மீண்டும் வலுக்கும் சீன-அமெரிக்க வர்த்தக போர்
China-US Trade war to Reinforce 2019
உலக பொருளாதாரத்தில் கடந்த ஒரு வருடமாக பேசப்பட்டு வந்த விஷயம் அமெரிக்க-சீன வர்த்தக போர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 10 சதவீதத்திலிருந்து 25 சதவீதம் வரை உயர்த்த முடிவெடுத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். இறக்குமதி வரியை உயர்த்தப்படவுள்ள நிலையில், இதன் மதிப்பு சுமார் 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என சொல்லப்படுகிறது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நடந்து வருகிற இந்த வர்த்தக போரில், ஏற்கனவே அமெரிக்காவுக்கான சீன பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு கடந்த சில காலங்களாக வெகுவாக குறைந்துள்ளது. டிரம்ப்(Donald Trump) முடிவினால், வரவிருக்கும் நாட்களில் இரு நாடுகளுக்கிடையே நடக்க இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படலாம் என சீன அரசு தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வரி உயர்வு(Import Tax) கொள்கை மற்ற நாடுகளை மட்டுமில்லாமல், தங்களது நாட்டிலும் அமெரிக்க மக்கள் விலை உயர்வை சந்திக்கலாம். இதன் காரணமாக அமெரிக்க நாட்டிலும், பெரும்பாலானவர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வரி உயர்த்தப்படும் நிலையில், சீன யுவான் மதிப்பு மற்றும் அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்ற-இறக்கத்தில் காணப்படுகின்றன.
2018ம் ஆண்டில், அமெரிக்காவின் 3வது பெரிய ஏற்றுமதி(Largest Export) நாடாக சீனா உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடத்தில் அமெரிக்காவிலிருந்து சீன நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவையின் மதிப்பு 120 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இது இதற்கு முந்தைய வருடத்தை விட 7 சதவீத குறைவாகும்.
இது போல அமெரிக்காவின் மிக பெரிய இறக்குமதி(Largest Import) நாடாக சீன இருந்து வருகிறது. 2018ம் ஆண்டில் சீன நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வர்த்தகம் சுமார் 540 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது இதற்கு முந்தைய வருடத்தை காட்டிலும் 6.7 சதவீத வளர்ச்சியாகும்.
சீனாவுடனான அமெரிக்க நாட்டின் வர்த்தக பற்றாக்குறை(Trade Deficit) 420 பில்லியன் அமெரிக்க டாலர்கள். சீன நாட்டில் உள்ள அந்நிய நேரடி முதலீட்டில்(FDI) அமெரிக்காவின் பங்கு சுமார் 107 பில்லியன் டாலர்களாகும் (2017ம் ஆண்டு இறுதியின் படி). சீனாவின் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிப்பது பருத்தி, தேயிலை, அரிசி, உருளைக்கிழங்கு மற்றும் சோயா பீன்ஸ்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை