நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 2.92 சதவீதமாக உயர்வு
India’s Retail Inflation increased to 2.92 percent in the month of April 2019
கடந்த ஏப்ரல் மாதத்தில் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பால் நாட்டின் சில்லரை பணவீக்கம் 2.92 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய மார்ச் மாதத்தில் சில்லரை பணவீக்கம் 2.86 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஐந்து வருட காலமாக பணவீக்கத்தின்(Consumer Price Index -CPI) அளவு குறைந்து வந்துள்ள நிலையில், பாரத ரிசர்வ் வங்கி பணவீக்க மதிப்பீட்டின் அடிப்படையில் வட்டி விகிதத்தையும்(Repo Rate) குறைத்து வந்தது. இதனால் வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதம் குறைந்து இருந்தது வாடிக்கையாளர்களுக்கு சாதகமாக உள்ளது. ஏப்ரல் மாதத்தில் சில்லரை பணவீக்கம் சற்று உயர்ந்து இருப்பினும், சந்தை வல்லுநர்கள் எதிர்பார்த்த 2.97 சதவீத பணவீக்கம் என்ற அளவை எட்டவில்லை.
2.92 சதவீத பணவீக்கம் என்பது கடந்த ஆறு மாதத்தில் காணப்பட்ட அதிகபட்ச அளவாகும். கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தின் முடிவில் 0.30 சதவீதமாக இருந்த உணவுப்பொருட்களின் பணவீக்கம்(Food Inflation), தற்போது 1.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது போல காய்கறிகளின் விலை 2.87 சதவீதமும், மீன் மற்றும் மாமிசம் 7.55 சதவீதமாகவும் மற்றும் பால் பொருட்கள் 0.42 சதவீதமாகவும் இருந்துள்ளது.
பழங்கள், சர்க்கரை மற்றும் பருப்பு வகைகளின் விலை கடந்த மாதம் குறைந்துள்ளது. எரிபொருட்களின்(Fuel & Light) பணவீக்கம் 2.42 சதவீதத்திலிருந்து 2.56 சதவீதமாக அதிகரித்துள்ளது. வீட்டு மனை, ஆடைகள் மற்றும் காலணிகள் ஆகியவை விலை குறைந்து காணப்படுகிறது.
மார்ச் மாதத்தில் கிராமப்புறங்களில் காணப்பட்ட 1.80 சதவீதமாக இருந்த பணவீக்கம், கடந்த மாதத்தில் 1.87 சதவீதமாக(Rural Inflation) உயர்ந்துள்ளது. இது போல நகர்ப்புற(Urban) பணவீக்க விகிதம் 3.43 சதவீதத்திலிருந்து 4.23 சதவீதமாக அதிகரித்து இருந்தது.
பாரத ரிசர்வ் வங்கியின்(RBI) மதிப்பீட்டின் படி, ஏப்ரல் மாத பணவீக்கம் எதிர்பார்த்த அளவில் உயரவில்லை. இதனால் அடுத்து வரும் காலங்களிலும் வட்டி விகித குறைப்பு நடவடிக்கை இருக்கலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை