வர்த்தக போர் – இந்தியாவின் ஏற்றுமதி சரிந்தது
India’s Exports Plummet – Trade war Impact
நடப்பு 2019ம் வருடத்தில் முதல் முறையாக நாட்டின் வணிக ஏற்றுமதி(Exports) அளவு சரிவடைந்துள்ளது. வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட தகவலில் கடந்த ஜூன் மாதம் வணிக ஏற்றுமதியின் மதிப்பு 25.01 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனவும், இது கடந்த 2018ம் வருடத்துடன் ஒப்பிடும் போது 9.71 சதவீத வீழ்ச்சி எனவும் சொல்லப்பட்டுள்ளது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கடந்த ஒன்பது மாதங்களில் காணப்பட்ட குறைந்த அளவாக ஜூன் மாதத்திற்கான ஏற்றுமதி உள்ளது. இதனை போல நாட்டின் இறக்குமதியும்(Imports) 9 சதவீத அளவிற்கு குறைந்துள்ளது. ஜூன் மாதத்தில் வணிக ஏற்றுமதியின் மதிப்பு சுமார் 40.29 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
ஏற்றுமதியில் பெட்ரோலிய பொருட்கள் 33 சதவீதமும், ரத்தினங்கள் மற்றும் அணிகலன்கள்(Gems & Jewellery) 11 சதவீதமும், அரிசி 28 சதவீதமும், பொறியியல் பொருட்கள் சுமார் 3 சதவீத அளவிலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதே வேளையில் இரும்பு தாது(Iron ore) ஏற்றுமதி 155 சதவீதம், மின்னணு பொருட்கள் 44 சதவீதம், மட்பாண்டம் மற்றும் கண்ணாடி பொருட்களின் ஏற்றுமதி 20 சதவீதமும் ஜூன் மாதத்தில் வளர்ச்சியை கண்டுள்ளன.
ஏற்றுமதி பொருட்களில் மசாலா மற்றும் மருந்து பொருட்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளன. ஏப்ரல்-ஜூன் மாத காலத்தில் இந்தியாவின் ஏற்றுமதி அளவு 1.69 சதவீதம் சரிந்து 81.08 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. ஜூன் மாதத்தில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை(Trade Deficit) 15.28 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
இந்தியாவிற்கு இறக்குமதியாகும் பொருட்களின் மதிப்பு ஜூன் மாதத்தில் 9 சதவீத சரிவை சந்தித்துள்ள நிலையில், முத்துக்கள் மற்றும் விலை மதிப்பற்ற கற்கள், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எந்திரங்கள், மின்சார பொருட்கள் ஆகியவை காரணமாக அமைந்துள்ளன. ஏப்ரல்-ஜூன் மாத காலத்தில் இறக்குமதி அளவு 0.29 சதவீதம் குறைந்து 127.04 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சரிவிற்கு பெரும்பாலும் அமெரிக்க – சீன வர்த்தக போர்(Trade war) தான் காரணமாக இருந்துள்ளது. அமெரிக்க நாட்டிற்கான இறக்குமதியை அதிகமாக கொண்டிருக்கும் நாடு சீனா. கடந்த ஜூன் மாதத்தில் சீனாவின் ஏற்றுமதி 1.3 சதவீதமும், இறக்குமதி 7.3 சதவீதமும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை