2019ம் ஆண்டில் பிரியாணிக்கு முதலிடம் – உணவு விநியோக சேவை
Biryani tops the list in 2019 – Online Food Delivery Service
2014ம் ஆண்டில் பெங்களூரு நகரத்தை தலைமையிடமாக கொண்டு உணவு விநியோக சேவையில் துவங்கப்பட்ட நிறுவனம் தான், ‘ஸ்விக்கி’ (Swiggy). இரண்டு நபர்களால் தொடங்கப்பட்ட ஸ்விக்கி நிறுவனம், இணைய வழியாக உணவு சார்ந்த ஆர்டர்களை பெற்று விநியோக சேவையை புரிந்து வருகிறது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இன்று நாடு முழுவதும் 100க்கு மேற்பட்ட நகரங்களில் இதன் சேவையும், 2 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களை கொண்ட உணவு ஸ்டார்ட்-அப்(Startup) நிறுவனமாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறது. தனியார் முதலீடுகளின் மூலம் ஆரம்ப நிலையில் 2 மில்லியன் அமெரிக்க டாலர்களை பெற்ற இந்நிறுவனம், கடந்த 2018ம் ஆண்டு 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு முதலீடுகளை பெறும் நிறுவனமாக மாறியது.
கடந்த 2019ம் ஆண்டில் உணவு விநியோக சேவையில், எந்த உணவு அதிகமாக தங்களின் சேவையில் இருந்தது மற்றும் சில வித்தியாசமான உணவு வகைகளையும் பட்டியலிட்டுள்ளது ஸ்விக்கி. ஸ்விக்கி தளத்தின் வாயிலாக அதிகமாக ஆர்டர்கள் செய்யப்பட்ட உணவு பட்டியலில், சிக்கன் பிரியாணி(Chicken Biryani) முதலிடத்தை பிடித்துள்ளது.
இரண்டாம் இடமாக மசாலா தோசையும், மூன்றாம் இடமாக பன்னீர் பட்டர் மசாலா, நான்காம் மற்றும் ஐந்தாம் இடத்தில் சிக்கன் பிரைட் ரைஸ், மட்டன் பிரியாணி உள்ளது. 2019ம் ஆண்டில் ஒரு நிமிடத்திற்கு 95 பிரியாணிகள் என்ற அளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. கடந்த வருடத்தில் அதிகபட்ச விலையாக நிர்ணயிக்கப்பட்டு விற்பனையான உணவு, புனே சிக்கன் பிரியாணி(Pune’s Chicken Sajuk Tup Biryani) வகை – இதன் விலை ரூ. 1,500 /-
குறைந்தபட்ச விலையாக மும்பையின் ‘சல் தந்நோ’ பிரியாணி ஒன்று 15 ரூபாய் என்ற விலையில் ஸ்விக்கி மூலம் விற்கப்பட்டுள்ளது. காலை உணவின் சிறப்பம்சமாக பொங்கல் மற்றும் இட்லி இருந்துள்ளது. அதிகாலை வேளையில், காலை 6 மணியளவில் கோவை நகரத்தில் பொங்கலும், இட்லியும் வழங்கப்பட்டுள்ளது.
பீட்ஸா வகைகளில் அன்னாசி பழம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. அனைத்து வகை பீட்ஸா ஆர்டர்களின் போது, அன்னாசி பழத்தின் ஆர்டர்கள் 1.5 சதவீதம் மட்டுமே என சொல்லப்பட்டுள்ளது. 2019ம் வருடத்தில், ஸ்விக்கி தளத்தின் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட குலாப் ஜாமுன்(Gulab Jamun) எண்ணிக்கை மொத்தம் 17.69 லட்சம். மூன்று லட்சம் கேக்குகளும் ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் முதலிடம் பிடிப்பது, ‘பிளாக் பாரஸ்ட்’ (Black Forest).
சுமார் 35,056 ரக பிரியாணி வகைகள் கடந்த வருடத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளன. சிக்கன் தம் பிரியாணி, மட்டன் பிரியாணி, போன்லெஸ் சிக்கன் பிரியாணி, முட்டை பிரியாணி, சைவ பிரியாணி மற்றும் பன்னீர் பிரியாணி ஆகியவை வாடிக்கையாளர்களின் மனதில் முக்கிய இடங்களை பிடித்துள்ளது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஸ்விக்கி கோ(Swiggy Go) சேவையில் முக்கிய ஆவணங்கள், சாவிகள், கைபேசிகள், லேப்டாப், வீட்டிலிருந்து சாப்பாடு பொட்டலங்கள், கண்ணாடிகள் என பல டெலிவரி செய்யப்பட்டுள்ளன. விசித்திரமாக அணுகப்பட்ட சேவைகள் டெங்கு காய்ச்சலுக்கு பப்பாளி இலை, காற்றை சுவாசிக்கும் ஆக்ஸிஜன் மெஷின், கோயில் பிரசாதம், தலையில் வைக்கக்கூடிய விக்குகள்(Wigs) ஆகியவை ஆகும்.
ஸ்விக்கி மளிகை சாமான்கள் பிரிவில் அதிகமாக டெலிவரி செய்யப்பட்ட பலசரக்கு – பெரிய வெங்காயம், உருளை கிழங்கு மற்றும் வெண்டைக்காய். எதிர்பாராது கேட்கப்பட்ட பொருட்கள் – குடிநீர் அடி பம்பு, வளையல் மற்றும் வாடகை ரசீது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை