ஐ.டி.சி. நிறுவன காலாண்டு நிகர லாபம் ரூ. 3,174 கோடி
ITC Quarterly Net profit to Rs. 3,174 Crore – Q1FY20
பல்துறையில் தொழில் செய்து வரும் ஐ.டி.சி. நிறுவனம் 2019-20ம் நிதியாண்டுக்கான முதலாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஜூன் மாத காலாண்டில் நிறுவன வருவாய் 11,503 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ. 6,937 கோடியாகவும் இருந்துள்ளது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சொல்லப்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் இயக்க லாபம்(Operating profit) ரூ. 4,566 கோடி. கடந்த வருட ஜூன் காலாண்டில் ரூ. 4,202 கோடியாக இருந்தது. இதர வருமானமாக 620 கோடி ரூபாய் காணப்பட்டுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ. 4,812 கோடியாகவும், முதலாம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம்(Net profit) ரூ. 3,174 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது.
புகையிலை, உணவு மற்றும் தனிநபர் பராமரிப்பு(Personal Care) பொருட்களில் 6 சதவீத வளர்ச்சியை நிறுவனம் பெற்றுள்ளது. ஹோட்டல் துறையில் நிறுவன வருவாய் 15 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. விவசாயம் சார்ந்த பொருட்களில் 15 சதவீத வளர்ச்சியும், காகிதம்(Paper Segment) சார்ந்த தொழிலில் நிறுவனத்தின் வருவாய் 13 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.
ஏற்கனவே ஐ.டி.சி. நிறுவனம் புகையிலையை குறைத்து உணவு மற்றும் இதர நுகர்வோர் சார்ந்த பொருட்களில் கவனம் செலுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து அதன் வருவாயும் மாறுபட்டு வருகிறது. கடந்த 5 வருடங்களில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி சராசரியாக 6 சதவீதம் உள்ளது. பத்து வருட காலத்தில் இது 11 சதவீதமாக காணப்படுகிறது.
ஐ.டி.சி. நிறுவன லாப வளர்ச்சி ஐந்து வருடங்களில் 8 சதவீதமாகவும், 10 வருடங்களில் 14 சதவீதமாக உள்ளது. பங்கு முதலீட்டின் மீதான வருவாய்(Return on Equity) ஐந்து வருட காலத்தில் 24.75 சதவீதமும், பத்து வருடங்களில் 27.50 சதவீதமும் வருவாயை கொடுத்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 2,819 கோடியாக இருந்த நிலையில், தற்போதைய லாபம் 13 சதவீத வளர்ச்சியாகும். ஐ.டி.சி. நிறுவனத்திற்கு கடன்கள்(Debt Free) என்று பெரிதாக எதுவுமில்லை. இதன் சந்தை மதிப்பு 3.5 லட்சம் கோடி ரூபாய். மார்ச் 2018-19ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் கையிருப்பு(Reserves) 56,724 கோடி ரூபாயாக கூறப்பட்டுள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை