Newyear T20 Thoughts

2020ம் ஆண்டுக்கான கடைபிடிக்கக்கூடிய எளிய முதலீட்டு சிந்தனைகள்

2020ம் ஆண்டுக்கான கடைபிடிக்கக்கூடிய எளிய முதலீட்டு சிந்தனைகள் 

Simple Investment Thoughts for the year T20 – 2020

 

2019ம் வருடத்தின் கடைசி நாளை இன்று அடைந்தாயிற்று. 2020ம் ஆண்டினை வரவேற்கத்தக்க வகையில் பல கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் நடைபெறும். தமிழர்களின் புத்தாண்டு தைத்திருநாள் தான் எனினும், புதிய கொள்கைகளையும், பழக்கங்களையும் கடைபிடிக்க ஆங்கில ஆண்டு ஒரு உந்துதல் என்றால் அதனை மறுப்பதற்கில்லை.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நாம் ஜனவரி 1ம் தேதி நினைத்த ஒரு விஷயத்தை பழக்கமாக மாற்றுகிறோமோ, இல்லையோ – ஆனால் அதற்கான முயற்சியை எடுத்தாலே பாதி வெற்றி பெற்றது போல் தான். அது போல சில எளிய முதலீட்டு சிந்தனைகளை இங்கே கொடுத்துள்ளோம். அவை அனைவரும் கடைபிடிக்க கூடிய வகையில் அமையும்.

 

T20 ஆண்டுக்கான முதலீட்டு சிந்தனைகள்…

 

  • மரம் நடுங்கள். அவை அடுத்த 20 வருடங்களுக்குரியது, பணத்தின் மீது எவ்வாறு கூட்டு வட்டி செயல்படுகிறதோ, அதனை போல மரத்தின் மீதும் இயற்கை உந்துதல் எப்போதும் இருக்கும். நாம் செய்ய வேண்டியது, மரம் நட்டு அதனை பராமரிப்பது தான். (SIP Investment போல !)

 

  • வங்கியில் சொல்லப்பட்ட குறைந்தபட்ச இருப்பு தொகையை எப்போதும் சரியான அளவில் பராமரிக்க பழகுங்கள். இந்த பழக்கம் பின்னாளில் நமது குடும்பத்தின் நிதி நிலையிலும்(Asset to Liability) பிரதிபலிக்கும். அதிக பணத்தையும், ஆடம்பரத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நம்மிடம் இருக்கும் சிறு தொகையை பராமரித்தாலே போதும்.

 

  • உங்களின் வருமானம் மாத சம்பளமாக இருக்கலாம். இல்லையெனில் தொழில் மூலம் கிடைக்கக்கூடிய வருவாயாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும், அதனை ஒரு மணிநேர கணக்கில்(Earnings per Hour) பார்க்க பழகுங்கள். உதாரணத்திற்கு, தனிநபர் ஒருவரின் மாத சம்பளம் ரூ. 30,000 எனில், அவருடைய ஒரு நாள் சம்பளம் ரூ. 1000 மற்றும் ஒரு மணிநேர சம்பளம் ரூ. 125 /- (8 மணிநேர வேலை எனும் போது). அதற்காக குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் முக்கிய நண்பர்களிடம் செலவிடக்கூடிய நேரங்களை தவறவிடாதீர்கள். அதற்கும் ஒரு நன்மதிப்பு உண்டு.

 

  • சாலையில் யாராவது உங்களிடம் உதவி கேட்டு நின்றால், அவர்களுக்கு பணம் கொடுக்க முதலில் முன்வராதீர்கள். அதற்கு மாற்றாக அவர்களுடைய கதையை (பிரச்சனைகள்) சில நிமிடங்கள் கேட்க துவங்குங்கள். உண்மையில் அவருடைய பிரச்சனை பணம் மட்டுமில்லாமல், வேறு ஏதாவது விஷயமாக இருக்கலாம். அது அடிப்படை கல்வியோ, மருத்துவமோ, ஆதரவோ அல்லது நல்ல உணவாக இருக்கலாம்.

 

  • நிதி சார்ந்த விஷயங்களில் நண்பர்கள் குழுவை (Build a Financial Relationship) ஏற்படுத்துங்கள். வெறும் மால்களிலும், திரையரங்குகளிலும் செலவழிப்பது மட்டுமே நம் நோக்கமாக இருக்க கூடாது. மாறாக மால்களிலும், அரங்கத்தின் பின் உள்ள தொழில் தன்மையையும் நாம் கற்று கொள்ள வேண்டும். நான்கு நண்பர்கள் சேர்ந்தால், ஆரோக்கியமான நிதி விஷயங்களை கலந்துரையாட வேண்டும். பணம் சார்ந்த விஷயத்தை பேச பழக வேண்டும். அதனை சார்ந்த தகவல்களையும் பரிமாறி கொள்ள வேண்டும். (உதாரணமாக நாளிதழ்களில் வரும் வணிக செய்திகள் மற்றும் குடும்ப பட்ஜெட் சார்ந்து)

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

  • பெரிய இலக்கை நிர்ணயித்து கொள்ளுங்கள். ஆனால் சிறு சிறு இலக்குகளுக்கு (Goals) முக்கியத்துவம் கொடுங்கள். சிறு இலக்குகளில் வெற்றி பெறுவதற்கு, உங்களுக்கு நீங்களே ஒரு சிறிய அளவிலான பரிசை கொடுத்து பழகுங்கள். (உதாரணமாக, நான் இன்று இந்த ஐந்து வேலைகளை முடிக்க கற்று கொள்வேன். அதனை அடைந்து பரிசையும் பெறுவேன்)

 

  • தோல்வி அடைய தயங்காதீர்கள். நீங்கள் வெற்றி பெறுவதில் பெரிய பாடங்களை கற்று கொள்ள வாய்ப்பில்லை. வெறும் பாராட்டுகளை மட்டுமே பெறுவீர்கள். தோல்வியில் மட்டுமே விமர்சனங்கள் மூலம் புதிய வாய்ப்புகளை (New Opportunities) கண்டறிய முடியும். உங்களுக்கு தேவை, புதிய வாய்ப்புகளே – கவலை அல்ல…

அனைவருக்கும் 2020 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்… T20 Year Wishes

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

   

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s