Fixed Deposit Rates

வங்கி வைப்பு நிதிக்கு வரிகள்(Fixed Deposit) எப்படி ? வருமான வரி தாக்கல் – பாடம் 8

வங்கி வைப்பு நிதிக்கு வரிகள்(Fixed Deposit) எப்படி ? வருமான வரி தாக்கல் – பாடம் 8

Tax for Fixed Deposits – Income Tax Returns – Lesson 8

 

வங்கியில் முதலீடு செய்யும் வைப்பு நிதிக்கு கிடைக்கப்பெறும் வட்டி வருமானம் வரி விதிப்புக்கு உட்பட்டது என நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம். பொதுவாக வைப்பு நிதியின் மூலம் பெறப்படும் வட்டி வருவாய், வருமான வரி சட்டத்தின் படி இதர வருமானமாக(Other Source of Income) கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வைப்பு நிதியில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் வட்டி வருவாய் கிடைக்கும் போது, வங்கி மூலம் டி.டி.எஸ்.(TDS) பிடித்தம் செய்யப்படும். நடப்பு மதிப்பீட்டு வருடத்தின்(AY 2019-20) படி, வைப்பு நிதி வட்டி வருமானம் ஒரு நிதியாண்டில் ரூ.10,000/- ஐ தாண்டும் பட்சத்தில் டி.டி.எஸ். உண்டு. 10,000 ரூபாய்க்கு மேற்பட்ட வருமானத்திற்கு 10 சதவீதம்(பாண் எண்ணை சமர்பித்திருந்தால்) டி.டி.எஸ். பிடித்தம் செய்யப்படும். பாண்(PAN) எண்ணை வங்கியில் இணைக்காத நிலையில் அதிகபட்சமாக 20 சதவீதம் வரை வங்கிகள் வரி பிடித்தம் செய்யலாம்.

 

வங்கிகளில் டி.டி.எஸ்.(Tax Deducted at Source) பிடித்தம் செய்யாமல் இருக்க படிவம் 15G ஐ ஒருவர் பயன்படுத்தலாம். அதே வேளையில் ஒருவர் வருமான வரி செலுத்துபவராக இருப்பின், அவர் வருமான வரி தாக்கல் செய்யும் போது, இந்த வட்டி தொகைக்கு வரி செலுத்த நேரிடலாம். வங்கிகளில் வைப்பு நிதியின் மூலம் பெறப்படும் வருவாய், படிவம் 26AS மூலம் கண்டறியப்படும். வருமான வரம்பிற்குள் வராதவர்கள் வங்கிகள் பிடித்தம் செய்த டி.டி.எஸ். தொகையை, வரி தாக்கல் செய்த பின் திரும்ப பெறலாம்.

 

ஒருவர் வெவ்வேறு வங்கிகளில் அல்லது ஒரே வங்கியில் பல பிக்ஸட் டெபாசிட் கணக்குகளை வைத்திருந்தாலும், அனைத்தும் ஒன்றாக சேர்க்கப்பட்டு வட்டி வருமானம் கணக்கிடப்படும். மூத்த குடிமக்களுக்கு பெறப்படும் வட்டி வருமானத்தில் ரூ.50,000/- வரை டி.டி.எஸ். பிடித்தம் செய்யப்படமாட்டாது. மூத்த குடிமக்களுக்கு டி.டி.எஸ். பிடிக்காமல் இருக்க படிவம் 15H ஐ நிரப்ப வேண்டும்.

 

தனிநபர் ஒருவரின் மாத சம்பளத்துடன், வங்கியில் பெறும் வட்டி வருவாய் இதர வருமானத்தில் சேர்க்கப்பட்டு, அவரது மொத்த வருமானத்தில் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். வைப்பு நிதிக்கு சொல்லப்பட்ட வரி விதிப்பு முறை, தொடர் வைப்பு கணக்கு(Recurring Deposit) மற்றும் சேமிப்பு கணக்கிற்கும் பொருந்தும்.

 

வரி சேமிப்பை கொண்ட ஐந்து வருட வங்கி வைப்பு நிதி திட்டமும்(Tax saving FD) உள்ளது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ஐந்து வருட காலத்திற்கு முதலீட்டை பெற முடியாது. வருமான வரி சட்ட பிரிவு 80சி மூலம் ஒருவர் இதற்கு வரி சலுகையை பெறலாம். ஆனால் முதலீட்டின் முடிவில் கிடைக்கப்பெறும் வட்டி தொகைக்கு வரி விதிப்பு உண்டு. இது போன்ற சமயங்களில் ஒருவர் பங்கு சார்ந்த வரி சேமிப்பு பரஸ்பர நிதிகளை(Equity linked savings scheme -ELSS) தேர்ந்தெடுக்கலாம். பங்கு சார்ந்த வரி சேமிப்பு திட்டத்தில் மூன்று வருட லாக்-இன்(Lock-in) காலமாகும். இவற்றில் கிடைக்கும் வருமானத்திற்கும் வரி சலுகை உண்டு(EEE -Exempt) என்பதை கவனிக்கலாம்.

 

இன்னும் திட்டமிடுவோம்…

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s