளது.
மூன்று வருட காலத்தில் 19 சதவீதமும், ஐந்து வருடங்களில் 19 சதவீதமும் ஏற்றமடைந்துள்ளது. நிறுவனத்தின் பணவரவு(Cashflow) சீராக இருந்து வந்துள்ளது. கடந்த டிசம்பர் 2019 – மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 98 கோடியாகவும், செலவினம் 55 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாபம் ரூ. 43 கோடி மற்றும் வரிக்கு முந்தைய வருவாய் ரூ. 39 கோடியாக உள்ளது.
சொல்லப்பட்ட மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 30 கோடி ரூபாயாக உள்ளது. கடந்து பத்து வருட காலத்தில் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் மற்றும் லாப விகிதம் சீராக இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதைய பங்கின் விலை உச்சத்திற்கு அருகில் இருப்பதை காட்டுகிறது. அதன் தற்போதைய உண்மையான பங்கு ஒன்றின் விலை ரூ. 342 ஐ பெறும்.
இருப்பினும், தேவை அதிகமாக உள்ள பங்குகளின் விலை எப்போதும் சந்தையில் அதிகமான விலைக்கு தான் வர்த்தகமாகும். எனவே, மற்ற அடிப்படை பகுப்பாய்வு காரணிகளை(Fundamental Factors) அலசி ஆராய்ந்து பங்கு வாங்கும் முடிவுகளை எடுக்கலாம். நீண்ட கால மற்றும் குறுகிய கால கடன் பொறுப்புகள் நிறுவனத்தின் சொத்துக்களை விட குறைவாக தான் உள்ளது. நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பும் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளன.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை