வேலையின்மையா அல்லது தொழில்முனைவா ? வேலையின்மை விகிதம்

வேலையின்மையா அல்லது தொழில்முனைவா ? வேலையின்மை விகிதம்

Unemployment or Entrepreneurship – Unemployment Rate

 

சமீபத்தில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து கொண்டு வருவதாக ஆய்வுகளும், அதனை தொடர்ந்து பத்திரிகைகளில் செய்திகள் வருவதுமாக உள்ளது. சி.எம்.ஐ.இ.(Centre for Monitoring Indian Economy -CMIE)  தரவுகளின் படி கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டில் ஒட்டுமொத்தமாக வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.13 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 8.80 சதவீதமாகவும் மற்றும் கிராமப்புறங்களில் 6.24 சதவீதமாகவும் உள்ளது.
அதிகபட்ச வேலைவாய்ப்பின்மையாக திரிபுராவில் 30.9 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக கர்நாடக மாநிலத்தில் 1.50 % என்ற அளவிலும் தரவு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2.5 சதவீதமும் மற்றும் புதுச்சேரியில் 1.7 என்ற விகிதமும் இருந்துள்ளது. நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக(Unemployment Rate) காணப்பட்ட வருடமாக 2016-17ம் வருடங்களை குறிப்பிட்டுள்ளது. அதாவது தொழிலாளர்களின் பங்களிப்பு விகிதம்(Labour Participation Rate -LPR %) மிக குறைவாக இருப்பதாக கணிப்பில் உள்ளது.

 

அரசு சார்பாக நடத்தப்படும் வேலைவாய்ப்பின்மை சார்ந்த பல்வேறு கருத்து கணிப்புகளில் கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் தான் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தொழில்நுட்பம் மேம்பட்டு வரும் இப்போதைய காலத்தில் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் கல்வியில் வளர்ச்சி வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறை மத்திய அரசின் ஆட்சி மாறும் போது, வேலைவாய்ப்பின்மை பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. உண்மையில் இங்கு வேலை வாய்ப்பு இல்லையா அல்லது பயன்படுத்தப்படுவது இல்லையா என்பதே ஒவ்வொருவரின் கேள்வியாக இருக்கிறது.

Unemployment rate CMIE

நுகர்வோர் பயன்பாடு(Consumerism) அதிகரித்து வரும் நம் நாட்டில், பொருளாதாரமும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கொண்டு தான் உள்ளது. அப்படியிருக்கும் போது, இந்த புள்ளி விவரங்கள் எதனை குறிப்பிடுகிறது என்பதே ஒரு ஐயம். பொதுவாக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் கருத்துக்கணிப்புகள் செயல்படாமல் போவதற்கான சாத்தியங்கள் அதிகம். ஏனெனில் அதன் வளர்ச்சி ஒவ்வொரு காலத்திலும் மிகவும் வேறுபடும். தூங்கா நகரத்தில் இன்று விடிய விடிய வணிக கடைகள் செயல்படாவிட்டாலும், ஸ்விக்கி(Swiggy), உபேர் ஈட்ஸ்(Uber Eats), ஜொமாடோ(Zomato) போன்ற உணவு சார்ந்த நிறுவனங்கள் வந்திருக்க முடியாது.

 

ஒரு புறம் படித்த படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை என்று இளைஞர்கள் மற்றொரு வேலைக்கு செல்வதும், அயல்நாட்டு வாய்ப்பை(Overseas Job Opportunity) அறிவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. வேலைவாய்ப்பின்மை என்ற ஒற்றை கருத்தை மட்டுமே நாம் கொண்டிருக்கும் இந்த வேளையில், தொழில்முனைவுகளை(Entrepreneurship) தேடி செல்வதையும் நாம் மறுக்க முடியாது. இன்றைய இளைஞர்களில் பெரும்பாலோர், தங்களின் மேற்படிப்பு முடிந்தவுடன் வேலைக்கு செல்ல விரும்புவதை காட்டிலும் தொழில்முனைவு புரிவதில் ஆர்வமாக உள்ளனர்.

 

தொழில்முனைவதின் அவசியமும் இன்றைய காலகட்டத்தில் தேவையே. தொழில்முனைதலின் ரகசியமே வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான(Creating Jobs -Employment) சூழல் தான். எனினும், இன்று பெரும்பாலான தொழில்கள் தோல்வியடைய காரணம் நிதி சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தாததே என சொல்லப்படுகிறது. முன்னொரு காலத்தில் தனக்கென விவசாய நிலம் கொண்டு, தொழில்முனைதல் புரிந்தவர்கள் தான் நாம். ஆனால் விவசாய நிலங்களில் நமது பங்களிப்பு தற்போது அதிகம் இல்லையென்றாலும், புதுமையான விஷயங்களை செய்து கொண்டு தான் இருக்கிறோம். அரசாங்கம் மட்டுமே ஒரு நாட்டில் உள்ள அனைவருக்குமான வேலைவாய்ப்பை உறுதி செய்து விட முடியாது. இருப்பினும் இதனை அலட்சியப்படுத்துவதற்கும் இல்லை.
புதிய தொழில்களை உருவாக்குவதும்(Creating new and more business), நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதுமே ஒரு நாட்டின் பொருளாதாரத்தை வலுவடைய செய்யும். ஆங்கிலத்தில், ‘Sharing is Caring ‘ என சொல்வதுண்டு. வெறும் நுகர்வோர் கலாச்சாரம் மட்டுமே நம்மை மேம்படுத்தி விட முடியாது. வெகுவாக வளர்ந்து வரும் நுகர்வோர் விகிதத்தை சார்ந்து நமது வேலைவாய்ப்பை அதிகரிப்பதும் நமக்கு நாம் செய்யும் கடமை.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.