வங்கி வட்டி விகித குறைப்பை எதிர்பார்க்கும் இந்திய பங்குச்சந்தை – மத்திய நிதி கொள்கை
Expecting Repo rate cut of 25 bps in June 2019 – Monetary Policy Committee
மத்திய நிதி கொள்கை குழுவின்(MPC) மூன்று நாட்கள் கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று வங்கி வட்டி விகித குறைப்பு நடவடிக்கையை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை ஏப்ரல் மாத 2.92 சதவீத பணவீக்கம் காரணமாக அமையலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நாட்டின் பொருளாதார வளர்ச்சியும்(GDP) ஜனவரி – மார்ச் காலத்தில் 5.8 சதவீதமாக குறைந்து காணப்படுகிறது. விவசாய துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்படவில்லை, நடப்பாண்டில் எதிர்பார்க்கப்பட்ட பருவ மழைக்கு முந்தைய காலத்தில் பெய்த மழையின் அளவும் 25 சதவீதம் குறைவாக உள்ளது.
இன்று வங்கியின் ரெப்போ வட்டி விகிதம்(Bank Repo Rate) 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கடனுக்கான வட்டி விகிதம் குறையலாம், அதே வேளையில் வங்கியில் டெபாசிட் செய்யும் முதலீட்டாளர்களுக்கு வட்டி விகிதம் குறைக்கப்படும்.
பொதுவாக பாரத ரிசர்வ் வங்கி(RBI) வட்டி விகித குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டாலும், வங்கிகள் அதனை உடனே நடைமுறைக்கு கொண்டுவருவதில்லை. இதன் காரணமாக வங்கி வாடிக்கையாளர்களும் வட்டி விகித குறைப்பு பயனை முழுவதுமாக பெற முடிவதில்லை.
வட்டி விகித குறைப்பு 25 அடிப்படை புள்ளிகள் என்றால், பொதுத்துறை வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை 10-15 புள்ளிகள் வரை மட்டுமே குறைக்கின்றன. ஆனால் டெபாசிட்தாரர்களின் வட்டி விகிதத்தை(Interest rate) உடனே முழுவதுமாக குறைத்து விடுகின்றன.
நிறுவனங்களின் வருவாய் குறைவு, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஏற்றம் பெறாதது மற்றும் உலக பொருளாதார மந்த நிலை ஆகிய காரணத்தால் இந்திய பொருளாதாரம் சுணக்கம் அடைந்திருந்தாலும், வங்கி வட்டி விகித குறைப்பும், பணவீக்க கட்டுப்பாடும்(Inflation) சந்தைக்கு சற்று சாதகமாக உள்ளன.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை