கடந்த 17 மாதங்களில் 76.48 லட்சம் பேர் புதிதாக வேலை பெற்றவர்கள் – இ.பி.எப்.ஓ. தகவல்
76.48 Lakh New Jobs created in the last 17 Months – EPFO
நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக உள்ளதாக சில மாதங்களுக்கு முன் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தரவு கூறியிருந்தது. தற்போது இதற்கு மாறாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் வேலைவாய்ப்பு சார்ந்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அவை கூறியதாவது, ‘ நாட்டில் கடந்த செப்டம்பர் 2017 முதல் நடப்பு வருட ஜனவரி மாதம் வரையிலான 17 மாதங்களில் 76.48 லட்சம் பேர் வேலை பெற்றவர்களாக உள்ளனர் ‘.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் அனைத்தும் அமைப்பு சார்ந்த துறையில்(Organized Sector) என்பதும் கவனிக்கத்தக்கது. வேலைகள் உருவாக்கப்பட்டதற்கு சான்றாக, சொல்லப்பட்ட 17 மாதங்களில் இ.பி.எப்.ஓ. நிறுவனத்திற்கு 76.48 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். நடப்பு வருடத்தின் ஜனவரி மாதத்தில் மட்டும் 8.96 லட்சம் வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
2019ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உருவாக்கப்பட்ட வேலைகளில் சுமார் 2.45 லட்சம் வேலைகள்(Created Jobs) 22-25 வயது பிரிவை சார்ந்தவர்கள், மேலும் 2.24 லட்சம் வேலைகள் 18 வயதிலிருந்து 21 வயது உள்ளவர்கள் ஆவர். இ.பி.எப்.ஓ.(Employees Provident Fund Organization) நிறுவனத்தில் இதுவரை இணைந்துள்ள சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஆறு கோடி நபர்களுக்கு மேலாக உள்ளது.
வேலையின்மையா அல்லது தொழில்முனைவா ? வேலையின்மை விகிதம்
சொல்லப்பட்ட 17 மாதங்களில் சுமார் 29 ஆயிரம் சந்தாதாரர்கள் இ.பி.எப்.ஓ. திட்டத்திலிருந்து வெளியேறி உள்ளனர். இவற்றில் தனியார் நிறுவனத்திலிருந்து விலகி சென்று அரசு பணியில் சேர்ந்தவர்களும் அடங்குவர். கடந்த வருடத்தின் முடிவில் 7.16 லட்சம் வேலைகள் உருவாக்கப்படும்(Employment) என்ற முந்தைய கணிப்பை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் பின்னர் அதனை 7.03 லட்சமாக மறுமதிப்பீடு செய்திருந்தது.
எந்தவொரு நிறுவனத்திலும் குறைந்தபட்சம் 20 தொழிலாளர்களை கொண்டிருக்கும் நிலையில், அந்த நிறுவனம் இ.பி.எப்.ஓ.(EPFO) திட்டத்துடன் இணைத்து கொள்ள வேண்டும். பின்னர் தனது தொழிலாளர்களின் வருவாயில் குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து, நிறுவனத்தின் சார்பிலும் அதே அளவு தொகையை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் தொழிலாளர்களின் நிதி சார்ந்த எதிர்காலம் பாதுகாப்பாக அமையும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை