வெளிநாட்டு வாழ் இந்தியர் – வருமான வரி தாக்கல் – பாடம் 7
Non Resident Indian(NRI) – Income Tax Returns – Lesson 7
இன்று நம் நாட்டிலிருந்து அயல்நாட்டிற்கு சென்று வேலை செய்யும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் சிலர், அங்கே வேலையை தேடி கொள்வதும் இயல்பானதாகி விட்டது. நம் நாட்டின் அந்நிய செலவாணி(Foreign Currency Reserves) மதிப்பு உயர்வதற்கும் அயல்நாட்டு வாழ் இந்தியர்கள் துணைபுரிகின்றனர்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நாட்டில் உள்ள இந்திய குடிமக்களுக்கு இருக்கும் வருமான வரி சட்டம், அயல்நாட்டு வாழ் இந்தியர்களுக்கு பொருந்துவதில்லை. அவர்களுக்கென்று வரிச்சட்டத்தில் தனி வரையறை உள்ளது. வரி சட்டத்தின் படி, இந்திய குடிமகனாக நம்மை தகுதிப்படுத்தி கொள்ள பின்வரும் விதிமுறைகள் அமலில் உள்ளன,
- தனி நபர் ஒருவர் இந்திய நாட்டில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் அல்லது 182 நாட்கள் மற்றும் அதற்கு மேலாக இருந்திருக்க வேண்டும்.
- கடந்த நான்கு வருடத்தில் ஏதாவது ஒரு வருடம் முழுவதும் இந்திய நாட்டில் தங்கியிருக்க வேண்டும் மற்றும் சொல்லப்பட்ட காலத்தில் 2 மாதங்கள் – அதாவது 60 நாட்களும் இருந்திருத்தல் வேண்டும்.
மேலே சொன்ன விதிமுறைகளில் வராதவர்கள் வெளிநாட்டு வாழ் இந்தியர் எனப்படுவர். இந்த விதிமுறைகள் மற்றும் குடிமக்கள் வரையறை யாவும் வருமான வரி சட்டத்திற்கு(Income Tax Act) மட்டுமே என்பதை கவனத்தில் கொள்வது நன்று.
வெளிநாட்டு வாழ் இந்தியர்(Non Resident Indian), அயல் நாட்டில் சம்பாதிக்கும் வருமானத்திற்கு அந்த நாட்டின் வரி சட்டப்படி, வருமான வரி வசூலிக்கப்படும். ஆனால் தான் வேலை பார்க்கும் நிறுவனம் இந்திய நிறுவனமாக இருந்து நம் நாட்டில் வருமான கணக்கு சமர்பிக்காமல் இருக்க வேண்டும்.
வெளிநாட்டு இந்தியர், மற்ற நாடுகளில் சம்பாதித்தாலும் தான் வேலை பார்க்கும் நிறுவனம் இந்திய நிறுவனமாகவோ அல்லது இந்தியாவிலோ வருவாய் கணக்கை கொண்டிருந்தால், நம் நாட்டின் சட்டப்படி தான் வரி விதிக்கப்படும். சுருக்கமாக நீங்கள் அமெரிக்காவில், அமெரிக்க நிறுவனத்திற்காக பணிபுரிந்தால், நீங்கள் அந்த நாட்டின் வரிச்சட்டத்தில் வருவீர்கள்.
தனி நபர் ஒருவர், வெளிநாட்டு வாழ் இந்தியர் என சொல்லப்படுவதற்கு முன்பு, நம் நாட்டின் வங்கியில் அவர் ஏதேனும் முதலீட்டை மேற்கொண்டிருந்தால் அது இந்திய வரி சட்டத்தின் கீழ் வரும். அயல்நாட்டு வாழ் இந்தியர், இந்தியாவில் செய்யப்படும் முதலீடு மற்றும் சேமிப்பு நம் நாட்டின் வரி சட்டத்தில் மட்டுமே பங்குபெறும். எனவே சொல்லப்பட்ட வருவாய் இந்தியாவில் மட்டுமே இருந்திருந்தால், நம் நாட்டில் வருமான வரி தாக்கல் செய்வது அவசியம். மற்ற வருமானங்களுக்கு அந்தந்த நாட்டின் சட்டப்படி செயல்பட்டால் போதும்.
வெளிநாட்டு வாழ் இந்தியர் நம் நாட்டில் மூன்று விதமான வங்கி கணக்குகளை துவக்கலாம். அவை NRO (Non Resident Ordinary), NRE(Non Resident External) மற்றும் FCNR(Foreign Currency Non Resident Account) ஆகும். NRO கணக்கு என்பது ஒருவர் இந்தியாவில் சம்பாதித்த பணத்தை நிர்வகிக்கவும், NRE கணக்குகள் அயல் நாட்டில் சம்பாதித்த பணத்தை பரிமாற்றம் செய்து ரூபாய் மதிப்பில் நிர்வகிக்கவும் உதவுகிறது.
FCNR என்பது ஒரு நிலையான வைப்பு வங்கி கணக்கு. இந்த கணக்கினை கொண்டிருக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒருவர் தான் வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை அந்த நாட்டின் பண மதிப்பில் வரவு வைத்து கொள்ளலாம். இந்த கணக்கில் ஆறு வெவ்வேறு நாட்டினுடைய பணத்தினை கொண்டு பராமரிக்கலாம் – இங்கிலாந்து பவுண்டு, யூரோ, ஜப்பான் யென், அமெரிக்க, ஆஸ்திரேலிய மற்றும் கனடா நாட்டின் டாலர்கள். சில வங்கிகள் மற்ற நாடுகளின் பண மதிப்பையும் வரவு வைக்கும் சேவையை அளிக்கிறது.
NRO கணக்கில் கிடைக்கப்பெறும் வட்டி வருமானம் வரிக்கு உட்பட்டது. அதே வேளையில் NRE மற்றும் FCNR கணக்கில் பெறும் வட்டி வருவாய் வரி சலுகையை பெறும். அயல்நாட்டு வாழ் இந்தியர்களும், உள்நாட்டில் பெறக்கூடிய வருமானத்திற்கு வரி சலுகைகளை (Section 80C, 80D, 80E, 80G, etc) பெறலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை