அன்று 10,000 கோடி டாலர் சொத்து, இன்று சல்லி பைசா இல்லை
The man who had $100 Billion USD, now turned Bankrupt and Nothing
இன்று வயது 60, தனது இளம்வயதில் முதுகலை மேலாண்மை(MBA) படிப்பை பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் படித்தவர். சிறுவயது முதலே தொழிலில் ஆர்வம் மிகுந்தவர். அவர் தொடாத தொழில் இல்லை என உட்கட்டமைப்பு, நிதித்துறை, ஆற்றல், தொலைத்தொடர்பு, பொழுதுபோக்கு, காப்பீடு ஆகியவற்றில் கால்பதித்தவர்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
1997ம் ஆண்டில் நாட்டின் சிறந்த தொழிலதிபர் விருதினை பெற்றவர். 2004-2006ம் ஆண்டு வாக்கில் உலகில் இவரை போல யாரும் தொழில் செய்ய முடியாது என ஆச்சர்யத்தை ஏற்படுத்தியவர். ஒரு கட்டத்தில் உலகின் சிறந்த தொழிலதிபராகவும், உலக பணக்காரர்கள் வரிசையில் 6வது இடத்தை பிடித்தவர். இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் அப்போதே அவருடைய சொத்து மதிப்பு 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இன்றைய மதிப்பில் 7.15 லட்சம் கோடி ரூபாய் (7,15,160,00,000,00) !
உலகின் பிரபலமான ஸ்டீவன் ஸ்பீல்பெர்கின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து நாட்டின் பொழுதுபோக்கு வணிகத்தை உலகளாவிய அளவில் இவரது நிறுவனம் கொண்டு சென்றது. அன்று 10,000 கோடி டாலர் சொத்து, இன்று சல்லி பைசா கூட இல்லை. வரலாறு திரும்பி போட்டது. தனது தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கடன் மட்டும் இன்று ரூ. 30,000 கோடி. உட்கட்டமைப்பு தொழிலில் ரூ. 14,800 கோடி கடன். ஆற்றல் துறையில் ரூ. 25,200 கோடி கடன், பாதுகாப்பு துறையில் ரூ. 6000 கோடி, முதலீட்டு துறையில் ரூ. 16000 கோடி என கடன் நீண்ட வரிசையில் செல்கிறது.
யார் இவர், என்ன ஆயிற்று ?
அட் லேப்ஸ்(Adlabs), ஆர்.காம்(RCOM), ரிலையன்ஸ் இன்ப்ரா, ரிலையன்ஸ் நேவல், ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் கேப்பிடல், ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்டு, ரிலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ், ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ். யாரென்று தெரிகிறதா ?
ஆம், தொழில் ஜாம்பவான் திருபாய் அம்பானி அவர்களின் இளைய மகன் திரு. அனில் அம்பானி தான்.
நிறைய துறையில் தொழில் செய்து வந்தாலும், பெரும்பங்கு தொலைத்தொடர்பு துறையான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தில் தான் உள்ளது. துறைசார் அழுத்தம், விலை சார்ந்த மாற்றங்கள் மற்றும் அதிக பல்வகைப்படுத்துதல் ஆகிய காரணங்களால் தொழிலில் மந்த நிலை கண்டார். தொழில் போட்டியை சமாளிக்க கடனை அதிகரித்தார். முடிவில் சொத்துக்கு பதில் கடனே அதிகமானது.
அகலக்கால் வைத்தால் என்னவாகுமோ, அது தான் அனில் அம்பானி அவர்களுக்கும் நடந்தது. இவர் கடன் வாங்கிய பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் நீதிமன்றத்தின் வாசலில் தான் நிற்கிறது. கடந்த வருடம் ஒரு நிறுவனத்திற்கு பணத்தை திரும்ப செலுத்த முடியாமல், சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. சகோதரர் முகேஷ் அம்பானியின் உதவியால் தப்பினார். சமீபத்தில் மூன்று சீன வங்கிகள் அனில் அம்பானியின் மீது கடன் சார்ந்த வழக்கு ஒன்றினை லண்டன் நீதிமன்றத்தில் தொடுத்துள்ளது.
இதற்கு லண்டன் நீதிமன்றத்திற்கு பதிலளிக்கும் விதமாக, ‘எனக்கு சொத்து என்று பெரிதாக எதுவுமில்லை. முன்பு நான் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரன், என்னுடைய முதலீடுகள் எல்லாம் சரிந்து விட்டன. நான் இப்போது திவாலாகி விட்டேன். என்னுடைய அடமான கடனை எல்லாம் கழித்தால், என்னிடம் மிஞ்சுவது ஒன்றுமில்லை ‘ என அனில் கூறியுள்ளார்.
இதனை எதிர் தரப்பு மறுத்துள்ளது. இனி என்னவாகுமென்று காத்திருப்போம். ஒருபுறம் தொழில் செய்ய முதலீடு இல்லை என்ற நிலை நீடித்து வருகிறது. மறுபுறம் பெற்ற முதலீடுகளை சரியாக நிர்வகிக்காததால், பெருமளவிலான பொது சொத்து வீணடிக்கப்படுகிறது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை