குறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன ஆதாயம் – வருமான வரி தாக்கல் – பாடம் 6
Short term and Long term Capital Gains – Income Tax Returns – Lesson 6
வீட்டுக்கடன் மூலம் வாங்கிய அல்லது கட்டிய வீடு உங்கள் சொத்தாக கருத முடியாது, அது ஒரு கடனே(Liability). நீங்கள் உங்கள் கடனை முடிக்கும் வரையில், அது மற்றொருவரின் (வங்கியின்) சொத்து ஆகும். நீங்கள் உரிமையாளர் அல்ல… இதனை நம்மில் எத்தனை பேர் ஒத்துக்கொள்வோம் என தெரியவில்லை.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பொதுவாக நம் நாட்டில் சொத்து(Assets) எனப்படுவது ஒரு நிலமாகவோ, கட்டிடமாகவோ, தங்கமாகவோ அல்லது மதிப்புமிக்க ஏதோ ஓன்றாக இருக்கலாம். சொத்துக்கள் என்பது தொட்டு உணரக்கூடிய உறுதியான சொத்துக்கள் மற்றும் நிதி சார்ந்த சொத்துக்களாக இருக்கலாம். நிலம், வீடு, கட்டிடம், அணிகலன்கள், காப்புரிமைகள், பங்கு உரிமை மற்றும் இயந்திரங்கள் போன்றவை மூலதன சொத்துக்களாக(Capital Assets) சொல்லப்படுகிறது. விவசாய நிலம் மூலதன சொத்தாக கருதப்படாது.
நிலம், வீடு, இயந்திரங்கள் ஆகியவை தொட்டு உணரக்கூடிய சொத்தாகவும்(Physical Assets), காப்புரிமை, பங்குகள், வங்கி முதலீடுகள், வர்த்தக முத்திரைகள் ஆகியவை நிதி சார்ந்த சொத்துக்களாகவும்(Financial Assets) சொல்லப்படுகிறது. நிதி சார்ந்த சொத்துக்கள் காகித வடிவிலான சொத்துக்கள் எனவும் அழைக்கப்படும்.
மூலதன சொத்துக்களின் மூலம் பெறப்படும் வருமானம் அல்லது லாபம், மூலதன ஆதாயம்(Capital Gains) எனப்படுகிறது. மூலதன ஆதாயம் – குறுகிய கால மற்றும் நீண்டகால ஆதாயம் என இரு வகைப்படும். மூலதன ஆதாய காலத்திற்கு(Holding Period) ஏற்ப வரி விகிதங்களும் மாறுபடும்.
அசையா சொத்துக்கள்(Immovable) மூலம் கிடைக்கப்பெறும் வருமானம், சொத்தினை வாங்கிய 24 மாதங்களுக்குள் விற்பனை செய்திருப்பின் அது குறுகிய கால மூலதன ஆதாயம்(Short term Capital Gains) எனப்படும். இதுவே 24 மாதங்களுக்கு மேலாக இருக்கும் பட்சத்தில், நீண்ட கால மூலதன ஆதாயமாகும். பட்டியலிடப்படாத பங்குகளுக்கு மேலே சொன்ன 24 மாத வரையறை பொருந்தும்.
சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகள்(Public Listed Shares) மற்றும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகளுக்கு குறுகிய காலம் என்பது 12 மாதங்களாகும். வாங்கிய பங்குகள் அல்லது யூனிட்களை 12 மாதங்களுக்குள் விற்றால் அது குறுகிய கால மூலதன ஆதாயமாக கருதப்படும். 12 மாதங்களுக்கு மேலான விற்பனை நீண்ட கால மூலதன ஆதாயம் ஆகும்.
கடன் சார்ந்த பத்திரங்கள்(Debt Instruments) அல்லது கடன் சார்ந்த பரஸ்பர நிதிகள் மற்றும் இதர சொத்துக்களுக்கு 36 மாதங்கள் வரை குறுகிய காலமாகும். 36 மாதங்களுக்கு மேலான முதலீட்டு விற்பனை நீண்ட கால மூலதன ஆதாயம்(LTCG -Capital Gains) என சொல்லப்படுகிறது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை