ITC Limited

யோகேஷ் தேவேஸ்வரின் பிரமாண்டமான ஐ.டி.சி. நிறுவனத்தின் கதை

யோகேஷ் தேவேஸ்வரின் பிரமாண்டமான ஐ.டி.சி. நிறுவனத்தின் கதை

The Story of ITC – Lead by Yogesh Chander Deveshwar

 

கடந்த சனிக்கிழமை அன்று(11-05-2019) ஐ.டி.சி. நிறுவனத்தின் தலைவர் திரு. யோகேஷ் சந்தர் தேவேஸ்வர் உடல் நலக்குறைவால் காலமானார். இந்திய தொழில் உலகில் மாபெரும் சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியவர்களில் இவரும் ஒருவர். நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு, 1947ம் ஆண்டு பிப்ரவரி மாதம் லாகூரில் பிறந்தவர் யோகேஷ் தேவேஸ்வர்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

டெல்லி ஐ.ஐ.டி.கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்ற யோகேஷ், பின்பு அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தொழில் சார்ந்த கல்வியை பயின்றார். 1910ம் வருடம் வில்ஸ்(Wills) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட புகையிலை நிறுவனம் தான் ஐ.டி.சி. ஆரம்ப காலத்தில் இம்பீரியல் புகையிலை நிறுவனம்(Imperial Tobacco Company) என்ற பெயரிலிருந்து இந்திய புகையிலை நிறுவனம் என மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 1974ம் காலங்களில் ஐ.டி.சி.(ITC Limited) நிறுவனம் என சுருக்கம் பெற்றது.

 

1968ம் ஆண்டு ஐ.டி.சி. நிறுவனத்தில் இணைந்த யோகேஷ், அடுத்த 15 வருடத்தில் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் முக்கிய பதவி வகித்தார். 1996ம் வருடம் யோகேஷ் தேவேஸ்வர் ஐ.டி.சி. நிறுவனத்தின் தலைவரானார்(CEO). இவர் இருந்த காலத்தில் புகையிலையை மட்டுமே கொண்டு இயங்கும் நிறுவனம் என விமர்ச்சிக்கப்பட்டு வந்த நிலையில், நாட்டில் இன்று பெரும்பாலான நுகர்வோர் பொருட்களின் பிராண்டாக ஐ.டி.சி. நிறுவனத்தை மாற்றினார்.

 

புகையிலையை பெரும்பான்மை தொழிலாக இந்த நிறுவனம் கொண்டிருந்தாலும், கடந்த சில வருடங்களாக புகையிலை பங்களிப்பை குறைத்து வருகிறது. நுகர்வோர் துறையில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களில் இந்த நிறுவனத்தின் சேவை வியக்கத்தக்க வகையில் இருக்கிறது.

 

உணவுப்பொருட்கள், அழகு பொருட்கள், அலுவலகம் சார்ந்த பொருட்கள், தீப்பெட்டி, ஊதுவத்தி, பேப்பர் சார்ந்த பொருட்கள் என தனது தொழிலை பன்முகத்தன்மையாக உருவாக்கினார் யோகேஷ். இந்திய ஹோட்டல் துறையில் 90க்கும் மேற்பட்ட நட்சத்திர விடுதிகளை கொண்டு நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது ஐ.டி.சி. நிறுவனம். தொழில்நுட்ப துறையிலும் இதன் பங்கு முக்கியத்துவமாக அமைகிறது.

 

ஆசிர்வாத்(Aashirvaad), சன் பீஸ்ட், கேண்டி மேன், பியாமா வில்ஸ்(Fiama Di Wills), லைப் ஸ்டைல், கிளாஸ் மேட்(Classmate) நோட்டு புத்தகங்கள், மங்கள் தீப்(Mangaldeep), பார்க் ஹோட்டல்கள் என பல பிராண்டுகளில் புரட்சியை ஏற்படுத்தினார். தற்போது ஐ.டி.சி. நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3,65,000 கோடி ரூபாய்க்கு மேலாகவும், 26,000க்கு மேற்பட்ட பணியாளர்களையும் கொண்டு இயங்கி வருகிறது.

 

இந்த நிறுவனம் சமீபமாக விவசாயம் மற்றும் பால் வளம் சார்ந்த தொழிலில் கவனம் செலுத்தி வருகிறது. மத்திய ரிசர்வ் வங்கியின் இயக்குனர் குழுவிலும் பொறுப்பு வகிக்கும் யோகேஷ் தேவேஸ்வர்(YC Deveshwar), 2013ம் ஆண்டில் உலகின் தலைசிறந்த நிறுவன தலைவர்களில் 7வது இடத்தை பிடித்தார். 2011ம் ஆண்டு அரசின் பத்மபூஷன் விருதையும் பெற்றுள்ளார். இந்திய கார்ப்பரேட் தொழிலில் நீண்டகாலம் தலைவர் பதவி வகித்தவர்களில் தற்போது இவரே முதலிடத்தில் உள்ளார்.

 

இன்று(13-05-2019) ஐ.டி.சி. நிறுவனத்தின் 2018-19ம் நிதியாண்டுக்கான நான்காம் காலாண்டு முடிவுகளும் வெளிவர உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s