ஏற்றத்திற்கான முனைப்பில் இந்திய பங்குச்சந்தை – பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான மாற்றங்கள்
Changes to Stimulate the Indian Economy – Is the Indian Market ready to push up ?
நேற்று மாலை(23-08-2019) மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில் நாட்டின் பொருளாதாரம் சார்ந்த கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமை வகித்த மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் இந்திய பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான மாற்றங்களை சொன்னார்.
பி.எஸ். 4(BS IV) வகை வாகனங்களை பதிவு காலம் வரை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும், வாகனத்திற்கான ஒரு முறை பதிவு கட்டணம் வரும் 2020ம் ஆண்டு ஜூன் மாதம் வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மூலதன சந்தை வளர்ச்சிக்கு தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகவும், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் பரஸ்பர நிதி சேவைகளுக்கு எளிமையான ஆதார் அடிப்படையிலான கே.ஒய்.சி.(KYC) நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் (Ministry of Finance) கூறியுள்ளார்.
அந்நிய முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர்கள் ஆகியோருக்கு கடந்த ஜூலை மாத பட்ஜெட்டில் வரி விதிப்பு சொல்லப்பட்டது. தற்போது இதனை நீக்குவதாக மத்திய நிதி அமைச்சகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. கட்டணத்தை(GST Refund) திரும்ப பெறுவதில் உள்ள சிக்கல்கள் களையப்படும், சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய நிலுவையில் உள்ள தொகை 30 நாட்களுக்குள் முடிக்கப்படும். வரும் காலத்தில் ஜி.எஸ்.டி. கட்டணத்தை பெறுவது சார்ந்த விஷயங்கள் 60 நாட்களுக்குள் சரி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி மேல் சி.எஸ்.ஆர்.(CSR Violations) விதிமீறல்கள் சிவில் குற்றமாகவே எடுத்து கொள்ளப்படும் எனவும், அவை கிரிமினல் குற்றமாக கருதப்படாது எனவும் சொல்லப்பட்டது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் முதலீடுகளுக்கு வரி சலுகை அளிக்க உள்ளதாகவும், தொழில் செய்பவர்களுக்கான ஏஞ்சல் வரி(Angel Tax) விதிப்பு இல்லை எனவும் மத்திய அமைச்சர் கூறினார்.
தொழில்துறைக்கான சட்டங்களும், தொழில் புரிபவர்கள் எளிமையாக அணுகும் முறையிலும் மாற்றங்கள் கொண்டு வரப்படும். ஏற்கனவே சொல்லப்பட்டிருந்த வங்கிகளுக்கான மறுமூலதனம் ரூ. 70,000 கோடி நிதி உடனடியாக ஒதுக்குவதற்கு வழிவகை செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளது.
பெரும் செல்வந்தர்களுக்கான வரி விதிப்பு முறையும்(Super Rich Tax) கைவிடப்பட்டுள்ளது. வங்கிகள் அளிக்கும் கடன் தொகைக்கான வட்டி கணக்கீட்டு, ரெப்போ வட்டி விகிதத்துடன் இணையாக செயல்படுவதற்கு மாற்றங்கள் செய்யப்படும். இதன் மூலம் அடுத்து வரும் காலத்தில் வீடுகள் மற்றும் வாகனங்களுக்கான வட்டி சலுகை கிடைக்கலாம்.
பங்குச்சந்தையில் பெறப்படும் நீண்டகால மற்றும் குறுகிய கால மூலதன ஆதாயத்திற்கு முன்னர் சொல்லப்பட்டிருந்த சர்சார்ஜ்(Surcharge) கட்டணம் விலக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் பெற்றோர் கடனை முடிக்கும் தருவாயில், அவர்களிடம் பெற்றிருந்த கடன் ஆவணங்களை 15 நாட்களுக்குள் கொடுக்கப்பட வேண்டும் எனவும், கடன் சார்ந்த துன்புறுத்தல்கள் களையப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நேற்று சொல்லப்பட்ட விஷயங்கள் உடனடியான வளர்ச்சியை கொண்டு வர முடியாது. வரும் வாரங்களில் பங்குச்சந்தை சாதகமான அம்சத்தை பெறும். மீண்டும் சென்செக்ஸ் குறியீடு(Sensex) 40,000 புள்ளிகளை நோக்கி செல்லுமா என பொறுத்திருந்து பார்ப்போம். அதுவரை நல்ல நிறுவன பங்குகளை கண்டறிந்து முதலீடு செய்வது சிறந்தது. உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை இன்னும் சரி செய்யப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை