BSE Sensex since 1875

ஒரே நாளில் 1400 புள்ளிகளை கடந்த சென்செக்ஸ் (BSE Sensex) குறியீடு

ஒரே நாளில் 1400 புள்ளிகளை கடந்த சென்செக்ஸ் (BSE Sensex) குறியீடு

The Bse benchmark Index Sensex crossed 1400 points in a Single day

 

மும்பை பங்குச்சந்தையின் முக்கிய குறியீடான பி.எஸ்.இ. சென்செக்ஸ், சந்தை மதிப்பின் அடிப்படையில் 30 நிறுவனங்களை உள்ளடக்கியது. 1978-79ம் காலங்களில் 100 என்ற புள்ளிகளை கொண்டு தொடங்கிய சென்செக்ஸ் குறியீடு தற்போது 39,000 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. மும்பை சென்செக்ஸ் குறியீடு கடந்த 40 வருடங்களில் 400 மடங்கு அளவில் வளர்ச்சியை கண்டுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த 19ம் தேதியுடன் தேர்தல் முடிவடைந்த நிலையில், அன்று மாலை அறிவிக்கப்பட்ட கருத்துக்கணிப்பில்(Exit Poll Predictions 2019) நடப்பாட்சியில் உள்ள கட்சியே மீண்டும் ஆட்சியில் அமருவதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. இதன் தாக்கம் நேற்று(20-05-2019) இந்திய பங்குச்சந்தையிலும் தென்பட்டது. வர்த்தகத்தின் துவக்கத்திலே 500 புள்ளிகளை தாண்டி வர்த்தகமான சென்செக்ஸ் குறியீடு வர்த்தக முடிவில் 1421 புள்ளிகள் உயர்ந்து முடிவடைந்தது.

 

சமீப காலங்களில் ஒரே நாளில் அதிகபட்ச புள்ளிகளை கொண்டதாக நேற்றைய வர்த்தகம் இருந்தது. இதே போல தேசிய பங்குச்சந்தையான நிப்டி(Nifty50) குறியீடும் 421 புள்ளிகள் உயர்ந்து முடிவடைந்தது. கடந்த 2009ம் ஆண்டு தேர்தல் முடிவன்று சென்செக்ஸ் குறியீடு ஒரே நாளில் 17 சதவீதம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு மே மாதத்தில் பெரும்பாலும் இறக்கத்தை கண்டிருந்த இந்திய பங்குச்சந்தை நேற்று விறுவிறுப்பான ஏற்றத்தை அடைந்தது. நேற்றைய வர்த்தகத்தில் மட்டும் முதலீட்டாளர்களின் முதலீடு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் அளவில் லாபத்தில் முடிந்தது.

 

மும்பை சென்செக்ஸ் குறியீடு(BSE Sensex30) கடந்த ஒரு வாரத்தில் 6 சதவீத வளர்ச்சியை கொண்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 1.80 சதவீதம் என்ற அளவிலும், 6 மாதம் மற்றும் ஒரு வருடம் முறையே 11% மற்றும் 13.70 சதவீத வளர்ச்சியையும், கடந்த மூன்று வருட காலங்களில் சுமார் 55 சதவீத லாபத்தையும் தந்துள்ளது.

 

சென்செக்ஸ் குறியீட்டின் தற்போதைய 52 வார மற்றும் வாழ்நாள் உச்சம் 39,487 புள்ளிகளாக உள்ளது. இன்று ஒரு புதிய உச்சத்தை அடையும் வாய்ப்பு மும்பை பங்குச்சந்தையின் பிரதான குறியீட்டுக்கு உள்ளது. இந்திய பங்குச்சந்தை தற்போது தேர்தல் முடிவுகளை நோக்கி சென்று கொண்டிருப்பதால் இந்த ஏற்றம் சில நாட்கள் மட்டுமே நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தேர்தல் முடிவுக்கு பின், வங்கி வட்டி விகித அறிவிப்பு(RBI Policy), வாராக்கடன் பிரச்னைகள் மற்றும் நாடுகளிடையே நடந்து கொண்டிருக்கும் வர்த்தக போர்(Trade war) போன்றவை சந்தையை நகர்த்தும். குறுகிய காலத்தில் இந்திய பங்குச்சந்தை இறக்கத்தை காண்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதே வேளையில், நீண்ட கால நோக்கில் முதலீட்டாளருக்கு இந்திய பங்குச்சந்தை நல்ல ஒரு வருமானத்தை தந்துள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s