இன்று முதல் இந்த 28 நிறுவனங்கள் நாட்டின் எந்த பங்குச்சந்தையிலும் வர்த்தகமாகாது – பட்டியல் நீக்கம்
Delisted from All Recognized Stock Exchanges – 28 Companies including Lanco Infra
பங்குச்சந்தையில் ஒரு நிறுவனம் பட்டியலிடப்படுவதற்கு செபியின் கீழ் சில ஒழுங்குமுறைகள் உள்ளன. அவற்றை பின்பற்றுவதன் மூலமே ஒரு நிறுவனம் சந்தைக்கு வர முடியும். ஆரம்பகட்டத்தில் தனியார் நிறுவனம் சந்தைக்கு வருவதற்கு முன், பொது நிறுவனமாக(Public Listed) மாற்றப்படுவது அவசியமாகும்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பங்குச்சந்தைக்கு பல்வேறு நிறுவனங்கள் வருவதற்கான முதற்காரணம் முதலீடு தான். எனினும், சில நிறுவனங்கள் பிற்காலத்தில் சந்தையிலிருந்து வெளியேற முடிவெடுக்கும். இதற்கான காரணங்கள் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். பங்குச்சந்தை விதிமுறையை பொறுத்தவரை பட்டியல் நீக்கம்(Delisting) என்பது இருவகையாக அமையலாம். அதாவது சந்தையிலிருந்து ஒரு நிறுவனம் இரு வகைகளில் ஏதேனும் ஒரு முறையில் வெளியேற வேண்டும்.
முதலாவதாக தன்னார்வமாக நீக்குதல்(Voluntary Delisting) – பட்டியலிடப்பட்ட நிறுவனம் சிலகாரணங்களால் சந்தையை விட்டு வெளியே செல்ல விண்ணப்பிக்கும். இவற்றில் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றும் பட்சத்தில், செபி(SEBI) அந்த நிறுவனத்தை வெளியே செல்ல அனுமதிக்கும்.
இரண்டாம் முறையாக, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியே, குறிப்பிட்ட நிறுவனத்தை சந்தையிலிருந்து வெளியேற்றும். இதனை கட்டாய நீக்கம்(Compulsory Delisting) என்பர். பொதுவாக விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் ஆரம்ப நிலையில் பங்குச்சந்தை வர்த்தகத்தில் சில மாதங்கள் இடைநீக்கம் செய்யப்படும். இடைநீக்கத்திற்கு பிறகும், சொல்லப்பட்ட நிறுவனம் விதிமுறைகளை கடைபிடிக்காத நிலையில் அவை பங்குச்சந்தை பட்டியலில் இருந்து நீக்கப்படும்.
இதனால் வரும் நாட்களில் அந்த பங்கு, சந்தையில் வர்த்தகமாகாது. கடந்த 2019ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் சில நிறுவனங்கள் செபியின் விதிமுறைகளை பின்பற்றவில்லை என சந்தையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அந்த நிறுவனங்களின் நிறுவனர்களுக்கும், இனி பங்குச்சந்தையில் எந்த செயல்பாடுகளையும் அடுத்த 10 வருடங்களுக்கு செய்ய தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் சில நிறுவனங்கள் தேசிய பங்குச்சந்தையிலிருந்து முழுவதுமாக நீக்கம் செய்யப்பட்டிருந்தன. மற்ற சில நிறுவனங்களோ இடைநீக்கத்தில் இருந்து வந்துள்ளது. தற்போது மும்பை பங்குச்சந்தையும் இதன் சார்ந்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது தேசிய பங்குச்சந்தையில் இடைநீக்கம் செய்யப்பட்ட குறிப்பிட்ட 28 நிறுவனங்கள், இன்று முதல் (14-02-2020) மும்பை பங்குச்சந்தையிலிருந்தும் நீக்கப்படுவதாக சொல்லப்பட்டிருக்கிறது. இனி மேல் இந்த 28 நிறுவனங்கள் நாட்டின் எந்த பங்குச்சந்தையிலும் வர்த்தகமாகாது. நீக்கப்பட்டிருக்கும் நிறுவனங்கள் சில – அக்வா லாஜிஸ்டிக்ஸ், லாங்கோ இன்ப்ரா, டாட்ஸன் லேப்ஸ், மோஸர் பேர், எவ்ரான், சுப்ரீம் டெக்ஸ் மார்ட், ஜெனித் இன்போடெக், லாய்ட்ஸ் பைனான்ஸ் ஆகியவை.
சொல்லப்பட்ட 28 நிறுவனங்களில் பங்கு வைத்திருப்போர் இனி மேல் அதனை சந்தையில் விற்க இயலாது. அதே வேளையில் நிறுவனம் சந்தையிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும், அதன் தொழில் நடைபெறலாம். இவ்வாறான சூழ்நிலையில், அந்த நிறுவன அலுவலத்தை அணுகி, பங்கு வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கலாம். ஒரு நிறுவனம் சந்தையிலிருந்து வெளியேறினாலும், அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கியோருக்கு முழு உரிமை உண்டு. சந்தையில் நிறுவனம் இல்லாவிட்டாலும், கொண்டிருக்கும் பங்குகளை நேரிடையாக நிறுவனத்திடம் விற்பதற்கு சட்டம் உள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை